Sunday, 11 May 2014

திருவாரூர் மாவட்டத்தில் பயன்ற 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவனிக்கவும்

 திருவாரூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவிகள் எவ்வித உயர்படிப்புகளை படிக்கலாம் என்ற ஆலோசனை வழங்கும் சிறப்பு முகாம் வரும் 12 மற்றும் 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 வகுப்பு பொதுத்தேர்வை 14 ஆயிரத்து 80 மாணவ, மாணவிகளும், 10 வகுப்பு பொதுத் தேர்வை 19 ஆயிரத்து 19 மாணவ, மாணவிகளும் எழுதியுள்ளனர். இதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இந்த 2 பொதுத்தேர்வுகளையும் எழுதியுள்ள மாணவ, மாணவிகள் மேற்கொண்டு என்ன படிக்கலாம், அந்த படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறித்து அந்தந்த துறையின் பேராசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் 12 ம் தேதி கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியிலும், குடவாசல் ஒன்றியத்திற்கு மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளியிலும், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியிலும்,நன்னிலம் ஒன்றியத்திற்கு நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு முத்துப்பேட்டை கே.ஏ.பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னார்குடி ஒன்றியத்திற்கு மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியிலும் இந்த ஆலோசனை முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் வரும் 13ம் தேதி வலங்கைமான் ஒன்றியத்திற்கு வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கோட்டூர் ஒன்றியத்திற்கு கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,

வரும் 14ம் தேதி திருவாரூர் ஒன்றியத்திற்கு புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. மாணவ,மாணவிகளின் நலன்கருதி சிறந்த பேராசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த முகாமில் அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட முகாம்களில் மாணவ மாணவிகள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு முதன்மைக் கல்வி அலுவலர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment