Tuesday 31 March 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 31/3/2015

   நமதூர் வடக்குத்தெரு அப்துல் ஹமீது, சர்புதீன்,ஜாகீர் ஹூசேன் இவர்களின் தகப்பனார் சேக்தாவுது அவர்கள்  வஃபாத் ஆகிவிட்டார்கள்.


   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜனாசா 1/4/2015 அன்று மாலை 5மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி: ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


























போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நீடாமங்கலம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெருக்கடியில் நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரத்தை தாண்டும். தாலுகாவின் தலைநகரமாக விளங்கும் நீடாமங்கலத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களும், மத்திய அரசின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வரு கிறது.

இதனால் நீடாமங்கலம் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள ரெயில் நிலையம் தஞ்சாவூர், திருச்சி போன்ற மாநகரங் களுக்கு செல்லும் முக்கியமான வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே வழித்தடம் நாகப்பட்டினம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை யின் குறுக்காக அமைந்து இருப்பது நீடா மங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற் படுவதற்கு முக்கிய காரணம்.

7 மணிநேரம் பாதிப்பு

மன்னார்குடி -மானாமதுரை, காரைக்கால்- திருச்சி, திருச்சி-காரைக்கால் உள்ளிட்ட பயணி கள் ரெயில்கள், மன்னார்குடி-சென்னை, மன் னார்குடி- கோயம்புத்தூர், காரைக்கால்- எர்ணா குளம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாள் தோறும் நீடாமங்கலத்தை கடந்து செல் கின்றன. அதேபோல திருப்பதி எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், கோவா எக்ஸ்பிரஸ் ஆகிய வாராந்திர ரெயில்களும் நீடாமங்கலம் வழியாக செல்லும் முக்கிய ரெயில்கள் ஆகும். சரக்கு ரெயில்களும் நாள்தோறும் நீடாமங்கலத்தை கடந்து செல்கின்றன.

இவ்வாறு ரெயில்கள் செல்வதால் நீடாமங்கலம், ஆதனூர், வையகளத்தூர், கப்பலுடையான், சம்பாவெளி, ஒரத்தூர் ஆகிய இடங்களில் உள்ள ரெயில் கேட்டுகளை அடிக்கடி மூட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறு கிறது.

சுற்றுலா பயணிகள்

திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகப்பட்டி னம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேரா லயம், நவக்கிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல நீடாமங்கலம் மைய பகுதியாக திகழ்வதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படும் போது வாகனங்களில் வரும் சுற்றுலா பயணி களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களை போல பஸ்களில் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி படாதபாடு படுகிறார்கள். பொதுமக்களின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நீடாமங்கலத்தில் பொது கழிவறை வசதியும் போதுமான அளவு இல்லை. இதுவும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ரெயில்வே மேம்பாலம்

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடா மங்கலம் நகரில் மேம்பாலம் கட்ட மாநில அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. அதே நேரத்தில் மத்திய அரசின்ரெயில்வே துறை ரூ.44 கோடியே 95 லட்சம் அனுமதித்தாக தெரிகி றது.

தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்குவதாக அறி வித்ததை தொடர்ந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மேம்பாலம் அமைப் பதற்கான வரைபடங்களை தயாரித்து தென்னக ரெயில்வே கூடுதல் பொதுமேலாளரிடம் காண்பித் தனர். அப்போது நகரின் குடியிருப்பு பகுதிக்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலம் அமைக்கப்படும் என கூடுதல் பொதுமேலாளர் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள் “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவ தும், போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி திணறுவதும் தொடர்கதையாக உள்ளது. ரெயில்வே மேம்பாலம் கட்ட மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதாக கூறினார்கள். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. மேம்பாலம் அமைக்க சில ஆண்டுகளாகும் என்பதால் தற்காலிக போக்குவரத்துக்கு வசதி யாக கீழ்ப்பாலம் அமைப்போம் என கூறினார்கள். எதுவும் நிறைவேறவில்லை.

கிளரியம் பாலம்

நீடாமங்கலம் வடக்கு வீதியில் இருந்து பழைய நீடாமங்கலம் வழியாக கிளரியம் பாலம் வரை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை குறித்து வெளியூர் பயணிகளுக்கு தெரிய வில்லை. இந்த மாற்றுப்பாதை குறித்து விளம்பர பலகையும் நீடாமங்கலத்தில் இல்லை. ரெயில்வே கேட் மூடப்படும்போதும் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலம் நகரில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

மத்திய பல்கலை. கட்டடங்களின் உறுதியை ஆய்வு செய்யக் குழு: துணைவேந்தர் தகவல்



திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்றார் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) த. செங்கதிர்.
பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:


இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கட்டுமானப் பணிகளும், மத்திய பொதுப் பணித் துறை (சிபிடபிள்யுடி) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த விருந்தினர் மாளிகையின் முகப்பு கட்டுமானம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த விபத்து துரதிருஷ்டமானது.


விபத்து குறித்து தொடர்புடைய துறைகளுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மத்திய பொதுப்பணித் துறையிடம் விபத்து குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களின் தரம், உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி நிறுவனங்களின் உதவி கோரப்படும். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதியளித்தால் பல்கலைக்கழக நிர்வாகம் அதை செயல்படுத்தும் என்றார்.


எதிர்பாராதது: மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) பொன். ரவீந்திரன் கூறியது: பல்கலைக்கழகத்துக்கு வரும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் தங்குவதற்கு நகரில் போதிய வீடுகள் இல்லாததால், ரூ. 20 கோடியில் 104 அறைகளுடனான 4 மாடி விருந்தினர் இல்லம் 3 மாதங்களுக்கு முன்பே பல்கலைக்கழக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.


தற்போது இக்கட்டடத்தின் நுழைவு வாயில் முகப்பில் உயர்நிலை போர்டிகோ அமைக்கும் பணியின்போதுதான் விபத்து ஏற்பட்டது. இது எதிர்பாராதது என்றார் ரவீந்திரன்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: 3.9 லட்சம் கணக்குகள் தொடக்கம்


தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், 3.9 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
  பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வ மகள் (சுகன்யா சம்ரித்தி) சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை வாயிலாக செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.

13 ஆயிரம் கணக்குகள்

இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாதத்தில், பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செல்வ மகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் இயங்கும் என அஞ்சல் துறையால் அறிவிக்கும் அளவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்னை மண்டலத்தில் கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 500 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது:
தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்துக்கு, மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில், வழக்கம் போல் சென்னை நகர மண்டலத்துக்குள்பட்ட 20 தலைமை அஞ்சலகங்களும், 55 துணை அஞ்சலகங்களும் செயல்பட்டன.
ரூ.60 கோடிக்கு முதலீடு
இந்த இரு நாள்களிலும் சென்னை நகர மண்டலத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 500 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் இதுவரை சென்னை நகர மண்டலத்தில் 1.65 லட்சம் கணக்குகளும், தமிழக அஞ்சல் வட்டத்தில் 3.9 லட்சம் சேமிப்புக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக ஏறத்தாழ ரூ.60 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையால் நடப்பு நிதியாண்டில் 1 கோடி அளவுக்கு சேமிப்புக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் அளித்து வரும் அபரிமிதமான ஆதரவால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் கூடுதலான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 
திட்டத்தின் சிறப்பு அம்சம்:
 செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்க பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
 10 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில், பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ சேமிப்புக்  கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.
 கணக்கு தொடங்கியதிலிருந்து, 14 ஆண்டுகளுக்குப் பணம் செலுத்த வேண்டும். 21-வது ஆண்டில் கணக்கு முதிர்வடையும். அப்போது கணக்கில் சேர்ந்திருக்கும் பணத்தை அந்தப் பெண் குழந்தையே எடுத்துக் கொள்ளலாம்.
 கணக்கு வைத்துள்ள பெண்ணுக்கு 18 வயது நிரம்பினால், அவரது கல்வி, திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு.
 முதலில் ரூ.1,000 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து ரூ.100 மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
 நிகழ் நிதியாண்டில் 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். தற்போதுள்ள சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் இதுவாகும்.
 இந்த கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.
 உதாரணமாக, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 செலுத்தினால் 14 ஆண்டுகள் நிறைவில் நாம் செலுத்திய ரூ.1.68 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.3.30 லட்சமாக இருக்கும்.
 இந்தக் கணக்கு 21-வது ஆண்டில் நிறைவடையும்போது முதிர்வுத் தொகையாக ரூ.6.07 லட்சம் பெறலாம். இது தோராயமான கணக்கு தான். வட்டி விகிதம், செலுத்தும் தொகை அதிகமாகும்போது முதிர்வுத் தொகையும் பன்மடங்கு அதிகரிக்கும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday 30 March 2015

திருவாரூரில் மத்திய பல்கலை. கட்டுமானம் சரிந்து 5 பேர் பலி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகையின் கான்கிரீட் உத்தரம் இடிந்து விழுந்த பகுதி.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகையின் கான்கிரீட் உத்தரம் இடிந்து விழுந்த பகுதி.



  • திருவாரூரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை கட்டட கட்டுமானப் பணியின்போது முகப்பு வளைவு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

    திருவாரூர்- மயிலாடுதுறை சாலை கங்களாஞ்சேரி அருகே நீலக்குடி, நாகக்குடி ஆகிய இரு கிராமங்களில் 560 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    இதில், பல்கலைக்கழக வளாக கட்டுமானப் பணிகளை மத்திய பொதுப் பணித் துறையினர் (சி.பி.டபிள்யூ.டி.) செய்து வருகின்றனர். ஆந்திரத்தைச் சேர்ந்த டிஇசி என்ற தனியார் கட்டுமான நிறுவனம் விருந்தினர்கள், ஆய்வாளர்கள் மாளிகையை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.

    பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், நாகக்குடி குடியிருப்பு வளாகத்தில் விருந்தினர் மாளிகை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மாடிக்கு கான்கிரீட் தளம் அமைக்க இரும்புக் கம்பிகள் உதவியுடன் இரும்புப் பலகை (சென்ட்ரிங்) அமைக்கும் பணி கடந்த இரு நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சென்ட்ரிங் அமைக்கும் பணியில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, ராஜகண்ணு, அய்யனார் ஆகியோரும் ஒடிஸா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 21 தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, கட்டடத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் உத்தரம் (முகப்பு வளைவு) இடிந்து விழுந்தது. பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆகியோர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கிய மயிலாடுதுறை சின்னசாமி (29), பட்டவர்த்தி குமார் (35), ஒடிஸாவைச் சேர்ந்த சமீர்குமார் செட்டி (26), கிட்டு (26), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்சுபாத் (18) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 16 பேர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தை திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ராமசுப்பிரமணியன், தஞ்சை சரக டிஐஜி சஞ்சய்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
     
    பொறியாளர்கள் உள்பட 4 பேர் கைது
     
    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கட்டுமானம் சரிந்து 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக களப் பொறியாளர்கள் ஆனந்த், அந்தோணி அமல் பிரபு, ஒப்பந்ததாரர் சதீஷ்குமார், மேற்பார்வையாளர் அய்யனார் ஆகிய 4 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாடு முழுவதும் 1.27 கோடி போலி சமையல் எரிவாயு இணைப்புகள் துண்டிப்பு



    இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்களால், நாடு முழுவதும் 1.27 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
    இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
    இதில், மார்ச் 28-ஆம் தேதி நிலவரப்படி 12.2 கோடிப் பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர்.
    போலி சமையல் எரிவாயு இணைப்புகள் மூலம் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, இணையதளம் மூலம் அனைத்து எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
    இதன்மூலம், புதிய எரிவாயு இணைப்பு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நேரடியாக சரிபார்க்கபட்ட பின்னரே புதிய இணைப்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
    இதுதவிர, ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும் எண்ணெய் நிறுவனங்கள் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து வருகின்றன.
    சரிபார்க்கும் பணியின்போது, விண்ணப்பதாரரின் பெயரில் ஏற்கெனவே ஏதேனும் எரிவாயு இணைப்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
    யாருடைய இணைப்பு துண்டிக்கப்படும்?: ஒரே முகவரியில், ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்பு வைத்துள்ளவர்கள், ஒரே முகவரியில் வேறு பெயர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்துள்ளவர்களின் இணைப்புகள் போலி இணைப்புகள் என வரையறுக்கப்பட்டு, அவர்களது இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
    இப்படி போலியான இணைப்பை பெற்றிருப்போரின் இணைப்பைத் துண்டிப்பதற்கு முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவற்றை திருப்பி ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
    மேலும், உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் வசதிக்கான (கே.ஒய்.சி) படிவம் அளித்து தங்களது இணைப்பு போலியானது அல்ல என்று நிரூபிப்பவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    முன்பணம் ரூ.723 கோடி மிச்சம்: நேரடி மானியத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு முன்வைப்புத் தொகையாக ரூ.568 வழங்கப்படுகிறது.
    எனவே, இதுவரை ரத்து செய்யப்பட்ட 1.27 கோடி போலி எரிவாயு இணைப்புகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.723 கோடி முன்வைப்புத் தொகையும், பல கோடி ரூபாய் மானியமும் மிச்சமாகியுள்ளது.
    மேலும், போலி இணைப்புகளை பெற்றிருப்பவர்கள், எரிவாயு உருளைகளை மானிய விலையில் பெற்று, அவற்றை ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்று வருகின்றனர்.
    போலி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதையடுத்து, தற்போது இந்த முறைகேடும் குறைந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
    10-இல் ஒருவர் கூட ஒப்படைப்பதில்லை...
     
    எண்ணெய் நிறுவனங்கள் நோட்டீஸ் அனுப்பிய பின்னரும், போலி இணைப்பு வைத்துள்ளவர்களில் 10-இல் ஒருவர்கூட தானாக முன்வந்து இணைப்பை ஒப்படைப்பதில்லை.
    இதன் காரணமாக, குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு அந்த இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் துண்டிக்கின்றன.
    "இந்தியன் ஆயில்', "இந்துஸ்தான் பெட்ரோலியம்', "பாரத் பெட்ரோலியம்' ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து மார்ச் 1-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 1.27 கோடி போலி எரிவாயு இணைப்புகளை கண்டறியப்பட்டு, அவை துண்டிக்கப்பட்டுள்ளன.
    அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 18.8 லட்சம் போலி இணைப்புகளும், தமிழகத்தைப் பொருத்தவரை 3 லட்சம் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வாறு போலி இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றை ரத்து செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Sunday 29 March 2015

    மத்திய பல்கலைக்கழக கட்டடம் இடிந்து விழுந்தது

    Flash News
    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக
    அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம்
    இடிந்து விழுந்தது. இதில் 5 பேர்
    உயிரிழந்திருக்க கூடும் என
    அஞ்சப்படுகிறது.
    திருவாரூர் மாவட்டம்
    கங்களாஞ்சேரி
    அருகே நாக்குடி கிராமத்தில் உள்ள
    மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள்
    குடியிருப்பு வளாகத்தில் 5 மாடி
    புதிய
    கட்டட கட்டுமானப் பணி நடந்து
    வந்தது.
    இதில் இன்று கான்கீர்ட் போடும்
    பணி
    நடந்த போது கட்டடம் இடிந்து
    விழுந்ததில்
    5 பேர் உயிரிழந்திருக்கக் கூடும்
    என
    அஞ்சப்படுகிறது. மேலும் ஒடிசா
    மாநிலத்தை சேர்ந்த சமீர் குமார்
    ரெட்டி
    என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
    இந்த
    விபத்தில் 18பேர் படுகாயம் அடைந்த
    நிலையில் திருவாரூர் அரசு
    பொது
    மருத்துவமனையில் சிகிச்சைக்காக
    அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Saturday 28 March 2015

    பிளஸ்-2 இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது - மாணவர்கள் கருத்து




    பிளஸ்-2 இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது என்றும், 3 மதிப்பெண்ணுக்கு உரிய 32-நம்பர் கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளது அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தால் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    கடினம்

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பின்னர் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், வேதியியல் தேர்வுகள் நடந்து முடிந்தன. நேற்று இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தேர்வு பகல் 1-15 மணிக்கு முடிவடைந்தது. தேர்வுமுடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் சிலர் கூறியதாவது:-

    இயற்பியல் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. சில கேள்விகள் கடந்த வருடங்களில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளே வந்திருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில் 2, 9, 20, 30 ஆகிய கேள்விகள் பாடத்திற்கு அருகே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளில் இருந்து கேட்கப்படவில்லை. பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. கேள்வி நம்பர் 24 சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருந்தது.

    மொத்தத்தில் இயற்பியல் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. 200-க்கு 200 மதிப்பெண் பெறுவோர் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, அண்ணாநகரைச்சேர்ந்த பிரசாந்த், தண்டையார்பேட்டையைச்சேர்ந்த மாணவி சம்பத் குமார் உள்ளிட்ட பல மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

    தவறாக அச்சிடப்பட்ட கேள்வி

    இயற்பியல் தேர்வில் 32-வது கேள்வி 3 மதிப்பெண்ணுக்கு உரியதாகும். அந்த கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் சிறிய ‘சி’ அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அது பெரிய ‘சி’ என்று இருக்கவேண்டும். தவறாக அச்சிடப்பட்ட அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயன்றிருந்தால் 3 மதிப்பெண் அளிக்கவேண்டும். இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில் ‘ கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இயற்பியல் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படும். அதற்கு பின்னர் தான் இறுதி முடிவு எடுக்க முடியும்’ என்றார்.

    பொருளாதார தேர்வு

    பொருளாதார தேர்வும் நேற்று நடந்தது. அந்த தேர்வில் 20 மதிப்பெண் கேள்வியான 78-ம் நம்பர் கேள்வி பாடப்புத்தகத்தில் இல்லை என்றும் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் மாணவிகள் சிலர் தெரிவித்தனர்.

    கடைசி நாள்கொண்டாட்டம்

    பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படித்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிந்துவிட்டது.

    அதனால் சில மாணவர்கள் அவர்களுக்குள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் கலர் பொடியை நண்பர்கள் முகத்தில் பூசி கொண்டாடினார்கள்.

    Friday 27 March 2015

    ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முழு சந்திரகிரகணம்






    வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முழு சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 3.45 மணிக்கு துவங்கும் சந்திரகிரகணம் இரவு 7.15 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சந்திரகிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே வரிசையில் வரும் போது ஏற்படுவதாகும்.




     இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலம், மற்றும் அந்தமான் தீவுகளில் முழுமையாக பார்க்கலாம் மேலும் இந்தியாவின் ஐஸ்வால், திப்ரூகார்க், இம்பால், இடாநகர், கோஹிமா, போர்ட் பிளேர், ஆகிய இடங்கிளில் முழுமையாக தெரியும்,




     உலகளவில் கிழக்கு ஆசிய பகுதி, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குபகுதி, அண்டார்டிகா, இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இடங்களில் முழுமையாகவும், கிரகணத்தின் இறுதி கட்டத்தை அர்ஜெண்டினா, பிரேசிலின் மேற்குபகுதி, அமெரிக்கா, கனடா நாடுகளின் கிழக்கு பகுதிகளில் காணலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

    மேக்கேதாட்டுவில் அணை கட்ட தடை கோரி தமிழகம் வழக்கு



    காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தது.

    மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 2015-16 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.

    மேக்கேதாட்டுவில் இரண்டு அணைகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    தற்போது அணை கட்டும் திட்டத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது

    ரூ.500 கோடி வரிபாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியல் வெளியீடு மத்திய நேரடி வரி வாரியம் முதல் முறையாக நடவடிக்கை

                     

    ரூ.500 கோடி வரிபாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியலை முதல் முறையாக மத்திய நேரடி வரி வாரியம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


    தீவிர நடவடிக்கை


    இந்தியா முழுவதும் பெரிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இந்த பாக்கியை மத்திய நேரடி வரி வாரியம் வசூலித்து வருகிறது.


    இதில் மொத்தம் ரூ.500 கோடி வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள 18 நிறுவனங்களின் பெயர் பட்டியலை முதல் முறையாக, மத்திய நேரடி வரி வாரியம், இணையதளத்தில் வெளியிட்டது. இதில் 11 நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் செயல்படுபவை ஆகும்.


    இதுகுறித்து வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரூ.10 கோடி மற்றும் அதற்குமேல் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களிடம் இருந்து வரியை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பல நிறுவனங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காக அவர்களின் ‘பான் நம்பர்’ (நிரந்தர கணக்கு எண்) மற்றும் பழைய முகவரிகளை வெளியிட்டுள்ளோம். அந்த நிறுவனங்கள் குறித்து தெரிந்தவர்கள் விவரம் தெரிவிக்கலாம்’ என்றார்.

    வெளியீடு


    இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சில நிறுவனங்களின் பெயர் மற்றும் வரி பாக்கி தொகை விவரம் வருமாறு:–


    கோல்டுசுக் டிரேட் இந்தியா, ஜெய்ப்பூர் ரூ.75.47 கோடி, புளூ இன்பர்மேஷன் டெக்னாலஜி ரூ.75.121 கோடி, சோம்னி சிமெண்டு ரூ.27.47 கோடி, ஆப்பிள்டெக் சொல்யூஷன்ஸ் ரூ.27.07 கோடி.


    ஜூபிடர் பிசினஸ் ரூ.21.31 கோடி, ஹிராக் பயோடெக் ரூ.18.54 கோடி மற்றும் 12 நிறுவனங்களின் பெயர்களும், வரிபாக்கி தொகையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    Thursday 26 March 2015

    ரூ. 650 கோடிக்கு வரிச் சலுகைகள்: புதிய வரிகள் இல்லை




    தமிழக அரசின் 2015} 16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ. 650 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    கொசுவலை, ஏலக்காய், மோட்டார் பம்புகள், செல்லிடப்பேசிகள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிச் சந்தையில் அவற்றின் விலை வெகுவாகக் குறையும்.
    புதிய வரிகள் கிடையாது: மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் குறைந்த வளர்ச்சியே உள்ள போதும், புதிய வரிகள் எதையும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    ஐந்தாவது முறையாக தனது நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்தார், பன்னீர்செல்வம். இந்த அறிக்கையில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக சில முக்கிய வரிச் சலுகைகளை வழங்க அரசு முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
    அதன்படி, வரி விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
    பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையைத் தவிர) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்.
    மீன்பிடி கயிறுகள், மீன்பிடி மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல், மீன்பிடி விளக்குகள், மீன்பிடி திருப்புகை போன்ற மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.
    அனைத்து வகையான கொசு வலைகளுக்கு இப்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.
    நெய்தலுக்கு முன்பாக நூலுக்குப் பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஏலக்காய் மீது இப்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
    மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் (எல்.இ.டி.,) மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.
    மாநிலத்திலுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை ஏற்படவும், காற்றழுத்தக் கருவிகள், 10 குதிரைத் திறன் வரையிலான மோட்டார் பம்புகள், அவற்றின் பாகங்கள் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.
    செல்லிடப்பேசிக்கு வரி குறைப்பு: செல்லிடப்பேசிகள் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். தமிழகத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுடன் சிறப்பாக போட்டியிடுவதை ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும்.
    சி படிவமின்றி நடைபெறும், மாநிலங்களுக்கு இடையேயான பொருள் விற்பனைகளிலும், உள்ளீட்டு வரி வரவை வணிகர்கள் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சி படிவமின்றி பொருள்களின் மீதான மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு கூடுதல் சுமை தவிர்க்கப்படும் என தனது அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
    முக்கிய பிரச்னைகள்: நிதிநிலை அறிக்கையில் ரூ.650 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த போதும், பிரதானத் துறைகளுக்குத் தேவையான நிதி
    ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், புதிதாகத் தொழில் தொடங்குவோர் எளிதாக அனுமதிகளைப் பெறும் வகையில் ஒற்றைச் சாளர முதலீட்டாளர் இணையதளம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், சென்னையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களைத் தொடர்ந்து, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் அத்தகைய திட்டங்கள் ரூ.1,947 கோடியில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
    வேளாண் துறைக்கு அதிக நிதி: முதன்மைத் துறைகள் என்று அழைக்கப்படும் வேளாண்மை போன்ற துறைகளுக்கு கடந்த நிதியாண்டுகளைக் காட்டிலும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.6,613.68 கோடியும், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடியும், நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.8,228.24 கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.8,245.41 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நிதியாண்டில் வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ.4,616.02 கோடி அளவுக்கு வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நிதிநிலை அறிக்கை வருவாய் பற்றாக்குறையைக் கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.211 கோடி அளவுக்கு வருவாய் உபரி ஏற்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது. வணிக வரிகள் உள்பட சில முக்கியத் துறைகளில் வருவாய் அளவு குறைந்ததால் இந்த அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என நிதித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
     
    தமிழக நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்
     
    * கொசு வலைகளுக்கான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் ரத்து.
    * உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி ரத்து.
    * செல்லிடப்பேசிகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.
    * மோட்டார் பம்புகள், பாகங்கள், ஏலக்காய் ஆகியவை மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு.
    * அனைத்து மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களைக் கண்டறியும் வசதி.
    * ராமநாதபுரம், தூத்துக்குடியில் ரூ. 1,947 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள்.
    * நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ள மலைப்பகுதிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கும் வகையில் ரூ.75 கோடியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்.
    * தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம்.
    * உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான 3 சதவீத உள்ளீட்டு வரி ரத்து.
    * மீன்பிடி கயிறுகள், மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல் போன்ற மீன் பிடிப்புக்குப் பயன்படும் துணைப்பொருள்களுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு.
    * எல்இடி விளக்குகளுக்கான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பு.
    * ஏரிகள், அணைக்கட்டுகள், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட நீர்ப்பாசனத் துறை பணிகளுக்காக ரூ.3,727 கோடி நிதி ஒதுக்கீடு.
    * தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.
    * நாட்டிலேயே முதல் முறையாக தரவு ஆய்வு மையம் (டேடா அனலடிக்ஸ் சென்ட்டர்).
    * இலங்கை அகதிகள் நலனுக்காக ரூ.108 கோடி ஒதுக்கீடு.
    * குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 365 கோடி.
    * சென்னை மாநகர வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 500 கோடி
    * திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ. 400 கோடி.
    * ரூ. 1,101 கோடியில் சென்னையில் மழைநீர் வடிகால் பணி.
    * 60,000 பசுமை வீடுகள் கட்ட ரூ. 1,260 கோடி.
    * 6,000 கி.மீ கிராமச் சாலைகள் அமைக்க ரூ. 1,400 கோடி.
    * கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 15 லட்சம் கழிவறைகள்.
    * 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ. 150 கோடி.
    * ரூ.5,500 கோடிக்கு பயிர்க் கடன் வழங்க இலக்கு.
    * உரங்கள் கிடைப்பதை உறுதி செய்திட தமிழ்நாடு கூட்டுறவு இணையத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
     
     
    முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
    (ரூ.கோடியில்)
     
    ஓய்வூதியம் 18,668.
    பள்ளிக் கல்வி 20,936.50
    நெடுஞ்சாலை 8,228.24
    சுகாதாரம் 8,245.41
    மின்சார மானியம் 7,136
    வேளாண்மை 6,613.68
    காவல் துறை 5,568.81
    உணவு மானியம் 5,300
    உயர் கல்வி 3,696.82
    வறுமை ஒழிப்பு 862.40
    மெட்ரோ ரயில் 615.78
    டீசல் மானியம் 500
    இலவச பஸ் பாஸ் 480
     
    வரவு - செலவு (ரூ. கோடியில்)
     
    வருவாய் வரவுகள் 1,42,681.33
    வருவாய் செலவினங்கள் 1,47,297.35
    வருவாய்ப் பற்றாக்குறை (-)4,616.02

    வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டம்: வீடுவீடாக வாக்குச் சாவடி அதிகாரிகள் வருகை

    வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், விவரங்களைச் சேகரிக்கும் பணிக்காக வாக்குச் சாவடி அதிகாரிகள் வீடுவீடாகச் செல்லவுள்ளனர். இந்தத் திட்டம் புதன்கிழமை (மார்ச் 25) முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் (என்.இ.ஆர்.பி.ஏ.பி.) திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி, செல்போன் எண்கள், இ-மெயில் முகவரி ஆகியவை பெறப்பட்டு, வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கப்படும்.
    இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வருகை தர உள்ளனர். புதன்கிழமை (மார்ச் 25) முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வீடுகளுக்கு வந்து அந்த விவரங்களைச் சேகரிப்பார்கள். இந்தப் பணியில் 64 ஆயிரத்து 99 பேர் ஈடுபடுகின்றனர்.

    ஆதார் எண் போன்ற விவரங்களை அவர்களிடம் வழங்குவது மட்டுமல்லாமல், வாக்காளர் விவரப் பதிவில் செய்ய வேண்டிய திருத்தங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் பெயரை நீக்குவது, இடம் மாறிய விவரத்தை தெரிவிப்பது, பெயர் சேர்ப்பது, இறந்தவர் பெயரை நீக்குவது போன்றவற்றுக்கான விண்ணப்பங்களையும் அவர்களிடம் வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கு ஆதாரமான ஆவணங்களையும் அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

    அடுத்ததாக, ஏப்ரல் 12, 26, மே 10, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்படவுள்ளன. மொத்தம் 64 ஆயிரத்து 94 வாக்குச் சாவடிகள் உள்ளன. மேலும் ஏப்ரல் 13-ந் தேதியில் இருந்து மே 31-ந் தேதி வரைக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளிடம், தாலுகா அலுவலகம் போன்ற குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களில், வாரத்தில் இரண்டு நாள்கள் பிற்பகலுக்கு மேல் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கலாம்.

    வாக்குச்சாவடி அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாதவர்கள், சிறப்பு முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட 1,383 கம்ப்யூட்டர் மையங்களுக்குச் சென்றாலும், இதற்கான ஆன்லைன் சேவைகளை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சிறப்புப் பார்வையாளர்கள்: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக 3 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்.
    அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நகரம், ஊரமைப்பு இயக்குநர் கிர்லோஷ் குமார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் தொல்லியல் துறை ஆணையர் டி.கார்த்திகேயன், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் ஆணையர் ஹர்சகாய் மீனா, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூருக்கு வேலை வாய்ப்பு, பயிற்சி இயக்குநர் சி.சமயமூர்த்தி, நாகை, திருவாரூர், தஞ்சாவூருக்கு தமிழ்நாடு சாலைப் பிரிவுத் திட்ட இயக்குநர் அனில் மேஷ்ராம், நாமக்கல், கரூர், திண்டுக்கல்லுக்கு ஆவணக் காப்பகம், வரலாற்று ஆய்வு ஆணையர் எம்.ஏ.சித்திக், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு காதி, கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கா.பாலச்சந்திரன், மதுரை, தேனி, விருதுநகருக்கு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் கே.மணிவாசன், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் ஏ.கார்த்திக் ஆகியோர் சிறப்புப் பார்வையாளராக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Wednesday 25 March 2015

    முத்துபேட்டை அருகே 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது




    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் புதன்கிழமை அதிகாலை 20 கிலோ கடத்தல் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்துவதாக கோவை மத்திய வருவாய் நுண்ணறிவு புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தையடுத்து போலீஸார் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு வரி அதிகாிக்கப்பட்டதால் கடந்த ஓராண்டாக கட ல் மார்க்கமாகவும், விமானம் மூலமும் அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினா் கடும் சோதனை செய்து கடத்தப்பட்டும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் கோடியக்கரை ஆகிய பகுதி களில் கடல் மார்க்கத்தை பயன்படுத்தி கடந்த ஓராண்டில் 10-க்கும் மேற்பட்ட முறை 500 கிலோக்கு மேல் தங்கம் பிடிபட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக கோவை மத்திய வருவாய் நுண்ணறிவு புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலி ன்படி புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா.

    அப்போது முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, காருக்குள் 21 கிலோ தங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்ட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 பே ரை கைது செய்து திருவாரூர் குமரன்கோயில் தெருவிலுள்ள மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் அலுவலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகிறன்றனா். தங்கம் கடத்தியவா்கள் சுதாகரன் என்பவர் உள்ளிட்ட இருவர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் முழு விவரம் போலீஸாரின் விசாரனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.

    நன்றி 
    தின மணி 

    மோடி, 29-ந் தேதி சிங்கப்பூர் செல்கிறார்; லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்

    மறைந்த சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறார்.

    காலமானார்

    சிங்கப்பூரின் முதலாவது பிரதமரான லீ குவான் யூ நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    குட்டித்தீவாக இருந்த சிங்கப்பூரை உலகமே வியக்கும் வண்ணம், சொர்க்கபுரியாக மாற்றிக்காட்டியவர்,லீ குவான் யூ ஆவார். அவர் 31 ஆண்டுகள், சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். தனது அளப்பரிய முயற்சியால், சிங்கப்பூரை தொழில் வளத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற செய்தார். இதனால், உலக தலைவர்கள் பலரின் மனம் கவர்ந்த தலைவராக உருவெடுத்தார்.

    அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டுத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி பங்கேற்கிறார்

    லீ குவான் யூவின் இறுதிச்சடங்குகள், 29-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு சென்று, இறுதிச்சடங்கில் நேரில் கலந்து கொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.

    லீ குவான் யூ மறைவுக்கு பிரதமர் மோடி ஏற்கனவே இரங்கல் செய்தியும் வெளியிட்டுள்ளார்.

    தூதரகங்களில் அஞ்சலி

    இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களில் லீ குவான் யூ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வுக்கான சிங்கப்பூரின் நிரந்தர தூதரகத்திலும் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    இதுபோல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் லீ குவான் யூ மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி கையெழுத்திட்டார்.

    திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

    திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    திருவாரூரில் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:

    அசோகன் (திமுக): நகர் பகுதிகளில் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை.

    டி. செந்தில் (திமுக): நகரில் ஆக்கிரமிப்புகள் கண்துடைப்புக்காக அகற்றப்படுகிறது. திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றியப் பகுதிகளில் உடனடியாக அங்கு தரைக்கடைகள் போடப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எம். சம்பத் (காங்கிரஸ்): புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் உள்ளது. தற்போது எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை. பணிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஆர்.டி. மூர்த்தி (அதிமுக): நகரில் குப்பைகள் அகற்றுவது குறித்து வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. நகரிலுள்ள வார்டுகளில் குப்பைகள் அகற்ற ஒரு வரையறை செய்ய வேண்டும்.

    வே. ரவிச்சந்திரன் (தலைவர்): நகரில் குப்பைகள் சுத்தம் செய்வது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    துப்புரவு பணியாளர்களின் கோரிக்கை ஏற்க மறுப்பு: கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அண்ணா துப்புரவுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் தொழிலாளர்கள், துப்புரவுப் பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், கூடுதல் பணிச்சுமை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் பணப்பயன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்க வந்தனர். அப்போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி வருகிற 28-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பஸ்-ரெயில் மறியல்

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பஸ்-ரெயில் மறியல் செய்வது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டம்

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னையில் அனைத்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்தவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி மாநிலம்தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அனைத்து கட்சி கூட்டம்

    சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமணி தலைமை தாங்கினார். இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் கலந்து கொண்டு பேசினார்.

    நாம் தமிழர் கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர்¢ சந்திரசேகரன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மனித நேய கட்சி நிர்வாகி சீனிஜெகபர்சாதிக், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி மதிவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மகேந்திரன், தே.மு.தி.க. நகர செயலாளர் செந்தில், வர்த்தக நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பஸ்-ரெயில் மறியல்

    முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நாளில் பஸ், ரெயில் மறியல் செய்வது. அனைத்து கட்சி பிரமுகர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து திருவாரூரில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. காவிரியில் தமிழகத்திற்கு உண்டான உரிமையை மீட்பதற்காக நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுகொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Tuesday 24 March 2015

    திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி


                   
    திருவாரூர் மாவட்டத்தில் நிரந்தர மையங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆதார் அட்டை

    திருவாரூர் மாவட்ட கலெக் டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு பதிவேட்டினை அடிப்படையாக கொண்டு ஆதார் அட்டைக்கு புகைப் படம் எடுத்தல், உடற்கூறு பதிவு செய்தல் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணிக் காக திருவாரூர் மாவட்டத் தில் திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி ஆகிய தாசில்தார் அலுவலகங்களி லும், திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத் துறைப் பூண்டி ஆகிய 4 நகராட்சி அலுவலகங்களிலும் நிரந்தர மையங்கள் அமைக்கப் பட்டுள் ளன. திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளம் அறை எண். 47-லும் நிரந்தர மையம் செயல்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னர் கிராமங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களில் நடத்தப்பட்ட முதல் சுற்று மற்றும் 2-ம் சுற்று முகாம்களில் உடற்கூறு பதிவு செய்யாதவர்கள், புகைப்படம் எடுக்காதவர்கள் நிரந்தர மையங்களில் அதை செய்து கொள்ளலாம்.

    எடுத்து செல்ல வேண்டியவை

    நிரந்தர மையங் களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, கடவு சீட்டு (பாஸ்போர்ட்), 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ரசீது நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

    ஆதார் அட்டை பணி களுக்காக தாலுகா அளவில் துணை தாசில்தார்கள், நக ராட்சி அலுவலகங்களில் அலுவலக மேலாளர் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு செயலாக்க திட்டம் தனி துணை கலெக்டர் ஆகியோர் தொடர்பு அதிகாரிகளாக நிய மனம் செய்யப்பட் டுள் ளனர். அரசின் அனைத்து திட்டங் களுக்கும் ஆதார் அட்டை இன்றியமையாத ஆவணமாக பயன்படுத்தப்படு வதால் இதுவரை ஆதார் அட்டைக்கு பதிவு செய்யா தவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண் டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது


    திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதிரடி சோதனை

    திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலர் உரிமம் இன்றி ஆங்கில முறைப்படி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் சுமதி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன், வட்டார மருத்துவ அதிகாரி மகேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஜெயந்தி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், கடைவீதிகள், கிளீனிக்குகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    திருவாரூரை அடுத்த மாங்குடி பகுதியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் உரிய அனுமதி இன்றி பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்து தகவல் அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    3 பேர் கைது

    போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்ததாக திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் (வயது43) என்பவரும், கூடூரில் கலியபெருமாள் (70) என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைப்போல மன்னார்குடி சாலை விளமலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சித்தா முறை மருத்துவம் என்று கூறி, விளமலை சேர்ந்த பக்கிரிசாமி (வயது65) என்பவர் ஆங்கில முறையில் மருத்துவம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து சீட்டுகளை பறிமுதல் செய்தனர். திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போலி டாக்டர்களாக பணியாற்றி வந்த ராஜ்மோகன், கலியபெருமாள், பக்கிரிசாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மோகனசுந்தரம் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

    பொதுமக்கள் குறை களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளதாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல் வர் மீனாட்சிசுந்தரம் கூறி னார்.

    புகார் பெட்டிகள்

    திருவாரூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கவும், வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக 3 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன மருத்துவ கருவிகளும் புதிதாக பொருத்தப்பட் டுள்ளன.

    இது தொடர்பாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் அனைத் தும் முழுவீச்சில் நிறைவேற் றப்பட்டு வருகின்றன. மருத்து வமனையை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளுக்கு உடனுக்குடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மருத் துவம் பார்க்கப்படுகிறது.

    அறுவை சிகிச்சைகள்

    கடந்த மாதம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திருவாரூர் மருத்துவமனையிலேயே டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள். அதேபோல ரத்தம் தொடர்பான நோய் களால் பாதிக்கப்பட்டிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப் பட்டது. தனியார் மருத்துவ மனையில் ரூ.3½ லட்சம் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சை இலவசமாக மருத் துவக்கல்லூரியில் பார்க்கப் பட்டது. உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதி களும் தயார் நிலையில் உள்ளன.

    நவீன கருவிகள்

    நவீன இ.சி.ஜி., செயற்கை சுவாச கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள் அடங்கிய கருவிகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டு பிடிக்கும் கருவி, காது அகநோக்கி உள்ளிட்ட கருவிகள் மருத்துவமனையில் பொருத் தப்பட்டுள்ளன.

    மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் எழுத்து மூலமாக தெரிவிப் பதற்கு வசதியாக நுழைவாயில், முதல்வர் அலுவலகம், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் புகார் பெட்டிகள் புதிதாக வைக்கப் பட்டுள்ளன. இந்த புகார் பெட்டிகள் மூலமாக பொது மக்கள் தங்கள் புகார்களை, கோரிக்கைகளை, ஆலோசனைகளை தெரிவிக் கலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


                   
    திருவாரூர் நகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இடையூறு

    திருவாரூர் நகரில் கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் தரை கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்பட்டன. இதனால் நகர பகுதிக்குள் வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளின் நடமாட்டத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

    நகரசபை கூட்டங்களின்போது நகர மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அதை உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும் என திருவாரூர் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக ஈடுபட்டது.

    அகற்றம்

    இதில் திருவாரூர் பஸ்நிலையத்தில் தொடங்கி கடைவீதி வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு முன்பாக சில வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தங்கள் கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். சில கடைகள் முன்பாக சிமெண்டு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை நகராட்சி பணியாளர்கள் நேற்று பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் உடைத்தனர். அதேபோல நடை பாதை கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.

    நகராட்சியின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆக்கிரமிப்பை அகற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சடங்கு போல ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற ஆண்டுதோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் கடைகாரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கொள்கிறார்கள். எனவே மாதத்திற்கு 2 முறையாவது ஆய்வு நடத்தி, உடனுக்குடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறையும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

    ஞாபக சக்தி அதிகரிக்க

     

      ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
      வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
      மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.
      பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
      பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
      பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி கூடும்.
      செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.
      முளைக்கீரையுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
      துளசி இலையை தினசரி சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.
      தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் ஞாபகசக்தி பெருகும்.

    வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ பிரிவு சட்டம் செல்லாது: சுப்ரீம் கோர்ட்

    சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

    அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும்.இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை.அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 66-ஏ பிரிவு செல்லாது. வலைதளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதற்காகவே ஒருவரை கைது செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என்று அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது.

    Monday 23 March 2015

    ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

    .
    கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் 
    ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தேர்தல் 2015

    மாற்றி அமைக்கப்பட்ட சட்ட பரிபாலன முறையில் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும் . நாட்டாண்மை முறை மாற்றப்பட்டு தலைவர் பதவி ஏற்படுதபட்டது . 
        மகாஜன சபை கூட்டம் பொறுப்பு விலகும் தலைவர் ரபீயுதீன் தலைமையில் 2015 மார்ச் 22 ஆம் நாள் அன்று
    நடைபெற்றது . புதிய நிருவாகிகள் தேர்தல்  நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூர் வக்ப் வாரிய கண்காணிப்பாளர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு முறையாக நடைபெற்றது.  இதில்




    தலைவர்


    ஜெயம் தெரு ஜலாலுதீன்



    செயலாளர்        

    தெற்கு தெரு ஹாஜா நஜூபுதீன்









    துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு )

    தெற்கு தெரு ஜபரூதீன்







    பொருளாளர்   
    பர்மா தெரு கீ.வா.மு.அ சலாவுதீன்








    ஆடிட்டர்

    நடுத்தெரு மு அ அப்துல் பத்தாஹ்







    52 பணப்பகுதி பொருளாளர

    தெற்கு தெரு முஹம்மது  மெய்தீன்






    தீனா ஹாஜி இப்ராஹிம்சா  ராவுத்தர் தர்ம அறக்கட்டளை 
     அடிசனல் ட்ரஸ்ட்


    புதுமனைத்தெரு செ மு மு அப்துல் ஹமீது

    ஆகியோர் நிருவாக சபைக்கு தேர்த டுக்கபட்டனர் 


    மொத்தம் பிரதிநிதிகள் = 21


    தெரு தொகுதியில்  வெற்றி பெற்றவர்கள்  விபரம் 

    மேலத்தெரு  
            
           அப்பாகனி@முஹம்மது இஸ்மாயில்
            முஹம்மது ஆதம்


    பர்மா தெரு


    முஹம்மது  சலாவுதீன்

       
    முஹம்மது  ஜெகபர்



    பள்ளிவாசல் தெரு 
           
           முஹம்மது இனயதுல்லாஹ் (மஸ்தான் )



    தெற்கு தெரு
         
             பஜலுதீன்
           ஜகபரூதீன்
            முஹம்மது  மெய்தீன்
             ஹாஜா நஜூபுதீன்



    நடுத்தெரு 
           ப மு மு ஹபிபுல்லாஹ் 
           மு அ  அப்துல் பத்தாஹ்
           முஹம்மது  அலி
            முஹம்மது அன்சாரி
             ஜாகிர் ஹூசேன்








    வடக்கு தெரு

    முஹம்மது அலி

    குலாம் ரசூல் 

    புதுமனைத் தெரு 


    செ மு மு அப்துல் ஹமீது

    மலாயாத் தெரு 


    R S அமாணுல்லாஹ்

    ஜெயம் தெரு 

      M M ஜலாலுதீன்

    நூர்தீன்



    இதில் ஜமாத்தார்கள் பெருஅளவில் கலந்து கொண்டனர் .







































    ஜெயம்தெரு 






       புதிய நிர்வாகம் வரும் 2012  மார்ச் 4 ஆம் தேதி ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று பொறுப்புகளை 
         
    நாட்டாண்மை

    செயலாளர்
    பெருளாளர்

    தணிக்கையாளர்

    52 பணப்பகுதி காசாளர்

    தீனா இப்ராஹிம்சா  ராவுத்தர் தர்ம அறக்கட்டளை 
                                                             உறுப்பினர் 









    -

    Saturday 21 March 2015

    குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



     
    2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.

    மாணவ/மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படும்.
    தமிழ் நாட்டைச் சார்ந்த அனைத்து மாணக்கர்களும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள் ஆவர். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    தகுதிபெற்ற மாணக்கர்கள் இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்  ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மத்திய தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் தகுதி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, இப்பயிற்சி மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும், நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு, புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000/- வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு வருகிறது.
     
    2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதன்மை தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் பற்றி விவரம் இப்பயிற்சிமைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
     
    முதல்வர்,
    அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம்,
    சென்னை-28.
    தொலைபேசி எண். 044-24621475.

    Friday 20 March 2015

    BSNL - பாரத் சஞ்சார் சேவைகள் நிறுவனத்தில் 5842 பணியிடங்கள்



    நமது நாட்டில் லாப நோக்கமில்லாமல் கிராமப்புறங்களில்கூட தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவருவது பாரத் சஞ்சார் சேவைகள் (பிஎஸ்எல்). நிறுவனம்தான்.
    இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5842  Supervisor, Security Officer, Field Officer, Clerk, Security Commander, Soldier, Watchman, Computer Operator, Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுண் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காலியிடங்கள்: 5842
    நிறுவனம்: Bharat Sanchar Services (BSS)
    துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
    1. Security Officer - 322
    2. Field Officer - 250
    3. Clerk - 230
    4. Supervisor - 1500
    5. Security Commander - 750
    6. Soldier - 850
    7. Night Watchman - 1200
    8. Computer Operator - 190
    9. Peon - 550

    தகுதிகள்: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.


    சம்பளம்:
    Security Officer பணிக்கு மாதம் ரூ.  7001 – 15500
    Field Officer பணிக்கு மாதம் ரூ.6950 – 14500
    Clerk பணிக்கு மாதம் ரூ.6850 – 14200
    Supervisor பணிக்கு மாதம் ரூ.6550 – 13500.
    Security Commander பணிக்கு மாதம் ரூ. 6150 – 13500
    Soldier பணிக்கு மாதம் ரூ. 5850 – 12500
    Night Watchman பணிக்கு மாதம் ரூ. 4550 – 9200
    Computer Operator பணிக்கு மாதம் ரூ. 6650 – 13900
    Peon பணிக்கு மாதம் ரூ. 4900 – 9800.
    தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
    :
    Secretary, Bharat Services,
    Bocha Chak, Janipur Road,
    Phulvari Sharif, Patna – 801 505


    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015
    மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bssindia.co.in/pdf/Bharat%20Sanchar%20Service.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

    ரேஷன் பொருட்கள் குறைபாடு இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் : அமைச்சர் காமராஜ்



    தமிழ்நாடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், 20.03.2015 இன்று சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
    இன்று வரை 11 இலட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 738 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அமைச்சர் இரா. காமராஜ் தெரிவித்தார்.
    அமைச்சர் புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
    போலி குடும்ப அட்டைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொண்டு, நியாயவிலைக் கடைகள் வேலை நேரத்தில் திறக்கப்பட்டு விநியோகம் சீரான முறையில் நடைபெறுவதையும், பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலிருந்து, நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படும் லாரிகள், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே நகர்வு செய்யப்பட்டு, அரிசி மூட்டைகளின் எடையை துல்லியமாக குறிப்பிட்டு, அங்காடிகளுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
    பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், ஜுன் 2011 முதல் மார்ச் 2015 வரையிலான காலத்தில் 3 இலட்சத்து 42 ஆயிரத்து 482 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 629 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள 15 ஆயிரத்து 853 மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
    பொது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான்.
    நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடுகள் குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தீர்வு காண, மாநில நுகர்வோர் சேவை மையத்தினை 044 – 28 59 28 28 என்ற தொலைபேசி எண்ணிலும், consumer@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும் கீழ்க்கண்ட கைபேசி எண்களில் குறுஞ்செய்திகளும் அனுப்பலாம் 72999 8002, 86800 18002,  86800 28003  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thursday 19 March 2015

    திருவாரூரில் பாதுகாப்பு ஒத்திகை

    கடலோரரக் கிராமங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்படும் "ஆம்லா ஒத்திகை' , திருவாரூரில் புதன்கிழமை தொடங்கியது.


    கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் வகையிலும், இந்த ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் புதன் மற்றும் வியாழக்கிழமையில், திருவாரூர் மாவட்டங்களில் ஒத்திகை ஆம்லா நடைபெறுகிறது


    திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு காவல்துறையினர் சென்று ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். தவிர திருவாரூர் தியாகராஜர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், முத்துப்பேட்டை தர்கா, தேவாலயம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம், ஓஎன்ஜிசி நிறுவனம், மின் நிறுவனம், எரிவாயு சேமிப்பு கிடங்கு என முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள், 10 ஆய்வாளர்கள், 250 காவல்துறையினர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில்19,292 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்

    தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 19,292 மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகின்றனர்


    .
    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் என மாவட்டம் முழுவதும் 57 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 9,449 மாணவர்கள், 9,843 மாணவிகள் என மொத்தம் 19,292 பேர் தேர்வு எழுதுகின்றனர். கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    Saturday 14 March 2015

    திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்


    திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் குறித்த முன்னேற்பாடு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    நம் உடல்நலம் பேணுகின்ற குடிநீரின் தன்மையில் காணும் பாதிப்பை பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதித்து அவர்கள் பருகும் நீரின் தன்மையை உணர்த்த குடிநீர் விழிப்புணர்வு வாரம் என்ற முகாம் நடத்தப்பட உள்ளது.

    பொதுமக்களுக்கு குடிநீரின் தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தரமற்ற குடிநீரால் பரவக்கூடிய நோய்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக ஒன்றிய அளவில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெறவுள்ளது.

    குடிநீரை பரிசோதனை செய்வதற்குத் தேவையான நீர் தர பரிசோதனைப் பெட்டிகள் குடிநீர் வடிகால் வாரியத்தால் இலவசமாக அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பெட்டியை கையாளும் முறைதிருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்யை ஊராட்சிக்கு 2 ஆசிரியர்கள் என தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த குடிநீர் பாதுகாப்பு வார முகாமில் மாவட்டத்தில் சுமார் 10,640 நீர் மாதிரிகள் பரிசோதி க்கப்படவுள்ளன. இதேபோல், ஆண்டுக்கு இருமுறை குடிநீர் பாதுகாப்பு வாரம் நடத்தி விவரங்கள் அறிக்கையாக தொகுக்கப்பட்டு குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்று நீராதார ஏற்பாடுகள் செய்வதற்கும், புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவதற்கும் இந்த குடிநீர் விழிப்புணர்வு வாரம் வழிவகுக்கும் என்றார் மதிவாணன்.

    கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமநாதன், உதவி செயற் பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thursday 12 March 2015

    திருவாரூர் மருத்துவகல்லூரி


    திருவாரூர் அரசு மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை
    திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையளிக்கப்பட்டது.

    திருவாரூர் அருகே தீபங்குடியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (57). மஞ்சள் காமாலை மற்றும் வயிற்று வலி காரணமாக பிப்.4-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சந்திரசேகரன், ஆனந்த், முருகதாஸ், மயக்கவியல் பேராசிரியர் சந்திரசேகரன், மருந்துவர் ராஜா, செவிலியர் சாந்தி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

    6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் பாராட்டினார். இதையடுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த செல்வராஜ் மார்ச் 1-ம் தேதி அன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறை என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம்.

    Wednesday 11 March 2015

    ஜமாஅத் தேர் தல் மனு தாக்கல் துவக்கம்

    நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் பிரதிநிதிகள் தேர் தல் வரும் ஞாயிறு 15/03/2015 அன்று மத்லபுல் கைராத் பள்ளி வாக்குசாவடியில் வாக்களிக்கலாம் இதற்கான மனுதாக்கல் இன்று வக்ப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலயைில் துவங்கியது

    சென்னை பேருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிய தனிக் குழு


    சென்னையில் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கும் வகையில், தேவை அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிய தனி அதிகாரிகள் குழுவை அமைத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

    இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளுக்கு "கட் சர்வீஸ்' பேருந்து சேவையை அதிகரித்திருப்பதோடு, முக்கிய இடங்களுக்கு பேருந்து சேவை எண்ணிக்கையையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் அதிகரித்துள்ளது. இதில் "கட் சர்வீஸ்' பேருந்துகள் அதிகரித்திருப்பது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் கூட்டு ரோடு பகுதிக்குச் செல்ல முன்னர் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது பேருந்து சேவை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

    இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

    பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. பேருந்து தேவை அதிகம் உள்ள பகுதிகளை அறிய நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, தனி அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளோம்.

    இதுபோல், பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு முக்கியப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பயணிகள், பல்வேறு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்