முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந் திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட் டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் 90-வது பிறந்த நாளும், மாளவியா 153-வது பிறந்த தினமும் இன்று கொண் டாடப்படுகிறது. இதனை முன் னிட்டு அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இதற்கான அறிவிப்பை குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டார். மரணத் துக்கு பிந்தைய விருதாக பண்டிட் மதன் மோகன் மாளவியாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் பாரத ரத்னா விருது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடி ஆலோசனை நடத்தி னார். அதன் பிறகு வாஜ்பாய், மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தார்.
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள இரு தலைவர்களுமே இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர்கள்.
தேசிய உணர்வாளர் மாளவியா
உத்தரப் பிரதேசத்தில் 1861-ம் ஆண்டு பிறந்த மாளவியா, சுதந்திரப் போராட்டத்தில் தீவிர பங்கு வகித்தார். இந்து தேசிய கொள்கையை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நான்கு முறை பதவி வகித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவி யவர், இந்தியாவில் சாரணர் இயக் கம் நிறுவியர்களில் முக்கியமான வர். வழக்கறிஞரான மாளவியா பத்திரிகை துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளார். 1946-ம் ஆண்டு மறைந்தார்.
50 ஆண்டுகள் எம்.பி.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 வாஜ்பாய் பிறந்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத் தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்த வாஜ்பாய், திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
சுதந்திரப் போராட்ட காலத்தி லும்,நெருக்கடிநிலை காலத்திலும் சிறையில் இருந்துள்ளார். 50 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்துள்ள வாஜ்பாய், 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப் பினராகவும் பதவிவகித்தவர். மொரார்ஜி தேசாய் அமைச் சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்தார்.
1996-ம் ஆண்டு முதல்முறை யாக பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தபோது அதன் பிரதமரானார். அப்போது சில நாட்களிலேயே ஆட்சி கவிழ்ந்தது. 1998-ல் 2-வது முறையாக ஆட்சி அமைத்தபோது சுமார் 13 மாதங்களே ஆட்சியில் தொடர முடிந்தது. 1999-ம் ஆண்டில் 3-வது முறையாக பிரதமராகி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் சாலைப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தை எட்டியது. பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது வாஜ்பாய் ஆட்சியில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சாராமல் அதிக நாட்கள் பிரதமர் பதவியை அலங்கரித்த ஒரே தலைவர் என்ற பெருமையும் வாஜ்பாய்க்கு உண்டு.
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக வாஜ்பாய் உள்ளார். 90 வயதை எட்டியுள்ள அவர் வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார்.
No comments:
Post a Comment