Tuesday, 2 December 2014

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அன்டுலே காலமானார்




ஏ.ஆர்.அன்டுலே| கோப்புப் படம்.










ஏ.ஆர்.அன்டுலே| 
















மகாராஷ்டிரம் முன்னாள் முதல்வர் 
 அப்துல் ரஹ்மான் .அன்டுலே உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 85.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அன்டுலே, மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராக 1962 முதல் 76 வரை அண்டுகள் வரை இருந்துவந்தார். 1980 முதல் 82 வரை மகாராஷ்டிரா முதல்வராக பதவி வகித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் பருவத்தில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக இருந்தார்.
2008-ல் மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தபோது, "இந்து அமைப்புகள் சில தீவிரவாதிகள் தாக்குதலை நடத்திவிட்டு பழியை முஸ்லீம்கள் மீது சுமத்துகிறார்கள்" என்ற கருத்தைக் கூறி பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
அண்மைக் காலமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானர் .

No comments:

Post a Comment