Friday, 30 June 2017

பிரதமர் எச்சரிக்கை விடுத்த நாளில் வாலிபர் அடித்துக்கொலை ஜார்க்கண்டில் கலவரம்-தீவைப்பு

ஜார்ஜ்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டம் பஜர்தண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.

நேற்று மாருதி வேனில் மாட்டிறைச்சி கொண்டு சென்றார். இதை அறிந்து சிலர் அவரை வழிமறித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வாலிபர் அஸ்கர் அன்சாரியை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினார்கள்.

தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று கும்பலிடம் இருந்து வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே அவர் மாட்டிறைச்சி ஏற்றி வந்த வேனையும் வன்முறையாளர்கள் கவிழ்த்துப் போட்டு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் காரணமாக ராம்கார் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.

வாலிபர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீசார் கூறும் போது, அன்சாரி  மாட்டிறைச்சி விற்பனை போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இதில் அவருக்கு சிலருடன் விரோதம் இருந்தது. அவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு  உள்ளனர், அவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றது உறுதிப்படுத்தப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டம் பிரியாபாத் கிராமத்தில் கடந்த திங்கட் கிழமையும் இதுபோல 55 வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் நேற்று வாலிபர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் மகாத்மா காந்தியின் சபர்பதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்.  அதே நாளில் இந்த சம்பவமும் நடைபெற்று உள்ளது குறிப்பிட தக்கது.

Thursday, 29 June 2017

திருவாரூரில் பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி திருவாரூரில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவரை, ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். திருவாரூர் கொடிக்கால்பாளையம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவாரூர் விஜயபுரம், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நீடாமங்கலம் கடைத்தெரு, பழைய நீடாமங்கலம், கோவில்வெண்ணி, ஆலங்குடி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடி

இதேபோல மன்னார்குடி பெரிய கடைவீதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மன்னார்குடி கீழராஜவீதி சின்னக்கடை தெரு பள்ளிவாசல், பெரிய கடை வீதி பெரிய பள்ளி, வக்து பள்ளி, நெடுவாக்கோட்டை, அசேஷம் ஆகிய 5 பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்து கொண்டனர்.

கொடிக்கால்பாளையம் நோன்பு பெருநாள்

Thursday, 22 June 2017

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை டெல்லி பயணம்; ராம்நாத்திற்கு நேரில் ஆதரவு

பாரதீய ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துவை நேரில் சந்தித்து தனது ஆதரவினை வழங்குகிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக ராம்நாத் கோவிந்துவை பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி, ராம்நாத்திற்கு ஆதரவு கோரி வருகிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி முடிவு செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ.க்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ஆலோசனை கூட்டத்தில், பாரதீய ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.

பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராம்நாத்திற்கு ஆதரவு கோரினார்.  அதனால் அ.தி.மு.க. அம்மா அணி முழு மனதுடன் தனது ஆதரவினை வழங்குகிறது என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.  அங்கு, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத்தினை நேரில் சந்தித்து தனது ஆதரவினை வழங்குகிறார்.

Tuesday, 20 June 2017

தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும் பணி கடந்த மே மாதம் 31-ந் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராததால் நிலுவையாக உள்ள காலி இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதி முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, ஏற்கனவே இணைய வழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர் நாளை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று காலியாக உள்ள இடத்தில் தங்கள் குழந்தையை சேர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, 18 June 2017

சிக்னல் கோளாறு: மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம்

சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்ட மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை மன்னார்குடியை வந்து சேர வேண்டும். அந்த ரெயில் நீடாமங்கலம் வந்தவுடன் ரெயிலின் முன்பக்க என்ஜினை பிரித்து பின்பக்கமாக இணைத்து அங்கிருந்து மன்னார்குடிக்கு புறப்படுவது வழக்கம். பின்னர் மீண்டும் மன்னார்குடியில் இருந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்படும். இந்தநிலையில் நேற்று காலை நீடாமங்கலத்திற்கு வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜினை பிரித்து முன்பக்கம் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

2 மணிநேரம் தாமதம்

இதைத்தொடர்ந்து தஞ்சையில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் நீடாமங்கலத்துக்கு வந்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்தனர். இதனால் 2 மணிநேரம் தாமதமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் தாமதத்தால் தஞ்சை-காரைக்கால் ரெயில் சாலியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மானா மதுரை-சென்னை செல்லும் பயணிகள் ரெயில் மன்னார் குடியில் நிறுத்தி வைக்கப்பட்டது. கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றதால் கும்பகோணம்- வேளாங் கண்ணி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. சிக்னல் சரி செய்த பின்னர் ரெயில் அங்கிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது

Friday, 16 June 2017

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ரூ.10½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

Wednesday, 14 June 2017

வெளியூர் மௌத் அறிவிப்பு 14/6/2017

ஜனாஸா அறிவிப்பு!

நமதூர்  நடுத்தெரு மர்ஹூம் செ.மு.மு.கலிலுர் ரஹ்மான் அவர்களின் சம்பந்தியூம்       ஆண்டிப்பாளையம் புதுரோடு கு.மு.ஜமால் அவர்களின் மனைவியும் J.சாகுல் ஹமீது அவர்களின் தாயாருமான
*மும்தாஜ் பேகம்*அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!


Tuesday, 13 June 2017

நிலத்தடி நீரை பாதிக்கும் தனியார் குடிநீர் நிறுவனம் மீது நடவடிக்கை கிராமமக்கள் கோரிக்கை மனு

திருவாரூர் அருகே உள்ள சிமிழி தலையாலங்காடு கிராமமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் சிமிழி ஊராட்சிக்குப்பட்ட தலையாலங்காடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான இடங்களில் கைபம்பு அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகின்றது.

நடவடிக்கை

இந்த நிலையில் எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் நிறுவனம் அனுமதியை தாண்டி அதிக அளவில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீரை பாதிக்கும் தனியார் குடிநீர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில், கோர்்ட்டு உத்தரவின்படி தனியார் குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் எந்தவித நடவடிக்கை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Friday, 9 June 2017

Thursday, 8 June 2017

Kodikkalpalayam - நமதூர் மௌத் அறிவிப்பு 8/6/2017

கொடிக்கால்பாளையம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ஜும்ஆ பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் முன்னாள் நாட்டாண்மை ஹாஜி செ மு மு கலீலூர் ரஹ்மான் அவர்கள் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.


 அல்லாஹ் ! அவர்களின்  பிழை  பாவங்களை பொறுத்து  அன்னாரின்  இறப்பை  ஏற்று  அவர்களின்  குற்றம்  குறைகளை  மன்னித்து  அவர்களை  பொருந்திக்  கொள்வானாக ! அவர்களுக்கு  ஜன்னத்துல்  பிர்தவ்ஸ்  எனும்  சொர்கத்தில்  இடமளித்  தருள்வானாக !  அன்னாரின் பிரிவால்  துயர்கொண்ட  அவரின்  குடும்பத்தார் களுக்கு  சபுர் என்னும்  பொருமையை  தந்தருள் வானாக !  ஆமீன் !

Sunday, 4 June 2017

நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி ஜூலை 1–ந் தேதி அமல்

நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சரக்கு, சேவை வரி
நாடு முழுவதும் ஒரே விதமான மறைமுக வரியாக சரக்கு, சேவை வரி ஜூலை மாதம் 1–ந் தேதி அமல்படுத்த முடிவாகி உள்ளது.
இந்த வரி விதிப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சில், அத்தியாவசிய உணவு தானியங்களுக்கும், பால், தயிர் போன்ற பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
அதே நேரம், பல்வேறு பொருட்களுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 1,205 பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
தங்க நகைகளுக்கு 3 சதவீதம் வரி
எஞ்சிய பொருட்களுக்கான வரி விதிப்பை முடிவு செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15–வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:–
* தங்க நகைகளுக்கு 3 சதவீதமும், கச்சா வைரங்களுக்கு 0.25 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
* பிஸ்கெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
காலணிகள், பீடி
* ரூ.500–க்கு உட்பட்ட விலையிலான காலணிகளுக்கு 5 சதவீதமும், அதற்கு மேற்பட்ட விலையிலான காலணிகளுக்கு 18 சதவீதமும் சரக்கு, சேவை வரி விதிக்கப்படும்.
* ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதமும், பிற பருத்தி ஜவுளி வகைகளுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
* பீடிக்கு அதிகபட்ச அளவாக 28 சதவீதம் (செஸ் இன்றி), பீடி இலைக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
சணலுக்கு வரி விலக்கு
* சணலுக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* விவசாய கருவிகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
* எதிர்ப்பு லாபம் தொடர்பான புகார்கள் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 1–ந் தேதி அமல்
* ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டன.
‘‘தற்போதைய வடிவில் சரக்கு, சேவை வரிவிதிப்பை ஏற்க முடியாது, அதை அமல்படுத்தவும் மாட்டோம்’’ என்று மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி கூறி இருந்த நிலையில் ஜூலை 1–ந் தேதி சரக்கு, சேவை வரியை அமல்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ராவும் நேற்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 11–ந் தேதி நடைபெறும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சென்னையில் கோலாகலம் 94-வது பிறந்த நாள்-சட்டப்பேரவை வைர விழாவையொட்டி கருணாநிதிக்கு புகழாரம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், அவரது 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனை வரையும் வரவேற்றார்.

கருணாநிதிக்கு புகழாரம்


சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

விழாவில், பேசிய தலைவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டி புகழாரம் சூட்டி பேசினார்கள்.

பங்கேற்ற தலைவர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைவர்கள் அனைவரும் கைகளை பற்றிக்கொண்டு உயர்த்திக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

ராகுல்காந்தி


விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, “கருணாநிதி மேலும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்றும், நல்ல உடல்நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். கருணாநிதி கோடானு கோடி தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பலம். அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு காரணம், மக்கள் மீது அவர் வைத்திருக்கும் நேசமும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நேசமும் தான். கருணாநிதி பேசும்போது, அது அவர் குரலாக மட்டும் அல்லாமல், தமிழக மக்களின் குரலாகவும் இருக்கிறது” என்றார்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, “கருணாநிதி 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இதுவரை யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஒருமுறைகூட தோற்காத தலைவராக அவர் இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இருக்காது” என்றார்.

பாரத ரத்னா விருது

புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுக்கொண்டு இருப்பவர் கருணாநிதி. தமிழ் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியவர். கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படக்கூடிய தலைவராக கருணாநிதி இருக்கிறார். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் எம்.பி. பேசும்போது, “மம்தா பானர்ஜியின் கொள்கையும், கருணாநிதியின் கொள்கையை எதிரொலிக்கிறது. தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதுபோல, வங்காளத்தில் பெங்காலி இருக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்” என்றார்.