Wednesday 27 January 2021

நமதூர் நிக்காஹ் 28.01.2021


 

#TNelections2021 | தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

 *



தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்: 17 மாவட்ட அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி* தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி தொடங்குகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை பணிகளை தமிழக தேர்தல் துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜன.20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுதவிர, தமிழகத்தில் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் பட்டியலிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஒரு தொகுதிக்கு 4 பேர் வீதம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ளவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 17 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 116 தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் சான்றளித்தல் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ இந்த பயிற்சியை இன்று தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, இதரமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி திருச்சியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday 23 January 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 23.01.2021 முஹபத்துன்னிசா

நமதூர் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹும் கோ.மு.சா.முஹம்மது யாசின் அவர்களின் மகளாரும், Y.M.ஜபருல்லா, Y.செய்யது ஷேக் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், முஹம்மது அபூபக்கர் அவர்களின் மனைவியும், M.குத்புன்நியாஸ் அவர்களின் தாயாருமான   முஹபத்துன்னிஸா அவர்கள் மௌத். 




 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.. 


 இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்..

Wednesday 20 January 2021

நமதூர் மௌத் அறிவிப்பு 20.01.2021

 *ஜனாஸா அறிவிப்பு*


*நமதூர் வேப்பமரத்தார் வீட்டு மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் பேரனும், மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகனாரும், மர்ஹும் ஜெய்னுல்  ஆபிதீன் அவர்களின் மருமகனும், அன்வர் சாதாத்  அவர்களின் மைத்துனருமான *ஷேக் தாவுத்* *அவர்கள் M.M.I. நகரில் மௌத்.* 


அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு   கீழத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிஊன்.

#TNElections2021 : இறுதி வாக்களார் பட்டியல் வெளியானது!

 #BREAKING | 


தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.26 கோடி - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு 


Sunday 17 January 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு 17.01.2021

 நமதூர் பள்ளிக்கூடத்தெரு இமாமுதீன் அவர்களின் மைத்துனரும் , இ.அஹமது லாபீர் அவர்களின் மாமனாரும், அடியக்கமங்கலம் பட்டக்கால்தெரு “நானாச்சி வீட்டு”(மர்ஹும்)க.நூ.மு.செய்யது அபூபக்கர் அவர்களின் மூத்த மகனும்,S.A.நூருல்லாஹ் அவர்களின் சகோதரரும்,H.அப்துல் மாலிக்,H.ஹாஜா மெய்தீன் ஆகியோர்களின் தகப்பனாருமான S.A.ஹாஜாத்துல்லாஹ் அவர்கள் பட்டக்கால்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்


. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 


 நல்லடக்க நேரம் இன்று இரவு 7 மணிக்கு

நமதூர் ஜனாஸா அறிவிப்பு* 17.01.2021 



நமதூர் வடக்கு தெரு மர்ஹூம் T.K.M.அப்துல் காதர் அவர்களின் பேரனும், A.யூசுப்தீன் அவர்களின் மகனார் சபா அஹமது அவர்கள் மௌத்.*

 *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்*


 *நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கபடும்*

நிக்காஹ் தகவல் 17.01.2021


 

Friday 8 January 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு.

 கொடிக்கால் பாளையம் நடுத்தெரு, மர்ஹும் முஹம்மது அலி மரைக்காயர் அவர்களின் மச்சானும், த.மு.மு.க மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி அவர்களின் தகப்பனாருமான *S.N.ஜெய்னுல் ஆபிதீன்* அவர்கள் சென்னையில் மௌத். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்

அன்னாரது ஜனாசா இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால் பாளையம்

Wednesday 6 January 2021

தைப்பூசம் பொது விடுமுறை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு


 

 வெளியூர் மௌத் அறிவிப்பு 06.01.2021



 நமதூர் காட்டுப்பள்ளி தெரு கருத்துணி வீட்டு முஹம்மது இணாயத்துல்லா அவர்களின் மைத்துனரும். கலிபுல்லா, பயாஸ் ஆகியோரின் தாய்மாமாவாகிய அப்துல் வாஹிது அவர்கள் குருக்கத்தியில் மௌத்.. 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு குருக்கத்தியில் நல்லடக்கம் செய்யப்படும்

Tuesday 5 January 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 *இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*. 


நமதூர் சூபி நகர் பட்டிக்காரவீட்டு மர்ஹும் ப.ஜா.மு. அப்துல் பத்தாஹ் அவர்களின் சம்மந்தரும் A. ஹாரூன் ரஷீத் அவர்களின் மாமனாரும் H. ரஹ்மதுல்லா H. தௌபீக் H. ஹாலித் ஆகியோரின் பாட்டானாரும் ஆகிய H. முகமது இபுறாஹிம் அவர்கள் புதுமனை தெரு *தீன் காலனியில்* மௌத்

 அன்னாரின் ஜனாஸா பகல் 12.00மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

Sunday 3 January 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு 03/01/2021 

நமதூர் நடுத்தெரு போஸ்ட் துரை என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகன் சபியூதீன் அவர்களின் பாட்டியாரும் அடியக்கமங்கலம் பட்டக்கால்தெரு நாட்டக்காரவீட்டு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், S.குத்புதீன், மர்ஹும் S.நஜ்முதீன் ஆகியோர்களின் தாயாரும், ’மர்ஹும்’ கியாஸுதீன், ஹாரூன் ரஷீது, காட்டூர் ஜெஹபர்தீன் இவர்களின் மாமியாருமான ‘செவத்தாச்சி’என்கிற உம்முல் பஜ்ரியா அவர்கள் அடியக்கமங்கலம் ரஹ்மாணியாத்தெரு தனது இல்லத்தில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday 2 January 2021

மௌத் அறிவிப்பு ரம்ஜான் பீவி



 நமதூர் சூபி நகர் நடுத்தெரு மர்ஹூம் முன்னால் தலையாரி அப்துல் வஹாப் அவர்களின் மகளாரும் பாவா பக்ருதீன் அவர்களின் மனைவியும் ரிஸ்வாத் மன்னர். ரிஜ்வான். ஆகியோரின் தாயாரும் ஆட்டோ பாஷா அவர்களின் சகோதரியுமான ரம்ஜான் பீவீ அவர்கள் மலாயாத்தெரு சிராஜ் காலனியில் வஃபாத்தாகிவிட்டார்கள்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை5மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.