Sunday, 14 December 2014

"விடுமுறை நாளில் ஆதார் அட்டை மையங்கள் செயல்படும்'



திருவாரூர் மாவட்டத்தில் விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் அட்டைப் பெற விண்ணப்பிக்கும் மையங்கள் செயல்படும், மாறாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் 7 வட்ட அலுவலங்கள், 4 நகராட்சி அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு உடற்கூறு மற்றும் விழித்திரை பதிவு செய்து புகைப்படம் எடுக்க நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் மாறாக செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் அட்டைப் பெறாதவர்கள் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட், 2010-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டு ரசீது நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment