Wednesday, 30 April 2014

Kodikkalpalayam -லேசான கோடை மழை           திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று 30/04/2014 நண்பகல் 12.15 முதல் லேசான கோடை மழை பெய்தது . இதனால்
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடும் வெப்பம் சற்று தணிந்து இருந்தது .


நமது முஹ்யிதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் சிறப்பு மழை தொழுகை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது .இன்ஷா அல்லாஹ் விரைவில் பெருமழை பொழிந்து மண்ணையும் மக்களையும் குளிர்விக்க வும் என எதிர்பார்கிறோம்
 

கழிவுநீரிலிருந்து மின்சாரம், உரம்: வேளாண் பல்கலை கண்டுபிடிப்பு

நகரின் பிரச்சினைகளுக்கு மூல ஆதாரமாக விளங்குவது சாக்கடையும், குப்பைகளும்தான். அதை சமாளிக்க அரசின் திட்டங்களும், கண்டுபிடிப்புகளும் நாளுக்கு ஒன்றாய் வெளிவருகின்றன. ஆனால் அதிக செலவு, நீடிக்காத உழைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாதியிலேயே பயனற்று விடுகின்றன.
ஆனால், கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீப காலமாக மிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதில் புது முயற்சியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது, கழிவுநீரிலிருந்து மின்சாரம் மற்றும் உரத்தை தயாரித்து, வெளியேற்றும் சுத்திகரித்த நீர் விவசாயத்திற்கும், கழிவுநீர் தேங்காததால் சூழலுக்கு ஏற்படும் பாதுகாப்பு என நான்கு வித நன்மைகள்,
ஒரே திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 
வேளாண் பொறியியல் கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் உயிர் சக்தித் துறை சார்பில் கழிவுநீரிலிருந்து நொதித்தல் முறையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. துறை பேராசிரியர்களின் 6 வருட முயற்சியால் இதற்கான கருவி கண்டறியப்பட்டு, வெற்றிகரமாக சிறு குறு தொழில்நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இது குறித்து உயிர் சக்தித் துறை தலைவர் டாக்டர் எஸ்.காமராஜ் கூறுகையில்,
 
பெரும்பாலான பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏரேட்டர் எனப்படும், காற்று கழிவுகளோடு இணைந்து உயிரியல் மாற்றம் ஏற்படுத்தும் முறையை பின்பற்றுகின்றன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் தடையில்லா மின்சாரம் தேவைப்படுகிறது.
நாங்கள் தயாரித்துள்ள இந்த திட்டத்தில், கழிவு நீரை, காற்றில்லாத நிலையில் நொதித்தல் முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. அதில் வெளிப்படும் மீத்தேன் வாயுவைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இதில், கழிவுநீரை சுத்திகரிக்க சில மணி நேரங்கள் தான் ஆகின்றன. சிறிய அளவில் பொருத்த ரூ.1 லட்சமும், பெரிய நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
 
20 ஆண்டுகள் இயங்கும் வகையில் இதனை வடிவமைத்துள்ளோம். தற்போது உடுமலை அருகே உள்ள காகித ஆலைக்கு இந்த கருவி பொருத்தியுள்ளோம். விரைவில், பல்கலைக்கழக வளாகத்தில் முழு அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம் என்றார்.

Tuesday, 29 April 2014

Kodikkalpalayam நகராட்சி துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா

நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் 28/4/2014 அன்று நடைபெற்ற ஆண்டு விழா
 
 
 

கோடைகால உடல் உபாதைகளை தடுக்க சிக்கன், மட்டனை தவிர்க்க வேண்டும்: டாக்டர் அறிவுரைகோடைகாலத்தில் உடல் உபாதைகள், சரும நோய்களை தடுக்க சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் சாப்பிடு வதை தவிர்க்க வேண்டும் என அரசு டாக்டர் கே.மனோகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவநிலை மாற் றத்தால், வழக்கமாக பெய்யும் பருவ மழையும் சரியாக பெய்யவில்லை. இதனால், கோடைக்காலம் தொடங்கு வதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் ஒரு புறம் இருந்தால், அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் சரும நோய்கள் மற்றொரு புறம் பாடுபடுத்த தொடங்கிவிடுகிறது.
 
சரும நோய்கள்:
 
இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சருமநோய் துறை தலைவர் கே.மனோகரன் கூறியதாவது: வெயிலில் வெளியே சென்றால், உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதனால் வியர்வையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு, கட்டிகள், அரிப்பு, அழுக்கு தேமல் போன்றவைகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது தாக்கினால், தோல்கள் கருப்பாக மாறிவிடும்.
வெயிலால் ஏற்படும் பாதிப்பு கள் குறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகளை அதிகமாக குடிக்க வேண்டும். உணவில் அதிகமாக காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீன் சாப்பிடலாம். முடிந்தவரை மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. இதனால், வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்க முடியும்.
 
குழந்தைகள் பாதுகாப்பு:
 
கோடைக் காலத்தில் பெரியவர்களைவிட, குழந்தை களே அதிகமாக பாதிக்கப்படுகின் றனர். எனவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது துணியால் மூடி அழைத்து செல்ல வேண்டும். இதனால், சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும். அதே போல வீட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகளை போடக்கூடாது.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Monday, 28 April 2014

மக்கள் என்ன இளிச்சவாயர்களா?

தேர்தல் முடிந்ததும் அடி விழ ஆரம்பித்துவிட்டது. தமிழக மின் வாரியத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி இழப்புச் செய்தியை வேறு எப்படிப் பார்ப்பது?
 
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கி மின்வெட்டுத் துயரத்தைத் தமிழக மக்கள் எதிர்கொள்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்சினைதான் தி.மு.க-வை ஆட்சியிலிருந்து விரட்டியது. ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டுப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்படும் என்று ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை உறுதியளித்த அ.தி.மு.க. தலைமையால், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.
 
“ஐந்தாண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படாததால், மின்வாரியத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் திவாலாகும் நிலையில் இருக்கிறது. வங்கிகளின் கடனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை” என்றெல்லாம் அப்போது காரணங்கள் சொல்லப்பட்டன. இந்தக் கட்டண உயர்வு மிக அதிகம் என்று மக்கள் கூக்குரலிட்டபோது, “இனி மின்கட்டண உயர்வு இருக்காது, மின்வெட்டும் நீங்கி மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற்றப்படும்” என்று ஆட்சியாளர்கள் அப்போது உறுதியளித்ததாக நினைவு.
 
இன்றைய நிலை என்ன? மூன்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் வட்டத்தின் அதே புள்ளியில் அரசும் மின்வாரியமும் சந்திக்கின்றன. பிரச்சினை ஒன்றுதான். மாற்றுப் பாதையை யோசிக்காத வரை தீர்வுகளையும் யோசிக்க முடியாது. தி.மு.க. அரசு எங்கே தவறிழைத்தது? கூவிக்கூவி பெருநிறுவனங்களை அழைத்தது. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது. தொழிற்சாலைகள் பெருகிய நிலையில், அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், தேவைக்கேற்ப உற்பத்திக்குத் திட்டமிடாமல் மக்கள் தலையிலும் விவசாயிகள் - சிறு குறுந்தொழிலகங்கள் தலையிலும் கை வைத்தது. அ.தி.மு.க. அரசும் அதே தவறைத்தான் செய்கிறது. தேவைக்கேற்ப உற்பத்தி பெருக்கப்படாத நிலையில், தேவையை மேலும் பெருக்குகிறது; மின்நுகர்வில் கட்டுப்பாடும் இல்லை. ஆக, அதே பாதை, அதே பிரச்சினை.
 
தேசிய அளவிலேயே மின் உற்பத்தி பெரும் சவாலாக மாறிக்கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி, நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டிலும் நிலக்கரி உற்பத்தியிலும் நிலவும் குளறுபடிகள், நிலக்கரி மற்றும் நாப்தா போன்ற இடுபொருள்கள் விலை உயர்வு, வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதிசெய்ய ஆகும் கூடுதல் செலவு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, நிலக்கரியை அனல் மின்நிலையங்களுக்குக் கொண்டுசெல்லும் போக்குவரத்துச் செலவு உயர்வு என்று ஏகப்பட்ட பிரச்சினைகளால் மின்மிகை மாநிலங்களே கலங்கி நிற்கின்றன.
 
இந்நிலையில், மின் பற்றாக்குறை மாநிலமான தமிழகம் இந்த விஷயத்தில் காட்ட வேண்டிய கவனமும் அக்கறையும் அதிகம். மக்கள் காரணங்களை அல்ல; தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்!​

முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் புதிய வண்ணம் அடிக்கும் பணி

 
 
   நமது கொடிக்கால் பாளையம்  முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் ஊர்வின் முறை ஜமாஅத் ஜாமிவுல் மஸ்ஜித் கடந்த 2008 மே 23 அன்று வக்ப் திறப்பு விழா நடைபெற்றது.
   தற்போது  பள்ளிவாசலில் 6 ஆண்டு களுக்கு பின்   புதிய வண்ணம் அடிக்கும் பணி துவக்கி உள்ளது .

    நவீன முறையில்  இரும்பு கம்பியால் ஆன சாரங்கள் கொண்டு மினாராக்கள் பொலிவு பெற தற்போது வண்ணம் அடிக்கும் பணிகள் நடைபெற்று  வருகிறது .
 

Sunday, 27 April 2014

மேலத்தெரு பள்ளிவாசல் புதிய நிருவாகம் பொறுப்பேற்பு      நமதூர் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் ஊர் உறவின் முறை ஜமாஅத் புதிய நிருவாகம் அமைக்க இன்று காலை  9.30 மணிக்கு ஜமாஅத் மகாஜன சபை கூட்டம் தலைவர் அன்வருதீன் தலைமையில் நடைபெற்றது .இதில் கடந்த ஆண்டு வரவு செலவு அறிக்கை  மற்றும் இதர பொருள் குறிந்தும் விவாதிக்கப்பட்டன .

பின்னர் வரும் 3/5/2014 அன்றுடன் முடியும் தற்போதைய நிருவாகத்தை அடுத்து புதிய நிருவாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது .

இதில்

நாட்டாண்மை - ஜெயினுலாபுதீன்

செயலாளர்    -  முஹம்மது கஜ்ஜாலி

பொருளாளர்  -  முஹம்மது அபூபக்கர்

முத்தவல்லி -  ருக்னுதீன்

ஆடிட்டர்  -     கலிக்குல் ஜமான்

நிர்வாகஸ்தர்கள்

1. முஹம்மது ஜபுருல்லா

2.அன்வருதீன்

3.ஜியாவுதீன்

4.அன்சாரி

5.அமீர் அலி

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் .இறைவன் அருளால் புதிய நிருவாகம்
 பள்ளிவாசலுக்கும்
நமது ஜமாஅதுக்கும்
முன்மாதிரியாக செயல்பட்டு
 ஒற்றுமையான
ஜமாஅத் என பார் போற்றும்
வகையில் செயல்பட வல்ல
அல்லாஹுடம் துவா செய்கிறோம்  அமீன் ...


  

Kodikkalpalayam - பைத்துல்மால் அலுவலகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி


   நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் கடந்த 2014 ஜனவரி 1ம் நாள் முதல் நமதூரில் இஸ்லாமிய சட்ட விதிமுறையுடன் செயல்பட்டு வரும் பைத்துமால் அமைப்பு சீரிய முறையில் ஏழை எளிய மற்றும் சிறு தொழில் முதலிட்டு வாய்ப்பு என அனைவருக்கும் வட்டியில்லா கடன் வசதியை அளித்து வருவது நாம் அறிந்ததே .
பைத்துமால் அமைப்பு தற்போது பள்ளிவாசலில் உள்ள வடக்குப்புற மாக பள்ளிவாசல் தெரு வழியாக மகாசும் மஹாலில் அமைய பெற்று உள்ளது .இந்நிலையில் தெற்கு தெரு வில் MABHS சங்கம் அருகே உள்ள நமது ஜமாஅத்துக்கு சொந்தமான இடத்தில நிரந்தமான அலுவலகம் அமைக்க தேர்வு செய்ய பட்டுள்ளது .


  

இந்நிலையில்  இன்று 27/04/2014 காலை 8.30 மணிக்கு புதிய அலுவலகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் நமது ஜமாஅத் நிருவாகஸ்தர் கள் ,பிரதிநிதிகள் ,அங்கத்தினர்கள் ,பொதுமக்கள்
 என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்  -


கொடிக்கால்பாளையம்   பைத்துல்மால்    வளர்ச்சி அடைய உங்கள் ஜகாத் அல்லது சதக்க நிதிகளை அளித்து வட்டியில்லா கடன் முலமாக ஏழை எளிய மக்களை காக்க துணை நிற்க வேண்டும் .

இறைவன் அருளால் நிச்சயம் அமையும் இஸ்லாமிய வங்கி இன்ஷா அல்லாஹ் 

Saturday, 26 April 2014

நமதூர் மேலத்தெரு ஜமாஅத் அறிவிப்பு

    


நமதூர் மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் தின் நாட்டாண்மை உள்ளிட்ட  நிருவாகஸ்தர்கள் பதவிக்காலம்  வரும் 03/05/2014 அன்றுடன் முடிவடைகிறது .

எனவே இன்ஷா அல்லாஹ் வரும் 27/04/2014 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 9.30 மணிக்கு நமது பள்ளிவாசல் வளாகத்தில் மகாஜன சபை கூட்டம் நடைபெறுகிறது .

இதில் நமது ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய நிருவாகம் அமைக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .

Friday, 25 April 2014

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் மழை பொழிய வேண்டி தொழுகை


 
நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் இன்று 25/04/2014 ஜூம்மா தொழுகைக்கு பிறகு   கடும் கோடை கால வெயிலின் தாக்கத்தின் குறைக்கும் வான் மழை பொழிய வேண்டி எல்லா வல்ல இறைவனிடம்  ஜமாஅத்தாக  நபில்  தொழுகையை  பள்ளிவாசல் இமாம் அப்துல் நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இதில் அனைவரும் கலந்துகொண்டு
வல்ல இறைவனிடம் துவா செய்தார்கள்.

 சோதனை காலம் இல்லை இது வேதனை வந்த காலம் என்பதலால் வெப்பத்தின் தாக்கத்தின் குறைக்க மழை வளத்தை அதிகமாக  வழங்க வேண்டும் என்பது நமது பிராத்தனை செய்வோமாக  ஆமீன் ...

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 25/04/2014


நமதூர் காயிதே மில்லத் தெரு பாடகர் ஹாஜா  அவர்களின்  சகோதரர்  முஹம்மது ஆரிப் அவர்கள் அடியக்கமங்கலம் பள்ளிவாசல்  தெருவில் மௌத் .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா 25/04/2014 வெள்ளி  மாலை 3:30 மணிக்கு
அடியக்கமங்கலம் ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில்
நல்லடக்கம் செய்யபடுகிறது

Thursday, 24 April 2014

Kodikkalpalayam - நாகை தொகுதி வேட்பாளர்கள் ஓட்டு போட்ட புகைப்படம்


Kodikkalpalayam - நாகை தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குபதிவு இன்று 24/04/2014 காலை 7 மணி முதல் நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி யில் நடைபெற்றது .

இதில் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள் .வெப் கேமரா முலமாக நேரடியாக கண்காணிக்கபடுகிறது

நாகை தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 12,09,925
மொத்தம் வாக்குச்சாவடி 1425
வெப் கேமரா முலம் கண்காணிக்க படும் வாக்குச்சாவடி 380

இதில் நிலவரம் விபரம்


 காலை  9 மணிக்கு                    17 . 13 %

காலை  11 மணிக்கு                    37. 3 %

மதியம் 1 மணிக்கு                      53 %

மாலை 3 மணிக்கு                      62.4%

மாலை 5 மணிக்கு                         70    %

இறுதி பதிவு                                      77.83%

என மக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்

கொடிக்கால் பாளையத்தில் மதியம் நிலவரம் சுமார் 51 % வாக்குகள் பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தது .
கொடிக்கால் பாளையத்தில் வாக்குசாவடியில்

 மொத்தம் வாக்காளர்கள் 3310 இதில் 2098 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 62.5%சதவீதம் ஆகும்


 
நாகை தொகுதியில் இறுதி நிலவரம்
சட்டமன்ற தொகுதி வாரியா விபரம்
 தொகுதி                          மொத்த வாக்காளர்கள்                               பதிவான சதவிதம் 
163.நாகப்பட்டினம்               172439                                                          75%                              
  164.கீழ் வேளூர் தனி           156515                                                        82.92%
  165.வேதாரண்யம்                175298                                                        72.7%
  166. திருத்துறைப்பூண்டி தனி  216076                                              77.79%
  168.திருவாரூர்                         241979                                                    75.4%
  169.நன்னிலம்                            247618                                                  78%

 மொத்தம் வாக்காளர்கள் 1209925                                                      77.83%நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியில் 77.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் 6,05,857 ஆண்கள், 6,04,061 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 12,09,925 வாக்காளர்கள் உள்ளனர். வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இங்கு பதிவான வாக்குகள்:

நாகப்பட்டினம்: 61,941 ஆண்கள், 67420 பெண்கள் என 1,29,361 பேர் வாக்களித்துள்ளனர். சதவீதம் 75.02. கீழ்வேளூர் (தனி): 63,442 ஆண்கள், 66,419 பெண்கள் என மொத்தம் 1,29,861 பேர் வாக்களித்துள்ளனர். சதவீதம் 82.97.
வேதாரண்யம்: 63,343 ஆண்கள், 72,410 பெண்கள் என மொத்தம் 1,35,753 பேர் வாக்களித்துள்ளனர். 77.44 சதவீதம். திருத்துறைப்பூண்டி: 80,252 ஆண்கள், 87,756 பெண்கள் என மொத்தம் 1,68,008 பேர் வாக்களித்துள்ளனர். 77.75 சதவீதமாகும். திருவாரூர்: 88,378 ஆண்கள், 94,470 பெண்கள், திருநங்கைகள் இருவர் என மொத்தம் 1,82,850 பேர் வாக்களித்துள்ளனர். 75.56 சதவீதமாகும்.
நன்னிலம்: 95,365 ஆண்கள், 98,202 பெண்கள் என மொத்தம் 1,93,567 பேர் வாக்களித்துள்ளனர். சதவீதம் 78.17. நாகைத் தொகுதியில் மொத்தமுள்ள 12,09,925 வாக்காளர்களில் 4,52,721 ஆண்கள், 4,86,677 பெண்கள், 2 திருநங்கைகள் என 9,39,400 பேர் வாக்களித்துள்ளனர்.

6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதம் 77.64 ஆகும்.

இன்று தேர்தல்

 இன்று ஜனநாயக திருவிழா  அழைப்பு


அங்கீகாரமில்லாத 723 பள்ளி அட்மிஷன் ரத்து: மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

 
       அரசு அங்கீகாரம் பெறாத 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 5,071 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 34,871 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. தனியார் தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மட்டும் 6,278 பள்ளிகள் உள்ளன.
தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு அங்கீகாரம் பெறவேண்டியது அவசியம். முதலில் 3 ஆண்டுகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படும். 3 ஆண்டுகளில் விதிமுறைகளை முழுவதுமாக பூர்த்தி செய்யாவிட்டால் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள அவகாசம் வழங்கி மேலும் 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படும். அனைத்து விதிமுறை களும் பூர்த்தி செய்யப்பட்டதும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நிரந்தர அங்கீகாரம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும்.

இயக்குநருக்கு அரசு உத்தரவு

இந்நிலையில், அரசு அனுமதி, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 1,296 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மேற்கண்ட 1,296 பள்ளிகளில் 723 பள்ளிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த அந்த 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர் சேர்க்கையும் ரத்துசெய்யப் பட்டுள்ளது
தற்போது அந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பட்டியல் விரைவில் வெளியீடு

அங்கீகாரம் பெறாத 723 பள்ளிகள் எவை என்று அறிந்துகொள்ள மாணவர் களும் பெற்றோரும் விரும்புவார்கள் என்பதால் இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரிடம் கேட்டோம்.
‘‘மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப் பட்ட பள்ளிகளின் பட்டியல் அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் அட்மிஷன் ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

Wednesday, 23 April 2014

நாகை தொகுதியைக் கைப்பற்ற அதிமுக, திமுக கடும் போட்டி

   நாகப்பட்டினம் தொகுதியில் ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனாலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி. திமுக சார்பில் ஏற்கனவே மூன்று முறை நின்று வென்று மக்களவை உறுப்பினராக இருக்கும் ஏ.கே.எஸ்.விஜயன் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து ஏற்கனவே அதிமுக சார்பில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் கோபால் போட்டியிடுகிறார்.
 
ஆனால், கோபால் போட்டியிடுகிறார் என்று சொல்லப்படுகிறதே தவிர உன்மையான போட்டியாளர் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தான். அந்த அளவுக்கு கோபாலை முன்னிறுத்திவிட்டு பணம், படை என்று எல்லாவற்றையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார் அமைச்சர். தொகுதிக்கு பொறுப்பாளரான தங்கமுத்துவிடம் கூட முழுவதுமாக வேலைகளை ஒப்படைத்து விடாமல் எல்லாவற்றையும் தன்னிடமே வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க பொறுப்பை தன் தலைமேல் போட்டுக் கொண்டு வேலை பார்த்தார்.
 
 
 
பிரபலமான பிரச்சாரகர்களை அழைத்துவந்து தொகுதியை வட்டமிடச் செய்தார். அதன் விளைவாக ஆரம்பத்தில் திமுகதான்யா ஜெயிக்கும் என்று சொன்ன அதிமுகவினரே தற்போது நாம ஜெயிச்சுடலாம் போலயிருக்குய்யா என்று உற்சாகத்தில் உள்ளனர். இறுதி நேரத்தில் தெம்புதரும் வைட்டமின் வழங்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுவதால் நிச்சய வெற்றியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
 
ஆனால், திமுக தரப்பில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே இருந்ததால் பணம் விஷயத்தில் கொஞ்சம் இறுகப் பிடித்து விட்டார்கள். கட்ட கடைசியில் கையில் பணம் விளையாடாமல் உடன் பிறப்புக்கள் தவித்துப் போய் விட்டார்கள். ஆனால் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் பிரச்சாரமும் தொகுதிக்குள் தனக்கு இருக்கும் அறிமுகமும் நல்லபெயரும், நிலவும் கடுமையான மின்வெட்டும் தன்னை காப்பாற்றி கரை சேர்த்துவிடும் என்று விஜயன் நம்பிக் கொண்டிருக்கிறார்.
 
இவர்களைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்ட்கள் ஏகோபித்து வேலை செய்தார்கள். பிருந்தா காரத், தா.பாண்டியன், டி.ராஜா, ரங்கராஜன் என்று கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவர்கள் வந்து காம்ரேட்டுக்களை உற்சாகப் படுத்திவிட்டு போயிருக்கிறார்கள். அதனால் திமுக, அதிமுக இரு வேட்பாளர்களையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிக வாக்குகளை வாங்குவார் பழனிச்சாமி. காங்கிரஸ் கட்சியின் செந்தில் பாண்டியனும், பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனும் மற்ற அறுவரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை


இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத்.
 
வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்
 
இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?
 
முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.
நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?
மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?
 
மோடி செய்ததும் செய்யாததும்
 
இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?
குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டுவந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார்.
 
ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.
 
சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
 
உண்மையின் கதவுகள்
 
ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணிநகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”
 
அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”
 
எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.
அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”
கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ‘மோடி - வளர்ச்சி - குஜராத்' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவுகூர்வதில்லை!”
 
- சமஸ்
தொடர்புக்கு:samas@kslmedia.in
 
தி ஹிந்து தமிழ் நாளிதழ் 23/04/2014 

நாளை வாக்குப்பதிவு 24/04/2014

நாளை 24/04/2014 காலை 7 மணி முதல் 6 வரை நாகை தொகுதி மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது .வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் சீட்டு உடன் வந்து வாக்களிக்கலாம் .சீட்டு கிடைக்காதவர்கள் வாக்குசாவடி அருகே தேர்தல் அலுவலர்களிடம் பெற்று கொள்ளலாம் .

கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் . அடையாள அட்டை இல்லாதவர்கள் பாஸ்போர்ட் ,ஓட்டுனர் உரிமம் அட்டை ,ஆதார் அட்டை , வங்கி பாஸ் புக் உள்ளிட்ட 11 ஆவணகளை காட்டி வாக்களிக்கலாம்

கள்ள மௌனம் சொல்லும் உண்மை!

ஒருவழியாக, சுடுகாடுகளுக்குக் கூரை வேயும் திட்டத்தில் ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது சி.பி.ஐ. நீதிமன்றம். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும் தி.மு.க-வின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி, இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட ஐந்து பேருக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு இது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுமீது சென்னை உயர் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையை அடுத்தே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் சுடுகாடுகளுக்குக் கூரை வேயும் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தரமற்ற கூரைகளை அமைத்து, பண ஆதாயம் பார்த்ததாக, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசில் 1995-ல் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், செல்வகணபதி குற்றமற்றவர் என்று 2011-ல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் தவறிழைத்ததாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் ஊழல் குற்றத்துக்காகப் பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதியாகி இருக்கிறார் செல்வகணபதி. தன்னுடைய பதவி எப்படியும் பறிக்கப்படும் என்கிற சூழலில், ஏனைய கட்சிகளின் பிரச்சாரத்தைத் தவிர்க்க தானே முந்திக்கொண்டு ராஜிநாமா செய்திருக்கிறார்.
 
செல்வகணபதி மீது ஊழல் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீர்ப்பைப் பார்க்கும் எவருக்கும் தோன்றும் நியாயமான கேள்வி இது: ஓர் ஊழலை நிரூபிக்க 20 ஆண்டுகள் நம் அமைப்புக்குத் தேவைப்படுகிறது. தண்டனையோ வெறும் இரண்டு ஆண்டுகள். என்ன அமைப்பு இது?
 
மேலும், இந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள் இருக்கின்றன. 1. தேர்தல் மேடைகளில் மாறிமாறி ஊழல் குற்றம்சாட்டிக்கொள்ளும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்த விஷயத்தில் எப்படிக் கூட்டாக மௌனம் காக்கின்றன என்பது. 2. இந்த ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டுவந்த உமாசங்கர் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படியெல்லாம் இரு ஆட்சிகளிலும் மாற்றி மாற்றி பந்தாடப்பட்டு, இன்றைக்கு ஓரங்கட்டிவைக்கப்பட்டிருக்கிறார் என்பது. ஊழல் விஷயத்தில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடு இந்த விவகாரம். ஒருகாலத்தில் நேர்மையான செயல்பாடுகளுக்குப் பேர்போன தமிழக அரசியல்வாதிகள், இன்றைக்கு எவ்வளவு சீரழிந்து நிற்கின்றனர் என்பதற்குமான வெளிப்பாடும்கூட.
நாடு முழுவதும் லோக்பால் அமைப்புக்கான குரல்கள் ஓங்கி ஒலித்தபோது தமிழகத்தில் உயர்ந்த கைகள் இப்போது தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவரப்படுவதற்காக உயர வேண்டும். தமிழகத்தை ஊழல் புற்றுநோய் கொஞ்சம்கொஞ்சமாகச் செல்லரிக்கும் முன் இந்த இழிநிலையிலிருந்து அதை மீட்க வேண்டும்!

Tuesday, 22 April 2014

NOTA - முன்பாக கொஞ்சம் சிந்தியுகா

 
வரும் வியாழன் காலை 7மணி முதல் நடைபெற உள்ள மக்களவை பொது தேர்தல் வாக்குபதிவு க்கு முன்பாக கொஞ்சம் சிந்தியுகா
65 ஆண்டுகள் கால இந்திய விடுதலை வரலாற்றில் வாக்காளர் கையில் ஜனநாயகம் முதல் முதலாக ஒப்படைக்க பட்டுள்ளது .மாற்றம் தேவை என மாற்று இல்லாமல் ஓட்டு போட்டது போதும் இனியும் தடையில்லை

ஊழல் ,திட்டகளுக்கு கமிஷன் ,மக்கள் பணியில் உண்மையில்லாமல் தன் வளத்தை பெருக்கி கொள்ளுவது ,இயற்கை வளங்களை தன் சுய நலத்துக்கு பயன் படுத்துவது ,அடிக்கடி மாறும் கூட்டணி காட்சிகள்  என மக்களை விட வேற ஏதுவும் இல்லை என்பார்கள் .போதும் இனி கவலை இல்லை வாக்களியுங்கள் 

நாகப்பட்டினம் தொகுதி - பிரசார களம்

         நாகை தொகுதியில் வரும் ஏப்ரல் 24 ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசார நிழல்வுகள் நம்மை சுற்றி வலம் வரும் போது நம் காதில் விழும் சில வைகள் இப்ப பார்க்கலாம் .

மொத்த வாக்காளர்கள் 12,07,725
 
  நான்கு முனையா   அல்லது ஐந்து முனையா     போட்டி என்று சொல்லும் அளவிற்கு நம்ம தொகுதியில் களம் கடுமையாக உள்ளது .
மேலும் மக்கள் தங்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில்
 பல நல்ல திட்டங்கள் நாம தொகுதியில் வராத என்ற குறையில் நமக்கு 
எல்லாம் உள்ளது .

 
நாகை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு ,காவேரி பிரச்சனை மற்றும் தன் ஆட்சி யின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டார் .
 
திமுக தலைவர் கருணாநிதி 


   திமுக வேட்பாளர் விஜயன் 4ம் முறையாக போட்டியிடுவதால் கடந்த 15 ஆண்டுகள் தொகுதிக்கு செய்த பணிகள் மற்றும் செய்யத்தவறிய பணிகள் குறித்தே அதிகம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க கையெழுத்திட்ட திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபாலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியது:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த கையெழுத்திட்டார். ஒப்பந்தம் கையெழுத்தாக இடையில் இருந்து உதவியவர்கள் திமுக வேட்பாளர்கள் ஏ.கே.எஸ். விஜயன் (நாகை), டி.ஆர். பாலு (தஞ்சை). எனவே மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைச் செய்ய வேண்டும்.
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.எஸ். விஜயன் 15 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் எந்த மக்கள் பிரச்னைக் குறித்தும் பேசவில்லை. மத்திய அரசால் தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் உரிமைகளை மீட்க முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும். அவரின் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றார் காமராஜ்.
மேலும் காங்கிரஸ் ,பாமக ,இந்திய கம்யூ, உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டி கடுமையாக உள்ளதால்  வெற்றியை தீர்மானிப்பது கடினம் .

Sunday, 20 April 2014

வாக்களிப்பது எப்படி?

'ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...

வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

அடையாள அட்டை!

18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்கு அளிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அதைவிட முக்கியம், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். சில காரணங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை உங்களிடம் இல்லை என்றால், உங்களால் வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். இடம் பெயர்ந்து இன்னொரு தொகுதிக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் பழைய வாக்காளர் அட்டையை ஆவணமாகக் காட்டலாம்.

வாக்காளர் சீட்டு!

'எங்கே வாக்களிப்பது?’ என்ற விவரத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள். இந்த வாக்காளர் சீட்டில் உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடியின் முகவரி... போன்ற விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டை அரசியல் கட்சியினரும் தருவார்கள். வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது வாக்காளர் சீட்டோ அல்லது அரசியல் கட்சிகள் தரும் 'டோர் ஸ்லிப்’போ... ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். இந்த மூன்றும் உங்களிடம் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் நிச்சயம் வாக்களிக்க முடியும். உங்கள் புகைப்படத்துடன் கூடிய அரசு ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்க முடியும்.
தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச்சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம். தவிர, நமக்கு ஏற்படுகிற சந்தேகங்களையும் அங்கே நிவர்த்தி செய்வார்கள்.

எங்கே வாக்குச்சாவடி?

மக்கள் அதிக தூரம் அலைய அவசியம் இல்லாமல், முடிந்தவரை அருகில் உள்ள இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள்தான் வாக்களிப்பார்கள் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஇருக்காது. கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமும் தேடலாம். epic என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சிறு இடைவெளிவிட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரம் பதிலாக வந்து விழும். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்களிக்கலாம்.

மின்னணு இயந்திரம்!

கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஐந்து மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி முன்பு இருக்கும். பேலட் யூனிட் வாக்காளர்கள் வாக்களிப்ப தற்கான மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட் பகுதியில் இருக்கும் பட்டனை தேர்தல் அலுவலர் அழுத்திய பிறகுதான் பேலட் யூனிட்டில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்.

தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச்சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம். தவிர, நமக்கு ஏற்படுகிற சந்தேகங்களையும் அங்கே நிவர்த்தி செய்வார்கள்.
எங்கே வாக்குச்சாவடி?
மக்கள் அதிக தூரம் அலைய அவசியம் இல்லாமல், முடிந்தவரை அருகில் உள்ள இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள்தான் வாக்களிப்பார்கள் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஇருக்காது. கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமும் தேடலாம். epic என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சிறு இடைவெளிவிட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரம் பதிலாக வந்து விழும். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்களிக்கலாம்.
மின்னணு இயந்திரம்!
கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஐந்து மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி முன்பு இருக்கும். பேலட் யூனிட் வாக்காளர்கள் வாக்களிப்ப தற்கான மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட் பகுதியில் இருக்கும் பட்டனை தேர்தல் அலுவலர் அழுத்திய பிறகுதான் பேலட் யூனிட்டில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்.
வாக்குச்சாவடி நடைமுறைகள்!
வாக்குச்சாவடிக்குள் நீங்கள் நுழைந்ததும் முதலில் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையோ, வாக்காளர் சீட்டையோ அல்லது பூத் சிலிப்பையோ காண்பிக்க வேண்டும். இவை இல்லாதபட்சத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களில் ஒன்றைக் காட்டலாம். அந்த அலுவலர் தன்னிடம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பார். பெயரையும் பதிவு எண்ணையும் உரக்கப் படித்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மீது ஒரு கோடு போடுவார். உங்கள் பெயரைச் சொல்லும்போது அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜென்ட்கள், தங்கள் வசம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் அதைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.

இந்தச் சரிபார்த்தல் முடிந்த பிறகுதான் நீங்கள் இரண்டாவது அலுவலரிடம் செல்ல முடியும். இரண்டாவது அலுவலர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலின் மீது மையை அடையாளமாக இடுவார். அதோடு அவரிடம் இருக்கும் படிவத்தில் உங்கள் வாக்கு எண்ணை எழுதி அதில் உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்வார். கையெழுத்து போட முடியாதவர்களிடம் இடது கை கட்டைவிரல் ரேகையைப் பதிவு செய்வார். உங்களிடம் சீட்டு ஒன்றை வழங்குவார். அதை எடுத்துக்கொண்டு மூன்றாவது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அதைப் பெற்றுக்கொண்டு தன் முன்பு இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'பேலட்’ என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பட்டனை அழுத்துவார். அதன் பிறகு நீங்கள் ஓட்டு போடும் மறைவிடத்துக்குச் செல்லவேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட்டில் வரிசையாக வேட்பாளரின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு எதிராக உள்ள நீல நிற பட்டனை அழுத்தவேண்டும். உடனே அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும். அதோடு 'பீப்’ என்ற ஒலியும் கேட்கும். அதுதான் உங்கள் வாக்கு பதிவானதற்கான அறிகுறி. ஒலி எழுப்பிய உடனேயே மூன்றாவது தேர்தல் அலுவலரின் முன்பு இருக்கும் கட்டுப்பாட்டு கருவியில் எரிந்துகொண்டிருக்கும் 'பிஸி’ விளக்கு அணைந்துவிடும்.
பார்வைத்திறனற்ற வாக்காளர்கள், துணைக்கு ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம். மற்ற யாரும் வாக்களிக்கும் இடத்துக்கு கூடுதல் நபர்களை அழைத்துச் செல்ல முடியாது. அதேபோல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது.

உங்கள் வாக்குகளை இன்னொருவர் போட்டுவிட்டால்..?

காலையிலேயே சென்று வாக்களித்துவிடுவது நல்லது. பிற்பகலில் சென்றால், உங்கள் வாக்கை வேறு யாராவது பதிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அப்படி உங்கள் வாக்கை வேறு யாரோ போட்டுவிட்டாலும், ஒரு வாக்காளராக உங்களது உரிமையை நிலைநாட்ட முடியும். 'நான் இந்த வாக்குச்சாவடியின் வாக்காளர்தான்’ என்பதற்கான ஆவணத்தை வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் காட்ட வேண்டும். அந்த அதிகாரி உங்களிடம் கேள்விகள் கேட்டு சான்றுகளைச் சரிபார்ப்பார். ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் கருதினால், உங்களுக்கு 'ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு’ தருவார். அது அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு. அதில் பழைய முறைப்படி முத்திரை குத்தி வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களித்த வாக்கு சீட்டை மடித்து ஓர் உறையில் போட்டு தேர்தல் அதிகாரி சீல் வைத்துவிடுவார். வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் நூலிழையில் இருந்தால், இந்த ஆய்வுக்குரிய வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
'
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’!
'எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’ என்பதைத் தெரிவிக்கும் வசதி, இதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இல்லை. 49(O) என்ற பிரிவின் கீழ் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். இது ரகசியமானது இல்லை என்பதால் கணிசமானோர் இந்தப் பிரிவின் கீழ் வாக்களிக்கத் தயாராக இருந்தும், இதைப் பயன்படுத்த அஞ்சினார்கள். இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டு விட்டது. இப்போது இதன் பெயர் நோட்டா (NOTA - None Of The Above). வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இந்த 'நோட்டா’ பட்டன் இருக்கும். NOTA என்று ஆங்கிலத்திலும், 'மேற்காணும் நபர்களில் எவரும் இல்லை’ என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்.

உறுதிச் சீட்டு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அச்சிடும் கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்களித்து முடித்த உடனேயே அதில் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டு வெளியில் வரும். அதில் வரிசை எண், நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை இருக்கும். அதுதான் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதற்கான ஆதாரம். அதன் பிறகு அந்த ரசீது இயந்திரத்துக்குள் மறுபடியும் சென்றுவிடும். ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மத்திய சென்னை தொகுதியில் மட்டுமே இந்தத் தேர்தலில் அறிமுகம் ஆகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் உங்கள் விரல் முனையில்! சுமார் 120 கோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் பிரமாண்டமான ஜனநாயக நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆளுமைகளை நாம் தேர்வு செய்கிறோம். அந்தப் பணியின் நேர்மை கருதி வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏனெனில், இந்தியா நடைபோட வேண்டிய திசையை நம் விரல்கள்தான் தீர்மானிக்கும்!

Saturday, 19 April 2014

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அறிவிப்பு


          நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மதரஸா மத்லபுல் கைராத் சார்பாக கோடைகால அரபி பயிற்சி  வகுப்புகள்  இன்ஷா அல்லாஹ் வரும் 20/04 /2014  ஞாயிற்றுக்கிழமை  முதல் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை ஆண்களுக்கும் , மாலை 3.30 முதல் 6 மணி வரை பெண்களுக்கும் நடத்தபடுகிறது

.
விருப்பம் உள்ளவர்கள் உடனே நிருவாகத்தை தொடர்பு கொள்ள வும் .

kodikkalpalayam - பழைய முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்

 
கொடிக்கால் பாளையம் பழைய முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் 
 

 
 
நன்றி புகைப்படம் ஹாஜாமைதீன் அவர்கள்  லண்டன்