Saturday, 31 May 2014

Kodikkalpalayam - முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அழகிய தோற்றம்

   புனித ரமலான் வர இன்ஷா அல்லா ஒரு மாதம் காலமே பாக்கி இருப்பதால் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் புதிய வண்ணத்தில் அழகிய தோற்றம்

பெருமைப்பட ஒன்றுமில்லை!
மக்களவைத் தேர்தல் முடிவுகளைவிட எதிர்பாராதது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள். தமிழ் மொழிப்பாடம் படித்து அரசு தரவரிசையில் இடம் பெறுபவர்களில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெறுவோர் 19 மாணவர்கள், 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தில் 125 மாணவர்கள்; 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தில் 321 மாணவர்கள். இது நீங்கலாக, சம்ஸ்கிருதம், பிரெஞ்சு படித்து, அரசுப் பட்டியலுக்கு அப்பால் 500க்கு 500 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மூன்று பேர்.

இந்த மதிப்பெண்கள், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்றாலும், இது மேலதிகமாகத் திகட்டுகிறது. இந்தச் சாதனை, அடுத்து இவர்கள் பயணிக்க இருக்கும் போட்டி உலகில் கை கொடுக்காது என்பதால், சாதித்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவதைவிட இந்த மாணவச் செல்வங்கள் மீது ஒருவிதப் பரிதாபமே மிஞ்சுகிறது.

துல்லியமாக விடைதிருத்தும் ஆசிரியர்கள் 3 மதிப்பெண் கேள்விக்கான பதிலை மூன்று பகுதியாக பிரித்து, மூன்று மதிப்பெண் ஒதுக்குகிறார்கள். அசோகர் பற்றி குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, 1. அசோகர் கலிங்க மன்னர், 2. பெளத்தமதம் தழுவினார், 3. அறம் வளர்த்தார் என்று மூன்று விஷயங்கள் (பாயின்ட்) எழுதப்பட்டு இருந்தால் தலா ஒரு மதிப்பெண் வழங்கலாம் என்கிறது விடைத்தாள் மதிப்பீடு வழிகாட்டி. விடைத்தாள் திருத்தும் ஆசிரியரும் ஒரு பிழைகாட்டி மென்பொருள் போலத்தான் செயல்படுகிறார். மன்னர், பௌத்தம், அறம் என்ற மூன்று வார்த்தைகளைத் தேடி, மூன்று மதிப்பெண் வழங்குகிறார். இதற்கு மேலாக மாணவனின் விவரமான கருத்துப்பதிவு, சொல்வளம், அழகான கையெழுத்து எதுவுமே அவருக்கு முக்கியமல்ல. இத்தகைய இயந்திர மதிப்பீட்டில் நிச்சயமாக 500க்கு 500 சாத்தியமே! ஆனால் இதில் பெருமை பேசிட ஏதுமில்லை.

அண்மையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது, ஆங்கிலத்தில் ஒரு மாணவி 199 மதிப்பெண் பெற்றதை ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்பின. மொழித்தாளில் கட்டுரைக்கும் மற்றொரு வினாவுக்கும் அதிகபட்சம் 9 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கிட, விடை திருத்தக் குறிப்பேடு வழிகாட்டுகிறது. அந்தவகையில் எவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தாலும் மொழிப்பாடத்தில் 198 மதிப்பெண்கள் மட்டுமே வழங்க முடியும். எப்படி இந்த மாணவிக்கு 199 வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இப்போது 500க்கு 500 மதிப்பெண் கிடைக்கும்போது அத்தகைய கேள்விகள் எல்லாமும் அர்த்தமற்றவையாகிப் போகின்றன.

பத்தாம் வகுப்புத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியரிடம் காணப்படும் தன்னம்பிக்கையும், வருங்காலம் பற்றிய தெளிவான சிந்தனையும், இந்த மதிப்பெண்களைப் பெறுவதற்காக அவர்கள் முன்வைத்த உழைப்பும் பேருவகையும், பெருமிதமும் கொள்ள வைக்கின்றன. இந்த வெற்றிக்குக் காரணமான பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவிப்பதைக் கேட்கும்போது அடுத்த தலைமுறை முற்றிலுமாக அடிப்படை மனிதப் பண்புகளை இழந்துவிடவில்லை என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

அதே நேரத்தில் பிளஸ் டூ முடித்துவிட்டுப் பல்கலைக்கழக அளவிலும், பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அரங்கத்திலும் இவர்கள் அடியெடுத்து வைக்கும்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவ - மாணவியருடன் இவர்களால் போட்டி போட முடியுமா என்கிற கேள்வி நம்மை பயமுறுத்துகிறது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். மதிப்பெண் அடிப்படையில் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் இவர்கள் இடம் பெற்றாலும்கூட, அங்கே ஏனைய மாணவர்களுடன் போட்டிபோட முடியாமலும், செமஸ்டருக்கு செமஸ்டர் நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமலும் பரிதவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. அகில இந்தியத் தேர்வுகளில் இவர்களில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற முடிவதில்லை.

மதிப்பெண்களை வாரி வழங்கி 90.7 விழுக்காடு தேர்ச்சி விகிதம் காட்டுவது மட்டுமே பள்ளிக் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்காது. அந்த மாணவ - மாணவியரின் கல்வித் தரத்தில்தான் பெருமை இருக்கிறது.
மனப்பாடம் செய்வது மதிப்பெண்கள் பெறுவது என்கிற நிலைமை தொடர்வது தமிழகத்தின் வருங்காலத்தையே பாழ்படுத்தி விடும். தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தியாக வேண்டிய தருணம் இது.

நம்ம ஊர் வாக்கு சாவடியில் யாருக்கு ஓட்டு அதிகம் ?

        

நடந்து  முடிந்த 2014  நாகை தொகுதி  எம் பி தேர்தலில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொடிக்கால் பாளையம் வாக்குச்சாவடி களில்

 பதிவான  மொத்த  வாக்குகள்  விபரம் :
105  - 530
106  - 498
107 -   373
108  - 698

ஆக  கூடுதல் 2099 வாக்குகள்


இதில் நமதூர் அரசு மேல்நிலை ப்பள்ளி  மற்றும் நகராட்சி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மட்டும் கணக்கில் கொள்ள படுகிறது .

 
 

திமுக               1439

அதிமுக            476

இ .கம்யூ             78

காங்                      46

பாமக                    16

நோட்டா              38

ஆக திமுக வேட்பாளருக்கு  963 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார் .திருவாரூர் தொகுதியில் மட்டும்  தான் சுமார்  1842 வாக்குகள் முன்னிலை பெற்றது  திமுக  குறிபிடத்தக்கவை .

பின் குறிப்பு : அதிமுக வேட்பாளர் டாக்டர் கே கோபால் சுமார் 106079 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் விஜயனை தோற்கடித்தார் .


 

Friday, 30 May 2014

விடைபெற்றார் திருவாரூர் ஆட்சியர் நடராசன்


திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றி தற்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சி. நடராசன், வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று உருக்கமாகப் பேசி விடைபெற்றார்.

1.2.2012 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சி. நடராசன் பொறுப்பேற்றார். 2 ஆண்டு 3 மாதங்கள் பணியாற்றிய இவர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று புதன்கிழமை அறிவிப்பு வெளியானது. இதை யடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்தார்.

அப்போது விவசாயிகள் முன்னிலையில், தினசரி நாளிதழ்கள் வராத ராமநாதபுரம் மா வட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அப்போது பெற்றோர்கள் எனக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கைக் கொடுத்தார்கள். வறட்சி மாவட்டத்தில் வளர்ந்த எனக்கு திருவாரூர் மாவட்டம் என்றதும் நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

இங்கு வந்து பார்த்ததும் ஒருவித அச்சம் ஏற்பட்டது. காவிரி இல்லையென்றால் திரு வாரூர் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம்தான். திருநெல்வேலியில் இரு மாதம் ஆட்சியராகப் பணியாற்றி, சென்னையில் 6 மாதப் பணிக்குப் பிறகு திருவாரூர் மாவட்டத்து க்கு வந்தேன். அப்போது நண்பர்களெல்லாம் திருவாரூரில் சாதித்துக்காட்டு என்றார்கள்.


விவசாயிகள் கோரிக்கை வைத்ததால் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது கலெக்டர் நடராஜன் வந்து பேசினார். மாற்றம் என்பது அனைவருக்கும் சகஜம்தான். இதை நானும் எதிர்பார்த்து கொண்டு தான் இருந்தேன். விவசாயிகளின் கடைசி கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென விரும்பி வந்துள்ளேன். எனது பணி காலத்தில் சில நேரங்களில் உங்களிடம் கோபமாக நடந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் நீர் செறிவூட்டல் திட்டத்தால் வரும் 400 முதல் 500 ஆண்டுகள் வரை குடிநீர் பஞ்சம் இருக்காது என்று நம்புகிறேன். உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வையுங்கள். எங்கிருந்தாலும் இந்த மாவட்டத்தை பற்றி நினைத்து கொண்டு தான் இருப்பேன் என்றார். கண் கலங்கியவாறு கலெக்டர் நடராஜன் பேசிய பேச்சை கேட்ட விவசாயிகளும் கலங்கினர்.

மண்ணையும், விவசாயத்தையும் நேசித்த நான், திருவாரூர் மாவட்ட மக்கள் தண்ணீருக்காக பிற மாவட்டங்களுக்கு எங்கும் செல்லக்கூடாது. தலைமுறைக்கு தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க வேண்டுமென்று யோசித்து, நண்பர் ஒருவரின் ஆலோசனையின்படி நீர்செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

திட்டம் தொடங்கிய இரு ஆண்டில் அதன்பயன் கிடைத்ததன் எடுத்துக்காட்டாக மாநிலத்தில் பிற மாவட்டங்களில் இல்லாத வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீ ர்மட்டம் உயர்ந்திருந்தது. இது பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. தமிழக முதல்வர் சிறப்புத் திட்டங்களுக்கான விருது எனக்கு அளித்தது மகிழ்ச்சிக்குரியது. பணியாற்றியக் காலத்தில் விவசாயிகள் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் இனம் புரியாத பாசத்தை வெளிப்படுத்தினார்கள். அதற்கு நன்றி என்று உருக்கமாகப் பேசி அனைவரிடமிருந்து விடைபெற்றார் நடராசன்.

முதன்முறையாக டில்லியில் தரையிறங்கியது ஏ380 ரக விமானம் 

 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான ஏர்பஸ்380 ரக விமானம் டில்லியில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 471 பேர் பயணம் செய்யலாம். உலகில் அதிக பயணிகள் பயணம் செய்யும் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் 12 ஆடம்பர அறைகள், 60 பிசினஸ் மற்றும் 399 எகானமிக் கிளாஸ் சீட்கள் உள்ளன. இந்த விமானத்திற்கு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த விமானத்தில் எகானமிக் கிளாஸ் பிரிவு டிக்கெட் விலை ரூ.30 ஆயிரம். பிசினஸ் கிளாஸ் கட்டணம், மூன்று மடங்கு அதிகரிக்கும். ஆடம்பர அறைகளுக்கான கட்டணம் ரூ.2 லட்சம் ஆகும். இந்த விமானம் டில்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதன் முறையாக இரவு டில்லி வந்து சேர்ந்தது.
இந்த விமானம் இரட்டை அடுக்கு வசதிகொண்டது. இந்த விமானத்தில் 4 இன்ஜீன்கள் உள்ளன. இந்த விமானம் 15,700 கி.மீ., தூரம் பயணம் செய்யக்கூடியது.
அடுத்த வாரம் முதல் , ஏ380 ரக விமானத்தை மும்பை மற்றும் துபாய் இடையே இயக்கப்படும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Thursday, 29 May 2014

முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்து: மத்திய அமைச்சர் கருத்துக்கு எதிர்ப்பு


முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறியதற்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட நஜ்மா, முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்றும் பார்சிகள்தான் சிறுபான்மையினர் எனவும் கூறி இருந்தார். இதைக் கண்டித்து, வட இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் 'தி இந்து'விடம் கருத்து கூறினர்.
 
உ.பி.யில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை பேராசிரியர் முப்தி ஜாஹீத்கான் கூறியதாவது:
 
பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஆந்திர மாநில அரசு மீது டி.எம்.ஏ.பாய் தொடுத்த வழக்கை 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், மாநில வாரியாக எடுக்கப்படும் கணக்கில் 15 சதவீதத்துக்கும் கீழ் உள்ளவர்கள் சிறுபான்மையினர்களாகக் கருதப் படுவார்கள் எனத் தீர்ப்பளித்தனர்.
தொடக்கக் காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்படி கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களும் சிறுபான்மையினர் ஆவர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நம் நாட்டின் ஆறு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர். எனவே நஜ்மா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்த முயற்சிக்கிறார். இது, இந்திய அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. நஜ்மா தனது கருத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.
 
உ.பி.யின் பைசாபாத்திலுள்ள ஹிலால் கமிட்டியின் அமைப்பாளர் காலீக் அகமதுகான் கூறியதாவது:
 
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தாவர் சந்த் கெல்லட், முந்தைய காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு அளிக்க முயன்ற 4.5 சதவிகித ஒதுக்கீடு மதத்தின் அடிப்படையிலானது என்பதால் சட்டத்துக்கு புறம்பானது எனவும் கூறி இருந்தார்.
 
கல்வித் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, மதரசாக்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி மத்திய அரசு தரத் தேவை இல்லை எனவும் கூறி இருந்தார்.
 
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு அளித்த உதவித்தொகைகளை, ‘இங்கு அனைவரும் சமமே’ எனக் கூறி அதை அவர்களுக்கு அளிக்க மறுத்து விட்டார். இதையே பிரதமராகி நாடு முழுவதும் அமலாக்க முயல்கிறார்.
 
இதன்மூலம், மௌலானா அபுல் கலாம் நிறுவனம் சார்பில் முஸ்லிம்களின் கல்விக்காக கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகள் முற்றிலுமாக நின்று போய் விடும். சச்சார் கமிட்டி பரிந்துரையின் பேரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமல்படுத்திய ஒருசில திட்டங்களையும் தகர்க்கும் முயற்சி இது.
 
முஸ்லிம்கள் வங்கதேசத்தினரா?
தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி, மேற்கு வங்கத்தில் அனைவரும் துர்கா பூஜை செய்வதாகவும் அதை செய்யாதவர்கள் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறி இருந்தார். அப்படியானால், முஸ்லிம்கள் அனைவரையும் வங்கதேசத்தினர் என்கிறாரா மோடி?
 
நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த நஜ்மா இவ்வாறு கூறுவது ஆச்சரியமாக உள்ளது. பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வந்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரப்பும் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
 
முட்டாளாக்கும் முயற்சி
 
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும் டெல்லி சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவருமான கமால் ஃபரூக்கி கூறியதாவது:
சட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் நஜ்மா பேசியுள்ளார். அவர் பார்சிகள் மட்டும் சிறுபான்மையினர் எனக் கூறியிருப்பதும் தவறு. நம் நாட்டின் கொள்கைகளின்படி, சீக்கியர், கிறித்துவர், புத்திஸ்ட், ஜெயினர்கள், முஸ்லிம்கள் ஆகிய ஐந்து சமூகத்தினரும் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் நஜ்மா கூறியிருப்பது மக்களை முட்டாளாக்கும் முயற்சி.
 
4.5 சதவீத இட ஒதுக்கீடு
காங்கிரஸ் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு அளிக்க முயன்ற 4.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லீம்களுக்கானது மட்டும் அல்ல. நம் அரசியல் சட்டத்தின்படி மதத்தின் பெயரால் எந்த சமூகத்தினருக்கும் ஒதுக்கீடு அளிக்க முடியாது என்பது எங்களுக்கும் நன்றாக தெரியும்.
 
எனவே, காங்கிரஸ் அரசு அளித்தது ஓ.பி.சி.யில் ஒரு உள் ஒதுக்கீடு. ஓபிசியில் இந்துக்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான சமூகம் உள்ளது. இதில், குறிப்பாக சக்தி வாய்ந்ததாக யாதவர் சமூகம், பெரும்பாலானதை அபகரித்துக் கொள்கிறது.
 
இதுபோல் கர்நாடகா மாநிலத்தில் முதல்வராக இருந்த மொய்லி அளித்ததுதான் சிறுபான்மையினருக்கான சலுகைகளில் தாய் போன்றது எனக் கூறலாம். இதில், அவர் அளித்த நான்கு சதவிகித ஒதுக்கீடு, அவருக்குப் பின் பாரதிய ஜனதா உட்பட பல்வேறு கட்சிகளின் ஆட்சியிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
மேலும் சட்டப்படி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் பயன் அடைந்து வருபவர்கள் இந்துக்கள் மட்டுமே. இதுபோல் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பதில் மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? நஜ்மா கூறியது சரி அல்ல. இதற்காக நான் அவர் மீது கடுமையான சொற்களை பயன்படுத்த விரும்பவில்லை என்றார்.
 

Wednesday, 28 May 2014

ஐஏஎஸ் தேர்வில் வயது வரம்பு, வாய்ப்புகளில் அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டு சலுகை: 


தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர் அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப் படுகிறது. பொதுப்பிரிவினர் 4 முறையும் (அட்டெம்ட்), ஓபிசி வகுப் பினர் 7 தடவையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.

வயது வரம்பு, வாய்ப்புகளில் சலுகை

இந்நிலையில், நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடி மாற்றங் கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி, பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், வயது வரம்பில் கூடுதலாக 2 ஆண்டுகளும் சலுகை வழங்க யூபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், பொதுப்பிரிவினர் 32 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுதலாம். அத்துடன் அவர்கள் 6 முறை முயற்சி செய்யலாம். அதேபோல், ஓபிசி வகுப்பினர் 35 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுத முடிவதுடன் 9 முறை முயற்சிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 37 வயது வரை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடியும். கூடுதலாக 2 வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 31-ல் தேர்வு அறிவிப்பு

மேற்கண்ட மாற்றங்கள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தேர்வு தொடர்பான அறிவிப்பு மே 31-ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வு முறையிலோ, தேர்வுக்கான பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தற்போது முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக கோவையிலும் முதல்நிலைத்தேர்வு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. கோவை மையம் இடம்பெறுமா, இல்லையா என்பது மே 31-ம் தேதி வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கையில்தான் தெரியும்.

கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் கூடுதலாக 2 வாய்ப்புகள் மற்றும் 2 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மைய இணை பேராசிரியை பி.பிரேம்கலா ராணி கூறியதாவது:

அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படுவதால் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் குறிப்பாக விளம்பு நிலையில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.

இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் வரப்பிரசாத மாக இருக்கும். அதேபோல், சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தாமதமாக விழிப்புணர்வு கிடைக்கப் பெற்று, தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகைகள் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு பிரேம்கலா ராணி கூறினார்.

திடீர் மாற்றத்துக்கு காரணம்

சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகடமி இயக்குநர் டி.சங்கர் கூறியதாவது:

கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். 2 விருப்பப் பாடங்கள் என்பது ஒன்றாக குறைக்கப்பட்டு பொது அறிவுத்தாள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே, தொடர்ந்து பல பழைய தேர்வுத் திட்டத்தில் படித்துவந்த மாணவர்களுக்கு மெயின் தேர்வில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்களை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. இதைச் சமாளிக்கும் வகையில் தேர்வெழுத கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது கடைசி வாய்ப்பு, வயது வரம்பில் கடைசி நிலையிலும் இருக்கும் மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். கிராமப்புற இளைஞர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாக ஏற்படுவதால், தற்போது அளிக்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

இவ்வாறு சங்கர் கூறினார்.

Tuesday, 27 May 2014

சிலிண்டரை பரிசோதித்து வாங்குவது அவசியம்'

எரிவாயு சிலிண்டர் பெறும்போது ஒவ்வொரு முறையும் பரிசோதித்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு பாதுகாப்பு முறைகள் குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டரை ஒவ்வொரு முறை பெறும்போதும் சிலிண்டரின் மேல் உள்ள மூடியை அகற்றி சிலிண்டர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுப்பை விட மேலான இடத்திலோ அல்லது அடுப்புக்கு அருகிலோ சிலிண்டரை வைக்க வேண்டாம்.

சமையல் செய்யும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகளை சமையலறைக்குள் விளையாட அனுமதிக்க கூடாது. சமையலறை யில் எளிதில் தீப்பிடிக்க கூடிய மண்ணெண்ணெய், டீசல், விறகு போன்ற பொருளைகளை வைக்க கூடாது. புதுரப்பர் இணைப்புக் குழாயை மாற்றும்போது ரெகுலேட்டர் நாசிலில் முழுவதுமாக பொருந்தும்படி இணைக்கவும். இரவில் தூங்கும் முன் சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் கேஸ் பயன்படுத்துவதற்கு முன்பாக வீட்டிலுள்ள ஜன்னல்களை திறந்துவிட்டு சிலிண்டர் மற்றும் ரப்பர் இணைப்பு குழாய் நல்ல நிலையில் உள்ளதா அல்லது ஏதேனும் கசிவு உள்ளதா என பரிசோதித்துவிட்டு பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது ரப்பர் இணைப்பு குழாயில் விரிசல்கள் உள்ளதா என சரிபார்க்க மறக்க வேண்டாம். குறைந்தது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐஎஸ்ஐ முத்திரையிட்ட கேஸ் இணைப்பு குழாயை மாற்றவும். சுரக்ஷô குழாய் உபயோகிப்பின் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றவும்.

சிலிண்டர், டியூப், ரெகுலேட்டர் போன்றவற்றின் தரத்தை பரிசோதிக்க காஸ் நிறுவனத்தில் இருந்து வரும் பரிசோதகர்களை அனுமதிக்க வேண்டும். காஸ் கசிவதை உணர்ந்தால் உடனே ரெகுலேட்டர் மற்றும் பர்னர் குமிழ்களை மூடிவிடவும். உடனே எளிதில் தீப்பிடிக்கக் கூடியவற்றை அப்புறப்படுத்தவும். வால்வில் கசிவு இருந்தால் பாதுகாப்பு மூடியால் மூடவும். ஜன்னல் மற்றும் கதவுக ளை திறந்து வைக்கவும். மின்சார சுவிட்சுகளை இயக்க வேண்டாம்.

உடனே, உங்கள் விநியோகதஸ்தரையோ அல்லது அவசர சேவைப் பிரிவையோ தொடர்பு கொள்ளவும். அதிகமாக கேஸ் கசிவு ஏற்பட்டால் உடனே தீயணைப்புத் துறையை அழைக்கவும்

நீங்கள் புகை பிடிப்பவரா ? ... மே 31- புகையிலை எதிர்ப்பு நாள்
அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பார்க்கும் நிலைமை மோசமானதுதான்.
 
அதிகரிக்கும் இறப்புகள்
உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக Lancet oncology journal-ன் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. ஆனால், இதைப் பற்றி நம்மில் பலரும் அச்சப்படுவதோ, கவலைகொள்வதோ இல்லை.
 
உலக அளவில்
புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதே இதை நிரூபித்துவிடும். இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 10.8 சதவீதம் பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும், வளரும் நாடுகளில் 48 சதவீத ஆண்களும் 7 சதவீத பெண்களும் புகை பிடிக்கிறனர்.
 
 
 
இந்திய அளவில்
சரி, இந்தியாவின் நிலைமை? இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகையிலையால் ஏற்படும் வாய் புற்றுநோய், இந்தியாவில் லட்சத்தில் 10 பேருக்கு ஏற்படுகிறது. புகையிலையால் வரும் புற்றுநோய்களில் இதுவே அதிகம். 2020-ம் ஆண்டில் இந்தியாவில் 13 சதவீதம் இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 
 
பாதிப்புகள் என்ன?
புகை பிடித்தால் எப்படிப் புற்றுநோய் வருகிறது? புகையிலையில் நோயை உண்டாக்கக்கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால்தான், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
 
யாருக்குப் பாதிப்பு
“ஒரு பாக்கெட், இரண்டு பாக்கெட் என ஒரே நாளில் அதிகம் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதே எண்ணிக்கையில் ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டு புகை பிடித்தால் போதும், புற்றுநோய் நிச்சயமாக வந்துவிடும். வீட்டிலும், பொது இடத்திலும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருப்பதால், முன்பைவிட அவர்களும் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கிராமப்புறப் பெண்கள் வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வாயில் புகையிலையை அடைத்துக் கொண்டிருப்பதால் புண் ஏற்படுகிறது. இது நாளடைவில் புற்றுநோய் புண்ணாக மாறிவிடுகிறது.
 
புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்" என்கிறார் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பெல்லார்மின்.
 
நிறுத்துவோம்
 
இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும்? புகை பிடிப்பது, பான், குட்கா, புகையிலை போடுதல் போன்ற பழக்கங்களை நிறுத்துவதுதான் ஒரே வழி. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட முதலில் எளிய வழிகளான யோகா, ஆசனங்களைச் செய்யலாம். தொடர்ந்து தியானத்துக்கு நகரலாம். புகையிலை அடிமைத்தனத்தில் இருந்து மனதை மாற்ற, வேறு விஷயங்களில் ஈடுபட வேண்டும். அது சாக்லேட் தொடங்கி நூலகம் வரை எதுவாகவும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்படியே மாற்றி, புகை பிடிப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுபட முடியும். நமது மனஉறுதியின் வீரியத்தைப் பொறுத்து அது வேகமாக நிகழும்.
 
புகையிலை எதிர்ப்பு நாள்
 
புற்றுநோய் இல்லா உலகை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைக்கு உலக விருப்பமாக உள்ளது. இதை 27 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டுக்கான வாசகம், புகையிலை மீதான வரியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

Monday, 26 May 2014

பத்தமடையின் இன்னொரு பெருமை பாஹீரா பானு


பத்தமடை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது,இங்கு செய்யப்படும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாய் எனப்படும் படுக்கை விரிப்புகள் உலகப்புகழ் பெற்றவை.
பாயில் மணமக்கள் பெயர்கள் எழுதுவது, ஒவியங்கள் தீட்டுவது, பட்டுதுணி போல மென்மையாக உருவாக்குவது என்பதெல்லாம் பத்தமடை பாயின் பெருமைகளாகும்.
இப்படி பாயினால் பெருமை அடைந்துள்ள பத்தமடைக்கு இன்னொரு பெருமை கிடைத்துள்ளது.
இந்த பெருமைக்கு காரணமானவர் பாஹீரா பானு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து தேர்வான 19 மாணவியரில் அரசு பள்ளி மாணவி இவர் ஒருவரே.
அதிக பணம் கொடுத்த நகரத்து பள்ளிகளில் படிக்கவைத்தால்தான் தங்களது பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்ற எண்ணத்தை உடைத்து எறிந்திருக்கிறார்.
எந்த ஊராக இருந்தாலும் எந்த பள்ளியாக இருந்தாலும் சரி படிக்கிற பிள்ளை படிக்கும் என்ற பழமொழியின் இலக்கணமாகியுள்ளார்.

இமாலய இலக்கு:ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நுாற்றுக்கு நுாறு எடுத்தவர் தமிழில் மட்டும் ஒரு மார்க் குறைந்து போனதால் 500க்கு 499 என்ற இமாலய இலக்கை தொட்டுள்ளார்.
மாணவி பாஹீரா பானுவின் வெற்றியை ஊரே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது, ஆனால் தனது இந்த வெற்றியை சாதனையை தனது ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறார்.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த பத்தமடைதான், அம்மா நுார்ஜஹான் படிக்காதவர். எனக்கு தம்பி இரண்டு தங்கைகள் உண்டு. எல்லாருக்காகவும் உழைக்க என் அப்பா வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு போயிருக்கிறார். அப்பாவின் வியர்வைக்கு நாங்கள் பரிசாக எங்களது படிப்பைதானே தரமுடியும் என்று உணர்ந்து படித்துவருகிறோம்.
இதே அரசு பள்ளியில்தான் ஆரம்பம் முதல் படித்துவருகிறேன், எப்போதுமே முதல் மாணவிதான், எப்போதாவது முதல் இடத்தை தவறவிடும் போது அதை குறையாக சொல்லி திட்டாமல், குற்றமாக கருதி தண்டிக்காமல் கனிவாகவும்,கருணையாகவும் பேசி உற்சாகத்தால் விட்ட இடத்தை பெறவைத்த அருமையான ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தவர்கள், அதிலும் தலையாசிரியர் வைகுந்தராமன் மாதிரி அர்ப்பணிப்பு உள்ள தலைமை ஆசிரியரை பார்ப்பது கடினம்.

ட்யூஷன் கிடையாது:எங்க பள்ளியில் யாரும் ட்யூஷன் எடுத்தது கிடையாது, பள்ளியிலேயே காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள், விடுமுறை காலங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள். மனப்பாடம் செய்வதை விட பாடங்களை புரிந்து கொண்டு படிப்பது எப்போதுமே வெற்றியை தரும் என்று அதற்கேற்ப சொல்லிக் கொடுப்பார்கள்.
வழக்கமாக காலை ஐந்து மணிக்கு எழுந்து படிப்பேன் தேர்வு நேரத்தின் போது காலை 4 மணிக்கு எழுந்து படித்தேன் இரவு பத்து மணிக்கெல்லாம் படித்து முடித்துவிட்டு துாங்கப்போய்விடுவேன்.
டி.வி.,போன்ற பொழுது போக்கு சாதனங்களால் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டேன், எப்படியும் ஒரு ரேங்க வாங்குவேன் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதிர்பாராதவிதத்தில் மாநில அளவில் முதல் ரேங்க் வாங்கியுள்ளேன்.
இதே போல இதே பள்ளியில் படித்து பிளஸ் டூவிலும் சாதனை மாணவியாக வருவேன் பிறகு மருத்துவப் படிப்பை எடுப்பேன் இதய நோய் நிபுணராகி இதே ஊரில் என் ஊர் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே என் எதிர்கால லட்சியம் என்றவர் குரலில் இப்போதே இதய நோய் நிபுணராகிவிட்டது போன்ற நம்பிக்கை தென்பட்டது.
பாஹீரா பானுவை வாழ்த்த விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 8015792519 .(இந்த போன் எண் அவரது மாமாவினுடையது, ஆகவே விஷயத்தை சொன்னால் அவர் பாஹீராவிடம் போனை கொடுத்து பேசவைப்பார்.)

Sunday, 25 May 2014

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 25/05/2014

நமதூர் ஹாஸ் நகர் மர்ஹும் சம்பா ஹனிபா அவர்களின் மரு மகனும் ஜியாவுதீன் அவர்களின் தந்தையுமான முஹம்மது பாரூக் அவர்கள் சவூதி அரேபியாவில் மௌத் .இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன் 

நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரிய வாக்கு விபரம்நடந்து முடிந்த நாகை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஒருவாரம் ஆகி உள்ள நிலையில் அதில் உள்ள நாகப்பட்டினம் ,கீழ் வேளூர் ,வேதாரணியம் ,திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி ,நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதி வாரி கட்சிகள் பெற்ற வாக்கு விபரம் தேர்தல் ஆணையம் வெளி யீட்டு உள்ளது .

நாகப்பட்டினம்

அதிமுக     68391
திமுக          45316
இ .கம்யூ     5380 
பாமக          4360
காங்              2763
நோட்டா      2440


கீழ் வேளூர் (தனி )

அதிமுக        58484
திமுக             45332
இ .கம்யூ        15685
பாமக                5633
காங்                   2032
நோட்டா           1956


வேதாரணியம்

அதிமுக         69061
திமுக             38901
இ .கம்யூ        9155
பாமக             11000
காங்                4443
நோட்டா        2342


திருத்துறைப்பூண்டி தனி

அதிமுக         64772
திமுக              51550
இ .கம்யூ         36345
பாமக                 7887
காங்                   3705
நோட்டா          2502திருவாரூர்

திமுக        75985  
அதிமுக    74143
இ .கம்யூ     17032       
பாமக           6542
காங்              4466
நோட்டா      3501


நன்னிலம்

அதிமுக         98391
திமுக              69894
இ .கம்யூ         6606
பாமக               7903
காங்                  6483
நோட்டா          2876 தபால் வாக்கு

திமுக             1127
அதிமுக           932
இ .கம்யூ          110
பாமக               181
காங்                     45
நோட்டா             45

இதில் 5 தொகுதியில் அதிமுகவும் ,திருவாரூர் தொகுதியில் திமுக அதிகம் வாக்குகள் பெற்று உள்ளன .அதைப்போல தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்று உள்ளது .

நோட்டாவுக்கு திருவாரூர் தொகுதியில் அதிகம் செல்வாக்கு இருந்ததை காணலாம் .

 

Saturday, 24 May 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 25/05/2014  நமதூர் ஸூபி நகர் நடுத்தெரு முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகனார் M நேமத்துல்லாஹ் மணமகனுக்கும் திருவிடச்சேரி முஹம்மது ஜெஹபர் அவர்களின் மகளார் M  ரிஹனா பிர்தௌஸ் பீவி  மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 25 (25/05/2014 ) அன்று பகல் 11:45 மணிக்கு திருவிடச்சேரி மஸ்ஜித் மினாவில்  நடைபெற உள்ளது .

நமதூர் மேலத்தெரு ஜெகபர் சேக்  அலாவுதீன் அவர்களின் மகனார் அஸ்கர் அலி மணமகனுக்கும் ஜெயம் தெரு முஹம்மது யூனுஸ் அவர்களின் மகளார் ஷஜரத் நிஷா
மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 25 (25/05/2014 ) அன்று
பகல் 11:30 மணிக்கு நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜிதில்  நடைபெற உள்ளது .மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

Friday, 23 May 2014

திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இஸ்லாமிய மாணவிகள் சாதனை

திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் 
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ம ன்னார்குடி பள்ளி மாணவிகள் மாநில அளவில் 3-மிடமும், மாவட்ட அளவில் முதலிடத் தையும் பெற்றுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய 18,560 மாணவர்களில் 15,615 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று, தேர்ச்சி சதவீதம் 84.13 ஆகியுள்ளது.

திருவாரூர் ஆர்.சி.பாத்திமா பள்ளி மாணவி பி. சிவானி, மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரி க் மேல்நிலைப்பள்ளி மாணவி சி. ஜனனி, திருத்துறைப்பூண்டி செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி (கட்டிமேடு)  முசைபர் நிஷா ஆகியோர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மா நில அளவில் மூன்றாமிடம் பெற்றதுடன், திருவாரூர் மாவட்ட அளவில் மூவரும் முதலிட த்தைப் பிடித்துள்ளனர்.

இதே போல், மாவட்ட அளவில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் 2-மிடமும், 495 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் 3-மிடத்தைப் பிடித்துள்ளனர்.

2-மிடம் பெற்றவர்களின் விவரம்:முத்துப்பேட்டை ரகமத்பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாண வி கே. பாலசுந்தரி, மன்னார்குடி ஜெயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக ள் எஸ்.ஆர். மோகனப்பிரியா, எஸ்.கே. சுஷ்மிதா, திருத்துறைப்பூண்டி செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி  (கட்டிமேடு )ரைகானா தஸ்ஸீம், சாய்ராம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மா ணவி எஸ். ஜே. யோகா, மேலமரவக்காடு பள்ளி மாணவி ஆர். ரஞ்சிதா ஆகியோர் 2-மி டம் பெற்றனர்.

3-மிடம் பெற்றவர்கள் விவரம்: பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. வர்சபூரணி, மன்னார்குடி சண்முகா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். அர்ச்சனா, மேலமரவக்காடு தேவி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. அரு ள்மொழி, திருத்துறைப்பூண்டி செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி (களப்பால்)   நபீலா ஜெப்ரா னா,

ஆர் சி பாத்திமா மாணவி ஷிவானிக்கு தலைமை ஆசிரியை இனிப்பு ஊட்டினர் .
 உள்ளிக்கோட்டை நவபாரத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். சூர்ய பிரகாஷ், சேந்தமங்கலம் மெரிட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். ஸ்வானி.


திருவாரூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பில் முர்ஷிதா நிஸ்ருன் என்ற மாணவி முதலிடம் பெற்றது ,ஆனால் பள்ளிக்கோ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லாமல் பெற்றோர்கள் செய்த தாமதம் எதுவுமே இன்றைய 10ம் வகுப்பு முடிவில் இல்லாமல் முதல் மூன்று இடத்திலும் இஸ்லாமிய மாணவிகள் வந்தும்  மதியமே மாவட்ட தில் முதலிடம் பெற்ற கட்டிமேடு  மாணவியின் பேட்டி  டி வி களில் ஒளிபரப்பானது .

மாலையில் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நடைபெற்றது .பெற்றோர்கள்  மற்றும் சொந்தங்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பு பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் .

நமதூர் மௌத் அறிவிப்பு 23/05/2014


நமதூர் புதுமனைத்தெரு மர்ஹும் ச மு அப்துல்லாஹ் அவர்களின் மகளாரும்
அடியக்கமங்கலம்
ஜெயினுலாபுதீன் அவர்களின் மனைவியும் நசுருதீன்
அவர்களின் தாயாருமான ஹதிஜா பீவி அவர்கள் மௌத் .இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 23/05/2014 வெள்ளிக்கிழமை 
காலை  11 மணிக்கு நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள்


பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்

நல்லடக்கம்செய்யப்படுகிறது.

Thursday, 22 May 2014

Nagappattinam New MP Name


தேர்தல் முடிவுகள் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது .தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை எல்லாம் தளர்த்திவிட்டது .புதிய 16வது மக்களவை உறுப்பினர்கள் பட்டியல் மத்திய அரசிதழில் வந்து விட்டதால் நாடாளுமன்ற மக்களவை இணையதளம் புதிய உறுப்பினர் கள் பெயர்கள் மட்டு...ம் கொண்ட விபரம் வெளியிடப்பட்டுள்ளது .அதைப்போல நாகை மாவட்ட இணைய தளத்தில் நாகை, மயிலாடுதுறை தொகுதி புதியஎம் பி கள் விபரம் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் இன்னும் பழைய உறுப்பினர் பெயரே உள்ளது . இது முன்னோடி கணினி மாவட்டத்தின் தற்போதைய நிலையை காட்டுகிறது. நாகை தொகுதி தேர்தலை நடத்தியதே திருவாரூர் மாவட்டம் தான் என்பது தனி சிறப்பாகும் .
 

 

மக்களவைக்கு வயது ஏறுது!


தற்போது அமையவிருக்கும் 16-வது மக்களவைதான் இதுவரை அமைந்த மக்களவைகளிலேயே வயது முதிர்ந்தது.
 
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 71 பேர்தான் 40 வயதுக்கும் குறைவானவர்கள். 216 பேர் 55 வயதுக்கும் குறைந்தவர்கள்.
 
நாட்டின் முதல் இரண்டு மக்களவைகளில்தான் 40 வயதுக்கும் கீழே இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அது படிப்படியாக ஒவ்வொரு மக்களவையிலும் குறைந்து, இப்போது 13% ஆக இருக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் 50% பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது.
 
86 வயதாகும் பா.ஜ.க-வின் எல்.கே. அத்வானிதான் இந்தியாவிலேயே மூத்த எம்.பி. பா.ஜ.க. எம்.பி-க்களின் சராசரி வயதைவிட, காங்கிரஸ் எம்.பி-க்களின் சராசரி வயது மூன்று அதிகம். பா.ஜ.க. எம்.பி-க்களின் சராசரி வயது 54. பிரதமர் நரேந்திர மோடியின் வயது 63.
 
பெண் எம்.பி-க்கள்
 
இதுவரை இருந்திராத வகையில், பெண் எம்.பி-க்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்திருக்கிறது. மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் அது 11.3%.

Wednesday, 21 May 2014

5 ரூபாயிலிருந்து ஆரம்பித்து 5 லட்சத்திற்கு வளர்ந்த சேவை-

ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி ஒரு பத்திரிகை முகவர். 7 வருடங்களுக்கு முன்பு இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ‘விவேகானந்தர் சேவா டிரஸ்ட்’டை தொடங்கினார்கள். இப்போது இதில் மெக்கானிக், கொத்தனார் என 30 பேர் உறுப்பினர்கள். 5 ரூபாய்க்கு மரக் கன்றுகளை வாங்கி நடுவதில் தொடங்கிய இவர்களின் சேவை இப்போது 5 லட்சம் ரூபாய் பங்களிப்பில் பொதுக்குளத்தை தூர்வாரும் பணியில் வந்து நிற்கிறது. இந்த இலக்கை எப்படி எட்டிப் பிடித்தார்கள் இந்த இளைஞர்கள்?
அதுகுறித்து பெரியசாமி பேசுகிறார். “பழனியில் பொது சேவை எதுவாக இருந்தாலும் அதில் எங்களையும் வலியப் போய் இணைத்துக் கொள்வோம். 30 பேரும் மாதம் 100 ரூபாய் சந்தா சேர்ப்போம். அத்துடன், நல்லவர்களிடம் இன்னும் கொஞ்சம் நிதி திரட்டி பள்ளிக் கூட பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். பழனியில் திரியும் பரதேசிகளுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும். ஆனால், மனநிலை சரியில்லாமல் ரோட்டோரம் முடங்கிக் கிடக்கும் ஜீவன்களுக்கு அது சாத்தியமில்லை. தினமும் அவர்களில் பத்துப் பேருக்கு எங்கள் டிரஸ்ட் மூலமாக ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறோம். எங்களிடம் உள்ள இருப்புக்கு இவ்வளவுதான் செய்யமுடியும்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைப் பற்றி கவலைப்படாமல், பாலித்தீன் பொருட்களையும் காலி மதுபாட்டில்களையும் கொடைக் கானல் மலைச் சாலையில் கண்டபடி வீசிவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா சீசன் முடிந்ததும் என்.சி.சி. மாணவர்கள் துணையோடு அந்த நச்சுக் கழிவுகளை எல்லாம் சேகரித்து நகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்ப்பது எங்கள் வேலை. 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணியை மேற்கொள்வோம்.
மலர் கண்காட்சி சமயத்தில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அவர்கள் எடுத்துச் செல்லும் பாலித்தீன் பைகளை வாங்கிக் கொண்டு துணிப் பைகளை கொடுப்போம். அத்துடன் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது எப்படி என விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் கொடுப்போம்.பழனி அரசு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் வார்டை ரெண்டு வருஷமா நாங்கள் தத்தெடுத்திருக்கிறோம். அந்த வார்டுக்கு வெள்ளையடித்து, மின் விசிறிகள் மாட்டி, ஜன்னல்களில் கொசு வலை அடித்து படுக்கை விரிப்புகள் வாங்கிக் கொடுத்து, பூந்தொட்டிகள் வைத்து சுகாதாரமான முறையில் பராமரித்து வருகிறோம். அடிக்கடி நாங்களே அங்கு சென்று பினாயில் தெளித்து சுத்தம் செய்கிறோம்.
அடுத்த கட்டமா பழனியில் உள்ள வையாபுரி குளத்தை தூர்வாரும் பணியில் பொதுநல அமைப்புகளுடன் கைகோத்து இறங்கி இருக்கிறோம். இதற்கு 10 லட்சம் தேவை. இதில் பாதித் தொகையை செலுத்திவிட்டால் நமக்கு நாமே திட்டத்தில் மீதித் தொகையை பெற்று பணிகளை முடித்துவிடலாம்.
இந்தத் திட்டத்துடன் இதுவரை ரெண்டரை லட்சம் நிதி திரட்டி இருக்கிறோம். எஞ்சிய தொகையையும் திரட்டி வையாபுரி குளத்தை அழகுறவைப்போம்’’ என்று நம்பிக்கை மிளிரச் சொன்னார் பெரியசாமி.
“நூறு இளைஞர்களை என்னிடத்தில் தாருங்கள்.. இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்’’ என்று தெரியாமலா சொன்னார் விவேகானந்தர்!

Tuesday, 20 May 2014

மோடிக்கு ஒரு திறந்த மடல்பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் மிகவும் உளப்பூர்வமாகத்தான் சொல்கிறேன்; இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பதுகுறித்துக் கோடிக் கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதே வேளையில், இன்னும் கோடிக் கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.
 
 
ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர் களும், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலகட்டத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும், பிறகு உங்கள் அரசியல் குரு வாஜ்பாயும் உட்கார்ந்த நாற்காலிக்கு இதோ நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களை இந்த இடத்தில் பார்க்க விரும்பாதவர்கள் நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
 
இந்த கவுரவத்தை நீங்கள் பெறுவதுகுறித்து எனக்குப் பெருமளவில் ஐயப்பாடுகள் இருந்தாலும்கூட, உங்களைப் போல் பின்தங்கிய சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வரும் ஒருவர் பிரதமர் ஆவதை நான் பெரிதும் மதிக்கிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியமான சமத்துவம் என்பதை இது பரிபூரணமாக நிறைவுசெய்கிறது.
 
தேசம் என்னும் கருத்தாக்கம்
 
இந்திய பிரதமர் தேர்வு நரேந்திர மோடி 
‘டீ விற்றவர்' என்று மூர்க்கமாகவும் கேலியாகவும் உங்களைப் பற்றிச் சிலர் பேசியபோது எனக்குக் குமட்டிக் கொண்டுவந்தது. பிழைப்புக்காக டீ விற்ற ஒருவர் இந்திய அரசுக்குத் தலைமை தாங்க வருவது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஒருவருக்குக் கூஜா தூக்குவதைவிடப் பலருக் கும் டீ கூஜாவைத் தூக்கிச்செல்வது என்பது மேல் அல்லவா.
 
இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு,
 
காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி
அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டுதல்
 
ஒற்றுமையையும் ஸ்திரத்தன்மையையும் பற்றிப் பேசும் போதெல்லாம் சர்தார் வல்லபபாய் படேல் பெயரையும் அவருடைய ஆளுமையையும் துணைக்கு அழைக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசமைப்புச் சட்டக் குழுவுக்கு சர்தார் தலைமையேற்றிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்வி, கலாச்சாரம், மதம் போன்றவை தொடர்பாகச் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் முக்கியமான உத்தரவாதங்களைத் தருகிறது என்றால், அதற்கு சர்தாருக்கும் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்கவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் திரு மோடி அவர்களே.
அளவுக்கு அதிகமாகவும் வெளியில் சொல்ல முடியாத வகையிலும் பலரிடத்திலும் பயம் இருக்கிறது, என்ன காரணம்?
 
ஏனென்றால், நீங்கள் பேரணிகளில் உரையாற்றும்போது, இந்தியக் குடிமக்கள் என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜனநாயகவாதியின் குரலைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்களே தவிர, கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஒரு சக்ரவர்த்தியின் குரலை அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது சிறுபான்மை மக்களின் அச்சத்தைக் களைவதுதானே தவிர, ஏதோ அவர்களுக்குப் பரிபாலனம் செய்வதுபோல் நடந்துகொள்வதல்ல. ‘பாதுகாப்பு' என்பதற்கு வளர்ச்சி என்பது எந்த வகையிலும் மாற்றாகாது. ‘ஒரு கையில் குர்ஆன், மறு கையில் மடிக்கணினி’ என்ற ரீதியில் நீங்கள் பேசினீர்கள். அந்தப் படிமம் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக அமையாது. ஏனெனில், வேறொரு படிமம் அவர்களை அச்சுறுத்துகிறது: இந்து என்ற தோற்றத்துக்குள் ஒளிந்துகொண்டு ஒருவர் இந்துப் புராணமொன்றின் டி.வி.டி-யை ஒரு கையிலும் அச்சுறுத்தும் வகையில் திரிசூலத்தை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் படிமம்.
 
உப்பு தடவிய பிரம்பு

முன்பெல்லாம், பள்ளிக்கூடங்களில் உப்பு தடவிய பிரம்பை வகுப்பறைக்கு வெளியே தலைமையாசிரியர்கள் வைத்திருப்பது உண்டு. பார்த்தாலே பயம் வரும்; தப்பு செய்தால் தலைமையாசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார் என்பதை நினைவூட்டும் விதத்தில் அந்தப் பிரம்பு வைக்கப்பட்டிருக்கும். முசாபர்நகரில் 42 முஸ்லிம்கள் 20 இந்துக்கள் இறப்பதற்கும் 50,000 பேர் வீடுவாசலை இழந்து அகதிகளானதற்கும் காரணமான கலவரங்களைப் பற்றிய மிகச் சமீப காலத்திய நினைவுகள்தான் அந்தப் பிரம்புகள். “ஜாக்கிரதை, இதுதான் உங்களுக்கு நடக்கும்!” என்ற எச்சரிக்கை கோடிக் கணக்கானவர்களின் பகல் நேர அச்சமாகவும் இரவு நேரப் பயங்கரமாகவும் நுழைந்துவிட்டிருக்கிறது.
 
உங்கள் கையில்தான் இருக்கிறது திரு மோடி அவர் களே, அந்த அச்சத்தை விரட்டும் பொறுப்பு. அதைச் செய்வதற் கான அதிகாரமும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது; அதைச் செய்யும் உரிமையும் கடப்பாடும்கூட உங்களிடம் இருக் கிறது. யார் யாரோ என்னென்னவோ சொன்னாலும்கூட, அந்த அச்சத்தை நீங்கள் போக்குவீர்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.
 
நீங்கள்தான் செய்ய வேண்டும்
 
முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் அனைவரும் தங்கள் மனதில் ஆழமான வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள், மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் போலவும் காஷ்மீர் பண்டிட்டுகள் போலவும். யதேச்சையான அல்லது திட்டமிட்ட காரணங்களுக்காகத் திடீரென்று ஏதாவது கலவரம் ஏற்படும் என்றும் அதற்குப் பல மடங்கு, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, பழிவாங்கல் என்றெல்லாம் தொடரும் என்றும் ஒரு அச்சம் நிலவுகிறது. தலித் மக்களும் பழங்குடியினரும், குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவமானத்திலோ, அவமானத்துக்குள்ளானதைப் பற்றிய நினைவிலோதான் கழிக்கிறார்கள்.
 
இந்நிலையைக் கருத்தில் கொண்டு, பேச்சளவிலும் செயலளவிலும் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுங்கள் திரு மோடி அவர்களே. அவர்களுடைய நலன்களுக்காகக் குரல்கொடுக்கும் முதல் நபர் நீங்கள்தான் என்ற உறுதியை அளிப்பதன் மூலம் இதை நீங்கள் சாதிக்க முடியும்.
குடியாட்சியின் பன்மைத்துவத்திடம் முடியாட்சியின் ஒருமைத்துவ மொழியில் பேசக் கூடாது; ‘பல' என்ற சிந்தனையிடம் ‘ஒன்று' என்பதன் சொற்களில் பேசக் கூடாது. இந்தியா என்பது பன்மைத்தன்மையின் காடு. அதில் எண்ணற்ற தாவர இனங்கள் இருக்கின்றன. அவை செழித்து வளர்வதற்கு உதவும் இலைமக்கினை (ஹ்யூமஸ்) நீங்கள் போஷிக்க வேண்டுமென்று அந்தக் காடு விரும்புகிறது. ஒற்றை வண்ணம் கொண்ட ஒற்றைக் கலாச்சாரத்தை அதன் முன்னே வைத்துவிடாதீர்கள்.
 
ஆச்சரியப்படுத்துங்கள்!
 
பிரிவு 370 பற்றி நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம்குறித்த புளித்துப்போன கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோயில், இந்து அகதிகளையும் முஸ்லிம் அகதிகளையும்பற்றி நீங்கள் பேசியது, இவையெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; பயத்தைதான் ஏற்படுத்து கின்றன. வெகுஜன அச்சம் என்பது இந்தியக் குடியரசின் குணாம்சமாக இருக்க முடியாது திரு மோடி அவர்களே.
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை அடைந்திருக்கிறீர்கள் திரு மோடி அவர்களே. அதற்காக மறுபடியும் வாழ்த்துக்கள்! இந்த வெற்றியை அடுத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சிக் காலம் தொடங்கட்டும். அதன் மூலம் இந்த உலகத்தின் முன் நிறைய ஆச்சரியங்களை, அதாவது உங்கள் ஆதரவாளர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்காத ஆனால், பெரும்பாலானோர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஆச்சரியங்களை அந்த ஆட்சிக் காலம் நிகழ்த்தட்டும். நீங்கள் மிகவும் புத்திக்கூர்மை கொண்டவர் என்பதால், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வரும் அறிவுரையை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். உங்கள் ஆதரவாளர்களிடமிருந்து வரும் கைத்தட்டல்களுக்கு வேண்டிய கைம்மாறு செய்யுங்கள். ஆனால், உங்களுக்கு ஆதரவளிக்காதவர்களின் நம்பிக்கையையும் பெறுங்கள்.
 
அரசாட்சிக் காலத்தைச் சேர்ந்தவையும், சித்தாந்தரீதியி லானவையுமான உதாரணங்கள் உங்களுக்குப் பிடிக்கும். எனவே, உங்கள் போராட்டத்தில் நீங்கள் ஒரு மகாராணா பிரதாப் சிங்கைப் போல இருங்கள், சாந்தத்தைப் பொறுத்த வரை அக்பராக இருங்கள். இதயத்தில் சாவர்க்கராக, அதாவது நீங்கள் விரும்பினால், இருங்கள்; ஆனால், மனதால் ஒரு அம்பேத்கராக இருங்கள். உங்கள் டி.என்.ஏ-வைப் பொறுத்தவரை, நீங்கள் விரும்பினால், ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவீதத்தினருக்காக அவர்கள் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் வஸிர்-இ-ஆசமாக (வஸிர்-இ-ஆசம் = உருது மொழியில்
 
‘பிரதம மந்திரி') இருங்கள்.
நமது தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,
 
உங்கள் சக குடிமகன்,
கோபாலகிருஷ்ண காந்தி

கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர்.

புதிய மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் குறைவு

16-வது மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக்களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
கடந்த 15 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் மக்களவையில் இடம்பெற்றிருந்தனர். கடந்த 20 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 25-க்கும் மேற்பட்டவர்களும், 1980 89-க்கு இடைப்பட்ட காலத்தில் 40க்கும் மேற்பட்டவர்களும் மக்களவையில் இடம் பெற்றிருந்தனர்.
 
தற்போதைய தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி
நாடு முழுவதும் 5 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களத்தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்துவிட்டனர். பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து 1 முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16-வது மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசியவாத காங்கிரஸ் சார் பிலும், ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் அன்வர் ராஜா ராமநாதபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
 
 
மக்களவையில் முஸ்லிம் உறுப் பினர் எண்ணிக்கை குறைந்துள்ள தற்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில், “தேசிய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப்பதவிக்கு பொருத்தமற்றவர்களாக ஆக்கப் படுவார்கள்” என்றார்.
 
 

Monday, 19 May 2014

நாகை தொகுதியில் அதிமுகவின் ஏற்றமும்; திமுக, இடதுசாரிகளின் வீழ்ச்சியும்

நாகை (தனி) மக்களவைத் தொகுதியை 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக கைப்பற்றியுள்ளது. அதேசமயம் இடதுசாரிகள், திமுகவினரின் கோட்டையாக கருதப்பட்ட இந்தத் தொகுதியில் இரண்டு கட்சிகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

1952-ம் ஆண்டிலிருந்து நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியாக இருந்து வருகிறது. மீனவர்கள், விவசாயிகள், ஆதிதிராவிட மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட, தனி தொகுதியாக உள்ள இத்தொகுதி, இடதுசாரிகளுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

1952 முதல் 1967 வரையிலான 4 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸýம், 1971 முதல் 1979 (இடைத்தேர்தல் உள்பட) வரை 3 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்டும், 1980-ல் முதன் முதலாக திமுகவும், 1984-ல் அதிமுகவும், 1989-ல் மீண்டும் இந்திய கம்யூனிஸ்டும், 1991-ல் மீண்டும் காங்கிரஸýம், 1996,1998 தேர்தலில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தத் தொகுதியை கைப்பற்றின.

1999-ல் தொகுதியை கைப்பற்றிய திமுக தொடர்ந்து 15 ஆண்டுகள் தொகுதியை தன் வசம் வைத்திருந்தது. அதனால் இது திமுகவுக்கு சாதகமான தொகுதி என்ற நிலை ஏற்பட்டது.

அதிமுக இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்த சமயங்களில் நாகை மக்களவைத் தொகுதியை அக்கட்சிக்கே விட்டுக் கொடுத்ததால், 1984-க்குப் பிறகு அதிமுகவால் இந்தத் தொகுதியை கைப்பற்ற முடியவில்லை.

பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடரும், அப்போது நாகைத் தொகுதியை சிபிஐ-க்கு பெற்று வென்று விடலாம் என்று அக்கட்சி கருதியது.

ஆனால், இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அதிமுக தனித்துப் போட்டியிட்டதுடன், நாகை தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்தது.

இதனால், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து தனித்துப் போட்டியிட முடிவு செய்து, நாகை தொகுதியில் சிபிஐ போட்டியிட்டது.
திமுகவை பொருத்தவரையில், தொகுதியும் தங்களிடம் உள்ளது அத்துடன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் வாக்கும், இஸ்லாமியர்களின் வாக்கும் தங்களுக்கு சாதகமாக அமையும் அதனால் மீண்டும் நாகையை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில், தொகுதி எம்பியாக உள்ள ஏ.கே.எஸ். விஜயனையே மீண்டும் களம் இறக்கியது.

இந்நிலையில், நாகைத் தொகுதியில் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக இடதுசாரிகளின் வாக்கு இருக்கும் என்று அக் கட்சியினர் கூறி வந்தனர். ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 1,06,079 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்து, திமுக, இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கின்றனர் இந்தத் தொகுதி வாக்காளர்கள்.

திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன், பதவிக் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை அமல்படுத்தாதது, கட்சிக்காரர்களை முழுமையாக அரவணைத்து செல்லாதது ஆகியவையே திமுகவின் தோல்விக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கடந்த 2009 தேர்தலைவிட தொகுதி வாரியாக திமுக பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது 3,534 (நாகை), 3,158 (கீவளூர்), 20,126 (வேதாரண்யம்), 947 (திருவாரூர்), 4,456 (திருத்துறைப்பூண்டி), 11,218 (நன்னிலம்) என மொத்தம் 43,439 வாக்குகள் 2014 மக்களவைத் தேர்தலில் குறைவாக பெற்றுள்ளதால் திமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதையும் காட்டுகிறது.
இதுபோலவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாகை தொகுதி முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதை தங்களது கோட்டையாக கருதி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது பலம் குறைந்திருப்பதையும் தேர்தல் முடிவில் மூலம் அறிந்து கொண்டனர்.

அதிமுக அரசின் விலையில்லா ஆடு மாடு, தாலிக்குத் தங்கம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை என ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களால் அதிமுக தொகுதியில் வலிமை பெற்றிருக்கிறது. திமுகவின் வேட்பாளர் தேர்வு, க ட்சி மீதான ஊழல் புகார் ஆகியவை திமுகவுக்கு இறங்கு முகத்தை தந்திருக்கும் அதே வேளையில், மாநில அரசியலில் இடதுசாரிகளின் ஆதிக்கம் குறைந்து வருவதையும் உணர்த்தியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலர் ஆர் காமராஜ் தற்போது தமிழக அமைச்சர் .இவரின் கடுமையான முயற்சியும் முக்கிய பங்கு காரணம் .

Sunday, 18 May 2014

தேர்தல் தோல்வியால் ஸ்டாலின் தலையில் விழும் பொறுப்புகள்
கூட்டணி சொதப்பல், வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம், கோஷ்டிப்பூசல் என திமுகவின் படுதோல்விக்கு முழுபொறுப்பும் ஸ்டாலின் மீது விழுந்துள்ளதால், நிர்வாகிகளை களையெடுக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. ஸ்டாலினிடமிருந்து நேரடியாக கட்சி நிர்வாகத்தை கருணாநிதியே கையிலெடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த மக்களவைத் தேர்தலில் திமுக பூஜ்யம் என்ற அளவில் படுதோல்வியை சந்தித்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். பொருளாளர் ஸ்டாலினின் ஒருதலைப்பட்சமான முடிவுகளே தோல்விக்கு காரணம் என அவரை ஒட்டுமொத்த பொறுப்பாளராக்க சிலர் முயற்சிக்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து கட்சியின் நிர்வாகிகள் தலைமைக்கு போன் செய்து, இந்தத் தகவல்களை தெரிவிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
கடந்த 2001 சட்டசபைத் தேர்தலில் சாதி, மத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக தோல்வி அடைந்தது. அப்போதும் ஸ்டாலின்தான் நேரடியாக முடிவெடுத்து, தேர்தல் பணிகளை நிர்வகித்தார். அதே போல இப்போதும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவெடுப்பது, வேட்பாளர் தேர்வு, அழகிரி உள்பட திமுகவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை என அனைத்தையும் ஸ்டாலினே தனது ஆதிக்கத்தில் மேற்கொண்டுள்ளார்.
 
சரியான கூட்டணி அமைக்காதது திமுகவின் மிக மோசமான முடிவாக அப்போதே பேசப்பட்டது. காங்கிரஸும், பாஜகவும் கூட்டணிக் காக பலமுறை தூது விட்டபோது, ஸ்டாலின்தான் கூட்டணி வேண்டா மென்று தடுத்து விட்டதாக கூறப்பட்டது. கடைசி கட்டத்தில் தேமுதிகவுக்காக காத்திருந்து கோட்டை விட்டது, அதிமுக அணியி லிருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளாதது போன்ற ஸ்டாலினின் முடிவுகள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளன.
 
மேலும் வேட்பாளர் தேர்வில் கருணாநிதியாலேயே எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் நினைத்த யார் பெயரையும் பட்டியலில் ஏற்ற முடியவில்லை. கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கட்சிக்கு தொடர்பே இல்லாதவர் களை வேட்பாளராக்கியது அடுத்த கட்ட தவறான முடிவாகக் கருதப் படுகிறது.
 
தேர்தல் நேரத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையும் திமுக விசுவாசிகளான மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தராததும் தோல்விக்கான காரணி களாகக் கூறப்படுகிறது. பிரச்சாரத் தின்போது தனக்கும் கருணாநிதிக் கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலின் கூறியிருந் ததும், கனிமொழி உள்பட மற்ற முக்கிய நிர்வாகிகள் செல்லும் போது, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளாததும் திமுகவின ரையே கடும் அதிருப்திக்கு ஆளாக் கியது.
 
இதுபோன்று எல்லா முடிவுகளும் ஸ்டாலின் அதிகாரத்திலேயே எடுக்கப்பட்டதால், அவரே தோல்விக்கான முழு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என இப்போது கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கட்சியின் உயர் நிலைக்குழு, செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை கூட்டி களையெடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் அடுத்த சட்ட சபைத் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.