Wednesday 2 April 2014

நாகப்பட்டினம் தேர்தல் களம் வேட்புமனு தாக்கல்

நாகை தொகுதி யில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 29ம் முதல் வேட்புமனு தாக்கல் துவங்கிவிட்டது .

இதில் ஏப்ரல் 1 ம் தேதி அ இ அ தி மு க வேட்பாளர் டாக்டர் கோபால் தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார் .உடன் அமைச்சர் காமராஜ் ,முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் ,கு தங்கமுத்து ,எம் எல் எ காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் .மாற்று வேட்பாளர் கோபால் மனைவி சங்கமித்திர மனு செய்தார் .


இதில் ஏப்ரல் 2ம் தேதி தி மு க வேட்பாளர் விஜயன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் .உடன் மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் ,முன்னாள் அமைச்சர் மதிவாணன் ,ஹலிலுர் ரஹ்மான் (மமக),(திக)  உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் .மாற்று வேட்பாளர் அனந்தன் மனு செய்தார் .




இதில் ஏப்ரல் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோ பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்  .உடன் மூத்த தலைவர் நல்லகண்ணு ,எம் எல் எ பால கிருஷ்ணன் ,முன்னாள் எம் பி செல்வராசு உள்ளிட்டோர் இருந்தனர் . மாற்று வேட்பாளர் செல்வம் மனு செய்தார் .








இதில் ஏப்ரல் 4ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் டி ஏ பி செந்தில் பாண்டியன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார் .உடன் முன்னாள் எம் பி பி வி ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .மாற்று வேட்பாளர் அவரது அண்ணன் டாக்டர் ஆறுமுக பாண்டியன் மனு செய்தார் .

மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக டி தங்கசாமி மனு செய்தார் .
சுயே வேட்பாளர் தேவகி மனு செய்தார் .
 
மனு செய்ய இறுதி நாளான ஏப்ரல் 5ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வடிவேல் இராவணன் வேட்புமனு செய்தார்  .



சுயேச்சைகள் மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று நன்னிலம் புளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் மோகன், திருவாரூர் தியானபுரம் கிருஷ்ணன் மகன் முருகையன், திருவாரூர் சாமந்தான்பாளையம் நாகப்பன் மகன் பக்கிரிசாமி, மன்னார்குடி அசேசம் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பிரதீப்குமார் என்கிற ஆதவன் ஆகிய 4 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 29-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர்களாக 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வருகிற 9-ந் தேதி வெளியிடப்படும்.




No comments:

Post a Comment