Sunday, 18 June 2017

சிக்னல் கோளாறு: மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதம்

சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்ட மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை மன்னார்குடியை வந்து சேர வேண்டும். அந்த ரெயில் நீடாமங்கலம் வந்தவுடன் ரெயிலின் முன்பக்க என்ஜினை பிரித்து பின்பக்கமாக இணைத்து அங்கிருந்து மன்னார்குடிக்கு புறப்படுவது வழக்கம். பின்னர் மீண்டும் மன்னார்குடியில் இருந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்படும். இந்தநிலையில் நேற்று காலை நீடாமங்கலத்திற்கு வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் என்ஜினை பிரித்து முன்பக்கம் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

2 மணிநேரம் தாமதம்

இதைத்தொடர்ந்து தஞ்சையில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் நீடாமங்கலத்துக்கு வந்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்தனர். இதனால் 2 மணிநேரம் தாமதமாக மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் தாமதத்தால் தஞ்சை-காரைக்கால் ரெயில் சாலியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மானா மதுரை-சென்னை செல்லும் பயணிகள் ரெயில் மன்னார் குடியில் நிறுத்தி வைக்கப்பட்டது. கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றதால் கும்பகோணம்- வேளாங் கண்ணி செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. சிக்னல் சரி செய்த பின்னர் ரெயில் அங்கிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது

No comments:

Post a Comment