திருவாரூர் திருவிக கல்லூரியில் வெள்ளிக்கிழமை நாளை அடுக்குப் பாதுகாப்பில் நாகைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படுகிறது.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட, நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகியப் பேரவைத் தொகுதிகளில் பதிவான மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருவாரூர் திருவிக அரசுக் கலைக் கல்லூ ரியில் ஒவ்வொருத் தொகுதிக்கென தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்புக்காவல்படை, ஆயுதப்படை மற்று ம் உள்ளூர் காவல் துறையினர் என வாக்கு எண்ணும் திருவிக கல்லூரி வளாகம் முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு 3 அடுக்குப் பாதுகாப்பில் வா க்கு எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் மற்றும் கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடி கேமரா பொருத்தப்ப ட்டு கண்காணிக்கப்படுகிறது.தவிர ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணும் மையம் விடியோ பதிவு செய்யப்படுகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் அருகிலுள்ள மற்றொரு அறையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் அரங்குகளில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகிறது.
இதற்காக ஒவ்வோர் அரங்கிலும் 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர் முகவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் சரிபார்ப்பு மற்றும் கையெழுத்துக்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அறிவிப்புப் பலகையில் எழுதப்படுகிறது.
முதல் சுற்று விவரம் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான இயந்திரப் பெட்டிகள் பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்துவரப்படுகிறது. நாகை தொகுதியில் 1425 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. ஒரு சுற்றுக்கு 84 இயந்திரங்கள் வீதம் (6 அரங்குகளில் தலா 14 இயந்திரங்கள்) 18 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என கணக்கிடப்படுகிறது.
வெடிகுண்டு கண்டறியும் உபகரணங்கள்:
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையத்தில் வெடிகுண்டு கண்டறியும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தவிர நுழைவு வாயில், ஒவ்வொரு வாக்குப் பதிவு எண்ணும் மையம் முன்பு 7 மெடல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனும திக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகிறவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் பணி என்ன என்று விளக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி.நடராசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் அடிக்கடி சென்று ஆய்வு செய்து
வருகின்றனர்.

No comments:
Post a Comment