திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், தொடர்புடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2015 மார்ச் 7-ம் தேதிக்குள் விடுபட்ட பதிவை இணையதளத்தில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment