Thursday 28 February 2019

#திருவாரூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது





காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்:திருவாரூர் புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததுகலெக்டர் ஆனந்த் குத்துவிளக்கேற்றினார்

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்து போதிய வசதிகள் இன்றி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருக்கம், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணங்களால் பிரதான சாலையில் இருந்த பஸ் நிலையம் நெரிசலில் சிக்கி தவித்தது. இதனையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு திருவாரூர் விளமலில் புதிய பஸ் நிலையத்திற்கு 11.08 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 2013-ம் ஆண்டு பஸ் நிலையம் கட்டுமானம் தொடங்கி கடந்த 6 ஆண்டு களாக நடைபெற்று நிறைவு பெற்றது.


இதனையடுத்து புதிய பஸ் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திருவாரூர் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் குத்துவிளக்கேற்றி வைத்தார். புதிய பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரப்பட்டது.


இந்த பஸ் நிலையமானது 35 பஸ் நிறுத்தங்கள், 60 வணிக கடைகள், 2 உணவகங்கள், ஒரு பயணியர் காத்திருப்பு அறை, காவலர் கட்டுப்பாட்டு அறை, நேரகட்டுப்பாட்டு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் அறை, கழிவறைகள் போன்ற அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் மூலம் தினசரி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்பெறுவார்கள் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

Wednesday 27 February 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 27/02/2019*




*


நமதூர் மலாயத்தெரு மர்ஹூம் ஹாஜி தா.மு.மு.ஜெய்னுலாபுதீன் அவர்களின் சம்மந்தியும் 52 பணப்பகுதி நகர் ஹாஜா பஹ்ருதீன் அவர்களின் தாயாருமான ஹாஜியா பாத்திமா பீவி அம்மாள் அவர்கள் பிராக்கிராமம் மேலத்தெரு தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 8 மணிக்கு பிராக்கிராமத்தில் நடைபெறும்.

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

#திருவாரூர் புதிய பேருந்து நிலையம் இன்று முதல்வர் பழனிச்சாமி திறந்து வைக்கிறார்




 *நீண்ட  காலமாக நடைப்பெற்று வந்த திருவாரூர் புதிய பேருந்து நிலையம் நாளை 27/02/2019 காலை 11 மணிக்கு காணோலி காட்சி முலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்* .

 *இதன்முலமாக நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி எல்லைக்குள் தியாகபெருமநல்லூரில் அமையப்பெற்றுள்ளது.*

 🔈 *உபயோகமான தகவல்கள்* 🔈

Tuesday 26 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 26/02/2019







நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் ஹாஜி .மு.இ.மு.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் ,மர்ஹூம் முஹம்மது அபுசாலி,ஜமால் முஹம்மது, அப்துல் பத்தாஹ் ,முஹம்மது தம்பி ஆகியோர்களின் சகோதரும், ஹாஜி M.ஷேக் முஹம்மது அவர்களின் மச்சானுமாகிய  ஹாஜி A.J.முஹம்மது அலி அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா  இன்று இரவு 7.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

26/02/2019.

Monday 25 February 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 25.02.2019



 *

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் செ.மு.மு.கலிலூர் ரஹ்மான் அவர்களின் சகலரும், அடியக்கமங்கலம் புதுமனைத் தெரு மர்ஹும். V. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும்,  A. முஹம்மது சேக் முஜாவிர், A. முஹம்மது ஆசிப்  இவர்களின் தகப்பனாருமான ஹாஜி. *V.M.அமானுல்லா* அவர்கள் சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் 25/02/2019 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நடைபெற உள்ளது.

Sunday 24 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 24/02/2019



நமதூர் வடக்கு தெரு நூல்காரவீட்டு மர்ஹும் தெ.முஹம்மது சாலியா அவர்களின் மகனும், மர்ஹும் M.இமாம் மற்றும் M.ஜெஹபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய T.M.முஹம்மது அலி அவர்கள் பிராகிராமத்தில் மௌத். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்த நாள்


சாலை விபத்தில் அதிமுக விழுப்புரம் எம்.பி ராஜேந்திரன் மரணம்


Wednesday 20 February 2019

#நாடாளுமன்றதேர்தல்2019 -அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

இதனால் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன. கிட்டத்தட்ட தி.மு.க. தனது அணியை இறுதி செய்து விட்ட நிலையில், அ.தி.மு.க. அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பாரதீய ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தமிழக பாரதீய ஜனதா கூட்டணி பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பக்கம் சாய்ந்த பா.ம.க.

இதைத்தொடர்ந்து பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. தரப்பில் முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க. தரப்பில் துரைமுருகனும், கனிமொழி எம்.பி. யும் மாறி, மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், பா.ம.க. எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, தியாகராயநகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி ஏற்படுவது உறுதியானது.

அ.தி.மு.க. கூட்டணியில் சேரவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து, கூட்டணியை உறுதி செய்யவும் டாக்டர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுவான இடத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்களை உறுதி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் இரு தரப்பு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

டாக்டர் ராமதாஸ்

அதன்படி நேற்று காலை 10.20 மணிக்கு அந்த ஓட்டலுக்கு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வந்தனர்.

அவர்களை தொடர்ந்து 10.28 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, வரவேற்றனர். பின்னர் அவர்கள் தனி அறையில் சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள்

பா.ம.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள், எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பா.ம.க.வுக்கு 7 இடங்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டணி உடன்பாடு தொடர்பான அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இடைத்தேர்தலில் ஆதரவு

நடைபெற உள்ள 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ம.க. வும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பா.ம.க.வுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 2019-ம் ஆண்டில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பா.ம.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அவர் கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, அ.தி.மு.க- பா.ம.க. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்கள் குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நல்ல முடிவு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இணைந்து மெகா கூட்டணியாக, வெற்றி கூட்டணியாக ஒரு கூட்டணி அமைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை சந்திப்பது என்று ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பா.ம.க. முழு ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் இணைந்து ஏகமனதாக இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்

பா.ம.க.வை தொடர்ந்து மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா கூட்டணி பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன், அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீட்டு குறித்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

பகல் 2.30 மணிக்கு தொடங்கி, மாலை 4.45 மணி வரை நீண்ட நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற் கான ஒப்பந்தத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தே.மு.தி.க.வுடன் இழுபறி

அதன்பிறகு, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் நேற்று மாலை ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

விஜயகாந்தை சந்தித்து பேசிய பின் பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்றும், அவரிடம் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.

புதிய தமிழகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக முடிந்த பிறகு, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

Monday 18 February 2019

கொடிக்கால்பாளையம் அயோஸிசேஷன் சிங்கப்பூர் திறப்புவிழா


வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 18/02/2019



நமதூர் காடைவீட்டு மர்ஹும் முஹம்மது யூனுஸ் அவர்களின் மனைவியும் ,  ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்களின் தாயார் மைமூன் பீவீ அவர்கள் சிங்கப்பூரில்  மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Sunday 17 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 17/02/2019



நமதூர் நடுத்தெரு கமாலுதீன் (டீ கடை), அமானுல்லா அவர்களின் மச்சானும் அடியக்கமங்கலம் பண்டாரி ஜப்பார் அவர்களின் மகனாருமாகிய அப்துல் ஹமீது அவர்கள்  சூஃபி நகர் தெற்கு தெருவில் மௌத்.

இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மாற்றம் புதிய ஆட்சியர் ஆனந்த் நியமனம்

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

* ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவம்,ஹோமியோபதி இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, கோவை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

* திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு குடிநீர்,வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் திருவாரூர் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday 16 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 16/02/2019



நமதூர் பள்ளிவாசல் தெரு மாங்குடியார்வீட்டு P. சுல்தான் மெய்தீன் அவர்களின் அண்ணனும்,  குத்புதீன், நிஜாமுதீன் இவர்களின் தகப்பனாருமாகிய P. அப்துல் காதர் அவர்கள் மௌத்.

இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Friday 15 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 15/02/2019

நமதூர் ராமகே ரோடு ரஹ்மத்நகர் கெடிக்கார வீடு சலாவுதீன் சலீம் இவர்களின் தாயார் ஜெய்புன்னிசா அவர்கள் மௌத்
இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Wednesday 13 February 2019

கொடிக்கால்பாளையம் மத்லபுல் கைராத் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

☪ *KOM NEWS ONLY* 🕌


நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் ஆளுகைக்கு உட்பட்ட மத்லபுல் கைராத் கல்வி குழுமத்தின் புதிய நிர்வாகிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மஹாஜனசபை கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்கள். இன்று காலையில் புதிய நிர்வாக குழு தலைவர் முத்துவாப்பா என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களும் செயலாளர் ஹாஜா முஹம்மது நத்தர் அவர்களும் பொருளாளர் முஹம்மது ஹாரிஸ் அவர்களும் நிர்வாக குழு உறுப்பினர்கள் துல்பக்கீர் ,ஹாஜா நஜூபுதீன் ,முஹம்மது ஜான் ,முஹம்மது சர்புதீன் ஆகியோர்கள் தாங்களின் பொறுப்புகளை ஏற்று கொண்டனர். இதில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் ,செயலாளர் முஹிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ் ,பொருளாளர் முக்தார் உசேன் ,52 பணப்பகுதி பொருளாளர் முஹம்மது அன்சாரி , தினாஇப்ராஹிம்ஷா ராவுத்தர் வக்ப் எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி இனாயத்துல்லா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

13/02/2019

Tuesday 12 February 2019

வெளியூர் மௌத் அறிவிப்பு 12/02/2019



நமதூர் தெற்கு தெரு A.பஜாலுதீன் அவர்களின் சகோதரர் மர்ஹூம் முஹம்மது அய்யூப் அவர்களின் மனைவியும் அப்துல் அலீம் அன்வர் உசேன் ஜமால் முஹம்மது ஆகியோர்களின் தாயாருமான ஹலீமா பீவி  அவர்கள் கூத்தூர் தெற்கு தெருவில் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா 12/02/2019 செவ்வாய் காலை 11 மணிக்கு கூத்தூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

Monday 11 February 2019

மத்லபுல் கைராத் கல்வி குழும புதிய நிர்வாக குழு தேர்வு



நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜமாஅத் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ,துணைத்தலைவர் ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகஸ்தர்கள் பிரதிநிதிகள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளிவாசல் தளவாட பொருட்கள் 20 சதவீதம் கமிஷன் அடிப்படையில் ஜமாஅத் நிர்வாகிக்க வேண்டியது என்றும், மஃஸூம் மஹாலில் பெண்களுக்கு தனியாக பள்ளிவாசல் தெருவில் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது என்றும் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் அவர்களின் கடந்த ஆண்டு தேர்தல் வழக்கு செலவு தொகையில் சென்ற மஹாஜன சபை தீர்மானப்படி செயல்படுவது என்றும் கிளை நூலகம் அமைக்க ஜமாஅத் இடம் தருவதில்லை என்றும் E.K.M.S பஷீருதீன் அவர்களின் மனுவை போதிய கையொப்பம் இட்ட ஜமாஅத்தார்கள் இல்லாததால் நிராகரிக்க ப்பட்டது

மத்லபுல் கைராத் கல்வி குழும்ம புதிய நிர்வாக குழு தேர்வு செய்ய ப்பட்டது.

*மத்லபுல் ஹைராத் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட நிருவாகிகள்*

*தலைவர்*
*சுல்தான் அப்துல் காதர்(முத்துவாப்பா)*

*செயலாளர்*
*ஹாஜா முஹம்மது நத்தர்*

*பொருளாளர்*
*முஹம்மது ஹாரிஸ்*

*நிர்வாக குழு உறுப்பினர்கள்*

*1. துல்பக்கிர்*
*2. முஹம்மது ஜான்*
*3.  நஜிமுதீன்*
*4. முஹம்மது சர்புதீன்*

*KOM NEWS ONLY*

Saturday 9 February 2019

கொடிக்கால்பாளையம் ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் அழைப்பு

☪ *KOM NEWS ONLY* 🕌

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபைக்கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 10/02/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஆதம் தலைமையில் நடைபெற உள்ளது. பல முக்கிய பொருட்களை பற்றிய ஆலோசனை செய்ய உள்ளதால்  ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.


08/02/2019

Tuesday 5 February 2019

நாகூர் தர்காவில் 462வது கந்தூரி விழா.

நாகூர் தர்கா பெரிய கந்தூரி மகோற்சவ சந்தனக்கூடு திருவிழாவிற்கு 20 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, நாகூர் தர்கா நிர்வாகி திரு.கே.அலாவுதின் அவர்களிடம் வழங்கினார். 

Sunday 3 February 2019

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும் - மத்திய அரசு தகவல்

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நினைவாக நேற்று சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதை மத்திய தொலைத்தொடர்புத்துறை இணை மந்திரி மனோஜ் சின்கா வெளியிட்டு பேசினார். அப்போது அவர், அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும் எனக்கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பாஸ்போர்ட்டுக்காக யாரும் 50 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பது பிரதமர் மோடியின் விருப்பம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி ஏராளமான தொகுதிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் இந்த மாத இறுதிக்குள் பாஸ்போர்ட் மையங்கள் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு வரை 77 பாஸ்போர்ட் மையங்கள் இருந்ததாக கூறிய மனோஜ் சின்கா, தற்போது 300-க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.


Friday 1 February 2019

நமதூர் மௌத் அறிவிப்பு 01/02/2019

நமதூர் மலாயத்தெரு பொட்டுகடலை வீட்டு மர்ஹூம் S.S.ஜான் முஹம்மது அவர்களின் மனைவியும், பஷீர் அஹமது,பஜூருல்லா ,நூர் முஹம்மது ,ரஹ்மத்துல்லா ஆகியோர்களின் தாயாரும்,ஆட்டோ பீர்முஹம்மது அவர்களின் மாமியாருமான ராபியத்து பீவி அவர்கள் M.M.I.நகர் தனது இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா சனிக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருது ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து பேசினார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.79 கோடியில் இருந்து 6.68 கோடியாக அதிகரித்து உள்ளது. 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர். 

* வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியில் இருந்து 12 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 

* நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும்  அந்தத் துறை அறிவிப்பின் போது அறிவிக்கப்படவில்லை. பின்னர்  உறுப்பினர்களின் கைத்தட்டலுடன்  இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என பியூஸ் கோயல் அறிவித்தார்.