Friday 29 November 2013


கொடிநகர் ஜனாசா 28/11/2013


நமதூர் தெற்கு தெரு சூபி வீட்டு அப்துல் மஜீத் அவர்களின் மகனார் நூருல் அமீனின் கைக்குழந்தை நடு கொத்த தெருவில் மௌத் .

ஜனாசா நல்லடக்கம் அசார் தொழுகைக்கு பிறகு மாலை 4:45 மணிக்கு    

மேலதெரு பள்ளிவாசல்



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நகரசபை கூட்டத்தில் கோரிக்கை

திருவாரூரில்

கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

நகரசபை கூட்டத்தில் கோரிக்கை


திருவாரூர், நவ.26-

திருவாரூரில் கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நகரசபை கூட்டம்

திருவாரூர் நகராட்சி கூட் டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் ரவிச்சந் திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில், நகராட்சி ஆணையர் தர்ம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

ஜாகீர்உசேன்(காங்கிரஸ்):-

கொடிக்கால்பாளையம் பள்ளிக்கூடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு டெண் டர் விடப்பட்டும் பணிகளை தொடங்கவில்லை.

ஆர்.டி.மூர்த்தி (அ.தி. மு.க.):- திருவாரூர் நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதற்கு அனைத்து வார்டு களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மடப்புரம் சம்பத் (காங்கி ரஸ்):- திருவாரூர் பேட்டையில் குடியிருக்கும் துப்பரவு பணி யார்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

கோமாரி நோய்

செந்தில் (துணைத்தலை வர்):- நாய் தொல்லை அதிக மாக உள்ளது. வெறி நாயால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ஜமால்முகமது(தி.மு.க.):-

கோமாரி நோயால் மாடுகள் பாதிக்கபட்டு வருகின்றன. கோமாரி நோயை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரதராஜன்(சுயேச்சை):- ராமநாதன் நகரில் சாலை மிகவும் பழதடைந்து உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோகன் (தி.மு.க.):- கிடாரங்கொண்டான் பை-பாஸ் சாலையை மேடு, பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும். திருவாரூர் பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்தோடும் வகையில் வடிக்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.

ரவிச்சந்திரன் (தலைவர்):-

திருவாரூர் நகரில் 15 நாட் களில் ஆக்கிரமிப்புகள் அகற் றப்படும். உறுப்பினர் களின் கோரிக்கைகள் அனைத்தை யும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Sunday 24 November 2013

Kodikkalpalayam - பைத்துல் மால் அமைப்பது தொடர்பாக கூட்டம்

முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மகாஸும் மகாலில் பைத்துல் மால் அமைப்பது தொடர்பாக கூட்டம் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில் 24/11/2013 அன்று நடைபெற்றது ,இதில் பள்ளிவாசல் இமாம் அப்துல் நாசர் அவர்கள் துவக்க உரை ஆற்றினர்.தலைவராக பஜில் முஹம்மது அவர்களும் செயலாளராக முத்தார் ஹுசைன் அவர்களும் பொருளாளராக பஷீர் அஹமது ,ஹாஜா அலாவுதீன் அவர்களும் மற்றும் 15 நிருவாக குழு உறுப்பினர்களும் தேர்தேடுக்கபட்டனர்,இதில் பொது மக்கள் ஏரளமானவர்கள் கலந்து கொண்டார்கள்


பைக் மூலம் நீர் இறைக்கும் பம்ப் செட்!


மின்சாரத்தின் உதவியின்றி, 'பைக்' மூலம் நீர் இறைக்கும், 'பம்ப் செட்'டை உருவாக்கிய கல்லூரி மாணவன், ஷேக் அமினுதீன்: நான், நாகப்பட்டினத்தில் உள்ள, இ.ஜி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவன். கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை இல்லாததால், விவசாயிகள் கிணற்றுப் பாசனத்திற்கு மாறினர். ஆனால், கடுமையான மின்வெட்டு காரணமாக, சரிவர நீர் இறைக்க முடியாமல் பயிர்கள் கருகியதால், பல ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்தது.ஓரளவு வசதியுள்ள விவசாயிகள், டீசல் மோட்டார் மூலம் நீர் இறைத்து, விவசாயம் செய்து வரும் நிலையில், டீசலின் விலையும் அதிகரித்ததால், இப்பிரச்னைக்கு தீ்ர்வு காண முயற்சித்தேன். இதன் பயனாக, மின்சார மோட்டாருக்கு மாற்றாக, இருசக்கர மோட்டார் சைக்கிள் உதவியுடன், நீர் இறைக்கும் பம்ப் செட்டை, நண்பர்கள் உதவியுடன் கண்டுபிடித்தேன்.நீர் இறைக்க வேண்டிய இடத்தில், பைக்குடன், பம்ப் செட்டையும் இணைத்தால், 40 முதல், 50 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை இறைக்கலாம். 10 நிமிடத்திலேயே பைக்கையும், பம்ப் செட்டையும் எளிதில் இணைக்கும் வகையில் உருவாக்கியுள்ளதால், கூடுதல் இணைப்பை கழற்றி, மாட்டுவதில் பிரச்னை இருக்காது.பைக்கில் உள்ள, 'செயின் ஸ்பிராக்கெட்'டுடன் கூடுதலாக மற்றொரு செயின் ஸ்பிராக்கெட் இணைக்கப்பட்டுள்ளதால், பைக்கை இயக்குவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. மேலும், குறைந்த சுழற்சியில் அதிக அளவு தண்ணீரை இறைக்கும் வகையில், பம்ப் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பம்ப்பை, மாற்றம் செய்யப்பட்ட பைக்குடன் இணைத்து, பைக்கை ஸ்டார்ட் செய்தால், பம்ப் செட் நீர் இறைக்க துவங்கும். இந்த பம்ப் செட்டின் மொத்த எடை, 10 கிலோ என்பதால், எளிதில் எங்கும் தூக்கி செல்லலாம். 1 லிட்டர் பெட்ரோல் மூலம், 2 மணி நேரத்தில், 72 ஆயிரம் லிட்டர் தண்ணீரை இறைக்கலாம். ஆனால், டீசல் மோட்டரில், 2 மணி நேரத்தில், 60 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மட்டுமே இறைக்க முடியும். இக்கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகள் தாங்கள் ஓட்டும் பைக்கை இனி, 'டூ இன் ஒன்னாக' பயன்படுத்தலாம். தொடர்புக்கு: 98943 54438

Saturday 23 November 2013

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு –23/11/2013


நமதூர் வடக்குத்தெரு மு அப்துல் வாஹிது அவர்களின் மனைவியும் AMS கேப்ஸ் முஹம்மது ஷாஜஹான் அவர்களின் தாயாருமான முத்தாச்சி என்கிற பாத்தமுத்து ஜொகாரன் அவர்கள் மௌத் .

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின்  ஜனாஸா  கொடிக்கால்பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

Sunday 17 November 2013

நமதூர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாழ் அன்பர்கள் கவனத்திற்கு ..

...

இன்ஷா அல்லாஹ் வரும் 24/11/2013 அன்று பைத்துல் மால் அமைக்க சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது .தங்களின் வருகையை உறுதி செய்து ஜாகத், சதக்க மற்றும் நன்கொடைகளை அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .

Saturday 16 November 2013

அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் நலக் குறைவு காரணமாக புது டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Tuesday 12 November 2013

அன்புடன் வரவேற்கிறது

நமதூரில் இருந்து இந்த ஆண்டு தமிழ் நாடு ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் சென்ற புனித பயணிகள் இன்ஷாஅல்லாஹ் 13/11/2013 அன்று தாயகம் திரும்புகிறார்கள் . தங்களின் இறுதி கடமையை நிறைவேற்றி விட்டு வரும் ஹாஜிகளை அன்புடன் வரவேற்கிறது கொடிநகர் டைம்ஸ் ...

தமிழக அரசு அறிவிப்பு

 முஹர்ரம் 10 ம் நாள் வரும் வெள்ளிக்கிழமை 15/11/2013 அன்று விடுமுறை யாக மற்ற பட்டுள்ளது .முன்னர் வியாழன் 14/11/2013 விடுமுறையாக இருந்தது

கொடிநகர் ஜனாசா அறிவிப்பு 12/11/2013.

                              நமதூர் கணக்குபிள்ளை வீட்டு மர்ஹும் இஷாக் அவர்களின் மகனாரும் குத்புதீன் ,நஜுபுதீன், சர்புதீன் இவர்களின் தகப்பனாரும் ,  நமதுரின் சிறப்புகளை சொல்லும் ' சிரார் கொடிநகர்' நூலின் ஆசிரியரும் , நமதுரின் முதல் வணிகவியல் பட்டதாரியுமான இ . இலியாஸ் அவர்கள்  புதுமனைத்தெருவில் மௌத் .                                                                                   

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.                                        

அன்னாரின் ஜனாசா 12/11/2013 செவ்வாய்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கதலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்