Saturday 31 January 2015

வெளியூர் மௌத் அறிவிப்பு 31/01/2015

  
நமதூர்  நடுத்தெரு மர்ஹூம் அப்துல் ஹாலிக் அவர்களின் மாமனாரும் ,தாஜ்பிராக்‌ஷா தைக்கால் டிரஸ்டியுமான முஹம்மது நூர்தீன் அவர்கள் திருவாரூர் - விஜயபுரம் செல்வம் தெரு தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாசா 31/01/2015 சனி மாலை ஞாயிறு இரவு 7 மணிக்கு விஜயபுரம் பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

கேஸ் தட்டுப்பாடு அபாயம்: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள், மற்றும் லாரி உரிமையாளர்களை அழைத்து சுமூக திர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று 31/01/2015 திருவாரூர் அருகே மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டேங்கர் லாரி வாடகை நிர்ணய ஒப்பந்தம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது.
புதிய வாடகை ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால் தற்போது வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் கேஸ் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. எனவே எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்களை அழைத்து சுமூக திர்வு காண வேண்டும்.
மத்திய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. இந்திய அரசியல் முகஉரையில், மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தையை யாராலும் அழிக்க முடியாது. கருப்பு பண மீட்பு விவகாரத்தில் பாஜக சரியான தகவலை சொல்ல மறுக்கிறது. தமிழகத்தில் முதல்வர் மாறினால் மாற்றம் நிகழும் என்பது எதார்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்கள் எண்ணப்படி அவர் நடக்க வேண்டும் என்றார

Friday 30 January 2015

திருவாரூர் அருகே 950 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது


திருவாரூர் அருகே கூடூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில மற்றும் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலி பேகம், கலால்துறை துணை ஆட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சங்கர் (28) மதுப்பாட்டில்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரது வீட்டின் பின்புறம் உள்ள வைக்கோல்போருக்குள் 950 போலி மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவையும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சங்கருக்கு உதவியாக இருந்த குன்னியூர் மாணிக்கம் மகன் கணேசன் (30), கிருஷ்ணமூர்த்தி மகன் முருகதாஸ் (20) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் போலியானதா அல்லது வெளிமாநில மதுபாட்டில்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் அவற்றை ரசாயன சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

Thursday 29 January 2015

வருடாந்திர ஜமாஅத் மஹாஜன சபை கூட்ட அழைப்பு

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத்தின் வருடாந்திர மஹாஜன சபை கூட்டம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1436 ரபியுல் ஆகிர் பிறை 11(31/01/2015)சனி மாலை ஞாயிறு இரவு 9:30 மணிக்கு பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் நடைபெற உள்ளது.இதில் கடந்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது .இந்த அமர்வில் அனைத்து ஜமாஅத் அங்கத்தினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .

Wednesday 28 January 2015

இலவச கணினி தொழில்நுட்பப் பயிற்சி பெற விண்ணப்பம் வரவேற்பு


சேலத்தில் இலவசமாக கணினி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் சிறுதொழில் அமைச்சக உதவியுடன் நடைபெறும் இந்தப்பயிற்சியின் நோக்கம் சுயதொழில் வேலையில் ஈடுபட வைத்து வருமானம் ஈட்ட வைப்பதாகும்.
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-முதல் 35 வயதுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது முழுநேர இரண்டு மாத காலப் பயிற்சியாகும். இதில் அடிப்படை கணினி, கணினி பாகங்கள், கணினி ஒன்றிணைத்தல், பிரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடித்த பின்பு இந்திய அரசு சான்றிதழ், வேலைக்குச் செல்லவும், சுயதொழில் ஆரம்பிக்கவும் தொடர் உதவிகள் கிடைக்கும்.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அனைத்து கல்விச் சான்று நகல்கள், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்தை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல்களுடன் நேரில் இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் எண்.516-ஏ, ரங்கா நகர், மசூதி பின்புறம், சூரமங்கலம், சேலம் - 636 005, (தொலைபேசி எண்0427-2335383, செல்போன் 9087818283) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்குநர் பி.மோகன்ராம் தெரிவித்துள்ளார்.

Tuesday 27 January 2015

புற்றுநோயைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள்?


அரை நூற்றாண்டுக்கு முன்பு, இதயநோயால் இறந்து போவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் இருந்தன. அதை முந்திக்கொண்டு மரணத்துக்கான காரணங்களில் முதல் இடத்தைப் பிடிக்கும்தறுவாயில் இருக்கிறது புற்றுநோய்.
புற்றுநோய்தான் இருப்பதிலேயே மிக மோசமான பிரச்சினை. பரிணாம வளர்ச்சியிலும் பல செல் உயிரியல்பிலும் வேர்கொண்ட பிரச்சினை இது. இந்த முட்டுக்கட்டையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டும் அவ்வப்போது சிறுசிறு வெற்றிகளைப் பெற்றுக் கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்த வெற்றிகளைக் கொண்டு குழந்தைப் பருவப் புற்றுநோய் மரணங்களைக் குறைத்திருக்கிறார்கள். அதே போல இளைஞர்களிடையே புற்றுநோய் ஏற்படாமல் தடுத்திருக் கிறார்கள், சில சமயம் குணப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால், முதியவர்களுக்கு வரும் புற்றுநோய்களைப் பொறுத்தவரை அறுதியான வெற்றியென்று ஏதும் இல்லை.
கடைசியில் பார்த்தால், இந்த விளையாட்டில் புற்றுநோய்க்குத்தான் வெற்றி. ஆமாம், இறுதியாக வேறு எதனால்தான் நமக்கு மரணம் ஏற்படும்? முதுமையின்போது ஏற்படும் நோய்களுள் முதன்மையானவை இதயநோயும் புற்றுநோயும்தான். குறிப்பிட்ட ஒரு நோய்க்குப் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால், அதிக அளவிலான மக்கள் நீண்ட காலம் வாழ்ந்து மற்றுமொரு நோய்க்குப் பலியாவார்கள் என்றே அர்த்தம்.
புற்றுநோயா, இதயநோயா?
புற்றுநோய் விஷயத்தில் தற்போது நிலவும் தேக்கநிலையே ஒரு விதத்தில் வெற்றிதான். நூறு ஆண்டுகளுக்கு முன்பு (அமெரிக்காவில்) சராசரி ஆயுள் காலம் என்பது அதிகபட்சமாக 55 வயது. இப்போது அது 79 ஆக ஆகியிருக்கிறது. 65 வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள் என்றாலே 80 வயதுக்கு மேலே நீங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. புற்றுநோயால் மரணம் ஏற்படுவதற்கு சராசரி வயது 72. நாம் நீண்ட காலம் வாழ்ந்த பிறகுதான் அது நமக்கு நிகழும்.
இதயநோய் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது மெதுவாகத் தான் இருந்திருக்கிறது. எனினும், இதயநோய் மரணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. சரியான சாப்பாடு, உடற்பயிற்சி, ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்றவற்றின் உதவியால் இது சாத்தியமாகியிருக்கிறது. அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டால், அவற்றை இயந்திரக் கோளாறுகள்போல் - அதாவது அடைபட்ட குழாய், பழசான வால்வுகள் போல் - கருதி சீர்ப்படுத்த தற்காலிக வழி உண்டு. இந்த நடவடிக்கைகள் காரணமாக, 55-க்கும் 84-க்கும் இடைப்பட்ட வயதினர் இதயநோயால் இறப்பது குறைந்து, புற்றுநோயால் இறப்பது அதிகரித்துவருகிறது. இந்த வயது வரம்பைத் தாண்டி வாழ்ந்தால் விஷயம் நேர் எதிர், ஆம் - இதயநோய்தான் அப்போது வெற்றிகொள்கிறது.
எழுத்துப் பிழைகள்
புற்றுநோயை நோய் என்பதைவிட பெரும் நிகழ்வு என்றுதான் கருத வேண்டும். பரிணாம வளர்ச்சியின் அடிப் படைச் சமரசமொன்றின் விளைவுதான் அது. உயிருள்ள உடலானது வளர்ச்சி பெறும்போது, அதன் செல்கள் எல்லாம் தொடர்ச்சியாகப் பிளவடைகின்றன; அப்படிப் பிளவடையும்போது, தங்களுடைய மரபணு நூலகமாகிய டி.என்.ஏ-க்களைப் பிரதியெடுத்து அப்படியே தங்கள் வழித்தோன்றலாகிய செல்களுக்கு வழங்குகின்றன. அந்த வழித்தோன்றல்கள் தங்கள் வழித்தோன்றல்களுக்கு… இப்படியே நகல்களின் நகல்களின் நகல்கள் என்று போய்க்கொண்டே இருக்கின்றன. இந்தப் பயணத்தில் தவிர்க்கவே முடியாத வகையில் பிழைகள் ஏற்படுகின்றன. சில பிழைகள் கார்சினோஜன்களால் ஏற்படுபவை, ஆனால், பெரும்பாலானவை போகிறபோக்கில் ஏற்படுகிற எழுத்துப் பிழைகள் போன்றவையே.
மேற்கண்ட கோளாறுகளை அடையாளங்கண்டு அவற்றைச் சரிசெய்துகொள்வதற்கான சிக்கலான வழிமுறை களைச் செல்கள் யுகாந்திரங்களாக உருவாக்கிக் கொண்டு விட்டிருக்கின்றன. ஆனாலும், இந்தச் செயல்முறை முழுமை யானதல்ல, முழுமையானதாக என்றுமே இருக்க முடியாது. செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் என்பவைதான் பரிணாமத்தின் உந்துசக்திகள். அவை இல்லையென்றால் நாமெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்க மாட்டோம். அவ்வப்போது குறிப்பிட்ட வகைச் சேர்க்கையானது தனிப்பட்ட ஒரு செல்லுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தைத் தருவதுதான் இதில் நடக்கும் சமரசம். உடலோடு ஒன்றி ணைந்து செயல்படாமல் சுயேச்சையாக அந்த செல் வளர ஆரம்பிக்கிறது. இயற்கை அமைப்பில் பல்கிப் பெருகும் புது உயிரினம்போல், அந்த செல் புற்றுக்கட்டியாக வளர்கிறது. இந்த நிலையில் இந்தக் கோளாறைச் சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல.
கீழ்ப்படியாத இந்த நுண்ணிய கலகக்காரர்கள் கிட்டத்தட்ட 50 கோடி ஆண்டுகளாக முளைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது, சிக்கலான பல செல் உயிர்கள் தோன்றியதிலிருந்து. பல செல் உயிரிகள் என்பவை கூட்டாகச் சேர்ந்து இயங்கும் செல்கள். பல்கிப் பெருக வேண்டும் என்று அவற்றுக்கு இயல்பாகவே இருக்கும் உந்துதலை அந்த செல்கள் தங்களால் இயன்ற அளவு இழுத்துப் பிடித்திருக்கும் இயல்புடையவை. அப்படிச் செய்ய முடியாத செல்கள், அதாவது புற்று செல்கள், டார்வின் கூறியதுபோல் அவை என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்துகொண்டிருக்கின்றன. மாற்றமடைதல், பரிணாம வளர்ச்சியடைதல், தனது அண்டை வீட்டுச் செல்காரர்களைவிட வலுவாதல், உடலிலேயே மிகவும் அதீதமாக நடந்துகொள்ளும் செல்களாக ஆதல்… இந்தச் செயல்களைத்தான் புற்று செல்கள் செய்கின்றன.
வெற்றிகளும் தோல்விகளும்
1975-க்குப் பிறகு, குழந்தைகளிடையே புற்றுநோய் மரணங்கள் பாதியாகக் குறைந்திருக்கின்றன. வயதானவர் களைப் பொறுத்தவரை, ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் சில வகைப் புற்றுநோய்களை, சிலவகைக் கூட்டு மருந்துகள், கதிரியக்கச் சிகிச்சை, அறுவைச்சிகிச்சை போன்றவற்றைக் கொண்டு குணப்படுத்திவிடலாம். வேறு சில வகைப் புற்றுநோய்களைச் சில ஆண்டுகள்வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சில சமயம் காலம் முழுக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். ஆனால், மிகக் கடுமையான புற்றுநோய்களைப் பொறுத்தவரை, மரணத்தைச் சில மாதங்கள் தள்ளிப்போடலாம் அவ்வளவுதான்.
ஒட்டுமொத்தமாக, நோய்த்தடுப்புதான் நமக்கு மிகவும் ஊக்கமூட்டும் பலன்களைக் கொடுக்கிறது. உலகமெங்கும், 15-லிருந்து 20% வரையிலான புற்றுநோய்கள் கிருமிகளால் தொற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. குளிர் சாதன வசதிகள் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் குடல் புற்றுநோய் குறிப்பிடத் தகுந்த அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் இப்படிக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் கருப்பைவாய்ப் புற்றுநோயைக் கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டும் திறன் மிக்கவை.
போக வேண்டிய தூரம் அதிகம்
புகைப்பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரங்களின் வெற்றி காரணமாக, அமெரிக்காவில் புற்றுநோய் மரணங்களில் 30 சதவீதத்துக்குக் காரணமாக இருந்த நுரையீரல் புற்றுநோய் சீராகக் குறைந்துவருகிறது. உடல் பருமனும், கூடவே நீரிழிவு நோயும் புற்றுநோய்க்கு இடம்கொடுக்கின்றன என்பதால், மேம்பட்ட பரிசோதனைகள் மூலம் மேலும் நாம் முன்னேற்றம் காண முடியும். தொழிற்சாலைகளால் ஆயிரக் கணக்கான வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலோடு கலக்கின்றன. விதிமுறைகளை மேலும் தீவிரமாக்கினால், புற்றுநோய் விகிதத்தை மேலும் குறைக்க முடியும்.
பெரும்பாலான முன்னேற்றங்கள் பணக்கார நாடுகளில்தான் ஏற்பட்டிருக்கின்றன. அரசியல் தரப்புகளில் போதுமான துணிவு இருந்தால், இந்த முன்னேற்றங்களை வறிய நாடுகளுக்கும் கொண்டுசெல்லலாம். அமெரிக்காவில், புற்றுநோய் விகிதத் தில் இனரீதியாக நிலவும் வேறுபாடுகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
அறிவியலில் தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். சில வகையான புற்று நோய்களுக்கு அளிக்கப்படும், எதிர்ப்புசக்திக்கான புதிய சிகிச்சைகள் நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகின்றன. புற்றுநோயின் மரபணுத் தடத்தைத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஜெனோமிக் உள்ஆய்வுகள் (ஜெனோமிக் ஸ்கேன்ஸ்), செல்களில் ஏற்பட்டிருக்கும் சேதத்தைச் சரிசெய்து பழைய நிலைக்குக் கொண்டுவரும் நுண் எந்திரன்கள் (நானோ ரோபோ) என்றெல்லாம் புதுப்புது சாத்தியங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
நம்மில் சிலர் 200 வயதுவரை வாழக்கூடிய நாள் வரலாம். சாகாவரம் அளிக்கும் அருமருந்து கிடைத்தால் சரி; அப்படிக் கிடைக்காவிட்டால், எந்த ஒரு உடலுமே வாழ்க்கை ஏற்படுத்திய அத்தனை ஆபத்துகளையும் வெற்றிகொண்டு கடைசியில் ஒரு புள்ளியில் வந்து நின்றுதான் ஆக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மேலும்மேலும் செல் மாறுபாடுகள் சேர்ந்துகொண்டே வரும். இரட்டை சவால்களில் இதயம் தாக்குப்பிடித்து நிற்கிறது என்றால், கடைசியில் புற்றுநோய் காத்திருக்கும்.
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

இந்திய குடியரசு தினம்

1959-ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு | படம்: இந்து ஆவணக்காப்பகம்
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நம் நாடு சுதந்திரம் பெற்றதைத்தான் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திரத் திருநாளாகக் கொண்டாடுகிறோமே, ஜனவரி 26ல் குடியரசு தினம் என்றொரு விழா ஏன் என்ற கேள்வி சிலர் மனங்களில் எழக்கூடும்.
எத்தனையோ மன்னர்களால் ஆளப்பட்ட நாம், ‘இறையாண்மைமிக்க சமத்துவ மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு’ நாடாக மாறிவிட்டோம் என்பதை நமக்குள் நினைவுபடுத்திக்கொள்ளவும், உலக நாடுகளுக்குப் பறைசாற்றவும் தான் ஆண்டுதோறும் இந்தக் குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறோம்.
இது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய சிறப்புகளையும் பலங்களையும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களை உற்சாகப்படுத்தவும், வெளிநாட்டினர் நம்மைப் புரிந்துகொள்ளவும் தான் குடியரசு தினத்தன்று ராணுவத்தின் அணிவகுப்பும் பிற துறைகளின் அணி வகுப்புகளும் இடம்பெறுகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு என்ற சிறப்புகளுடன் பல்வேறு மொழி, மத, இன, கலாச்சார மக்களைக் கொண்ட புராதனமான நாடு இந்தியா என்பதை உலகோர் உணர இந்த குடியரசு தின விழா வாய்ப்பு தருகிறது.
அரசியல் சட்ட ஏற்பு நாள்
உலகிலேயே மிக நீண்ட, எழுதப்பட்ட அரசியல் சட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா. அந்த அரசியல் சட்டம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளையே குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவுக்கு பூரண சுயராஜ்யம் வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக 1930 ஜனவரி 26-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
அதன் பிறகு சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டது. அண்ணல் மகாத்மா காந்தியின் சீரிய தலைமையில் சத்தியாகிரகப் போராட்டங்கள் மூலம் சாத்வீகமாக, வன்முறை சிறிதும் கலவாத வழிமுறைகளில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. இறுதியில் பிரிட்டிஷ் அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததும், இந்தியாவின் சமூக, கலாச்சார, அரசியல் சூழலுக்கேற்ப, ‘எழுதப்பட்ட அரசியல் சட்டம்’ தேவை என்று உணரப்பட்டதால் ‘அரசியல் சட்ட நிர்ணய சபை’ ஏற்படுத்தப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அந்த அரும்பணி நிறைவேறியது. 1949 நவம்பர் 26-ம் தேதி புதிய அரசியல் சட்டம் இயற்றி முடிக்கப்பட்டு தீர்மானம் மூலம் ஏற்கப்பட்டது. ஆனால், 1950 ஜனவரி 26-ம் தேதிதான் அது அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. அன்றுதான் இந்தியா அதிகாரப்பூர்வமாக ‘குடியரசு’ நாடானது. மக்களால், மக்களே மக்களை ஆளும்நாடுதான் குடியரசு நாடு.
இங்கு மன்னர், சக்ரவர்த்தி என்று எவருமில்லை. அதைத்தான் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பு மரியாதையும் கலை நிகழ்ச்சிகளும், மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் டெல்லி ராஜபாட்டையில் ஊர்வலமாக வரும். மத்திய, மாநில போலீஸ் படைகள், தீரச் செயல்களுக்காக விருது பெறும் சிறார்கள் என்று பலரும் அந்த அணிவகுப்பில் வருவார்கள்.
முப்படைகளின் ஆள் பலம், ஆயுத பலம் என்னவென்று அந்தப் பேரணி கோடிட்டுக்காட்டும். விமானப் படையினரின் வான் சாகசங்களும் இடம் பெறும். நாட்டின் புதிய பொறியியல், தொழில்நுட்ப சாதனைகள், வேளாண்துறை சாதனைகள், தொழில்துறை சாதனைகள் போன்றவை அலங்கார ஊர்திகள் வாயிலாக வெளிக்காட்டப்படும். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சாதனைகளும் காட்சியில் இடம்பெறும். கலாச் சாரத்தைப் பறைசாற்றும் நடனங்கள், காட்சிகள் இடம் பெறும்.
ஜவான்களுக்கு பிரதமர் அஞ்சலி
நாட்டைக்காக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் போரிலும் பிற சமயங்களிலும் உயிர்த்தியாகம் செய்த முப்படை வீரர்களின் நினைவாக, அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். பிறகு 21 பீரங்கிகள் முழங்க தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றி வைப்பார். தேசிய கீதம் அப்போது இசைக்கப்படும். பிறகு அணிவகுப்பு தொடங்கும். குடியரசுத் தலைவருடன் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அணிவகுப்பைப் பார்வையிட்டு முப்படையினர் மற்றும் சிறப்புப் படையினரின் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. குடியரசு தின அணிவகுப்பு தொலைக்காட்சி மூலம் வர்ணனைகளுடன் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
என்.சி.சி. அணிவகுப்பு
குடியரசு தினத்துக்கு மறுநாள் தேசிய மாணவர் படையினரின் வண்ணமிகு அணிவகுப்பைப் பார்வையிட்டு அவர்களுடைய மரியாதையைப் பிரதமர் ஏற்றுக்கொள்வார். இது இரண்டாம் நாள் நிகழ்ச்சி. குடியரசு தினத்துக்கு 2 நாள் முன்னதாகவே ‘லோக் தரங்’ என்ற கலாச்சார நிகழ்ச்சி தொடங்கும். இது 29ம் தேதி வரை தொடரும். நாட்டின் வெவ் வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமிய கலாசார நிகழ்ச்சிகளுக்கு இதில் முக்கியத்துவம் தரப்படும்.
ஜனவரி 26 தொடங்கி 29ம் தேதி வரை டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய அரசு கட்டடிங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 29-ம் தேதி ராணுவத்தின் இசைக் குழுவினர் கூட்டாக அளிக்கும் ‘படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி’ நடைபெறும். ராணுவ இசைக் குழுவினர் தங்களுடைய இசைத் திறனையும் நாட்டுப் பற்றையும் அப்போது வெளிப்படுத்துவர். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தேசியக் கொடி உரிய மரியாதைகளுடன் கீழிறக்கப்பட்டு குடியரசு தின விழா முடித்துவைக்கப்படும்.
அதற்கு முன்னர் “சாரே ஜஹான் சே அச்சா” என்ற தேச பக்திப் பாடல் ராணுவக் குழுவினரால் இசைக்கப்படும். குடியரசு தின அணிவகுப்பை வெளிநாடுகளின் தூதர்கள், இந்திய அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், கலையுலக நட்சத்திரங்கள், பத்திரிகையாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், பேராசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், வேளாண் பெருமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு பெருமிதம் கொள்வார்கள். வீரதீர சாகசங்களுக்காக விருதுபெறும் சிறார்கள் யானைமீது அம்பாரியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள்.
இதுவரை பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்கள்
குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் பட்டியல்:
1950 இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ,
1954 – பூடான் மன்னர் ஜிக்மே டோர்ஜி வாங்சுக்.
1955 பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் மாலிக் குலாம் முகம்மது,
1958 சீன மார்ஷல் யீ ஜியான்யிங்
1960 சோவியத் யூனியன் அதிபர் கிளிமெண்ட் வோரோஷிலாவ்.
1961 பிரிட்டன் மகாராணி எலிசபெத்.
1963 கம்போடிய மன்னர் நரோத்தம் சிகானுக்.
1965 பாகிஸ்தான் வேளாண், உணவுத் துறை அமைச்சர் அப்துல் ஹமீத்.
1968 சோவியத் யூனியன் பிரதமர் அலெக்சி கோசிஜின் , யூகோஸ்லாவியா அதிபர் ஜோசப் டிட்டோ.
1969 பல்கேரிய பிரதமர் தோடோர் ஷிவகோவ்.
1971 தான்சானியா அதிபர் ஜூலியஸ் நைரேரே.
1972 மொரீஷியஸ் பிரதமர் சிவசாகர் ராம்குலம்.
1973 ஜைரே அதிபர் மொபுடு சேசே சேகோ.
1974, யூகோஸ்லாவியா அதிபர் ஜோசப் டிட்டோ, இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக.
1975 ஜாம்பியா அதிபர் கென்னத் கௌண்டா
1976 பிரான்ஸ் பிரதமர் ஜாக்கஸ் சிராக்.
1977 போலந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வர்ட் கிரெக்.
1978 அயர்லாந்து அதிபர் பேட்ரிக் ஹில்லெரி.
1979 ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் பிரேசர்.
1980 பிரான்ஸ் அதிபர் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டெய்ங்.
1981 மெக்ஸிகோ அதிபர் ஜோஸ் லோபஸ் போர்டில்லோ.
1982 ஸ்பெயின் மன்னர் ஜுவான் கார்லோஸ்.
1983 நைஜீரிய அதிபர் ஷேஹு ஷாகரி,
1984 பூடான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்.
1985 அர்ஜென்டினா அதிபர் ரவுல் அல்ஃபோன்சின்.
1986 கிரீஸ் பிரதமர் ஆண்ட்ரியா பாப்பாண்ட்ரூ.
1987 – பெரு அதிபர் ஆலன் கார்சியா.
1988 இலங்கை அதிபர் ஜூனியஸ் ஜெயவர்த்தனே.
1989 வியட்நாம் பொதுச் செயலர் குயான் வான் லின்.
1990 மொரீஷியஸ் பிரதமர் அனிருத் ஜெகன்னாத்.
1991 மாலத்தீவுகள் அதிபர் மம்மூன் அப்துல் கய்யூம்.
1992 போர்ச்சுகல் அதிபர் மரியோ சோரஸ்.
1993 பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர்.
1994 சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் தாங்.
1995 தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா.
1996 பிரேசில் அதிபர் பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ.
1997 டிரினாட் டொபாகோ பிரதமர் வாசுதேவ் பாண்டே.
1998 பிரான்ஸ் அதிபர் ஜாகஸ் சிராக்.
1999 நோபாள மன்னர் வீரேந்திரா வீர் விக்ரம் ஷா தேவ்.
2000 நைஜீரிய அதிபர் ஒலுசெகன் ஒபசாஞ்சோ.
2001 அல்ஜீரிய அதிபர் அப்துல் அஜீஸ் போடிஃப்ளிகா.
2002 மொரீஷியஸ் அதிபர் காசம் உதீம்.
2003 ஈரான் அதிபர் முகம்மத் கடாமி.
2004 பிரேசில் அதிபர் லூயி இனாசியோ லூலா டி சில்வா.
2005 பூடான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்.
2006 சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்.
2007 ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
2008 பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி.
2009 கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ்.
2010 தென் கொரிய அதிபர் லீ மியுங் பாக்.
2011 இந்தோனேசிய அதிபர் சுசீலோ பம்பாங் உதயணோ.
2012 தாய்லாந்து பிரதமர் யிங்சுக் ஷினவத்ரா.
2013 பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியெல் வாங்சுக்.
2014 ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

Monday 26 January 2015

எம்.ஆர்.சீனிவாசன், அத்வானி, அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண்; கோபால்சாமி, சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு


எம்.ஆர்.சீனிவாசன், அத்வானி, அமிதாப் | கோப்புப் படம்
எம்.ஆர்.சீனிவாசன், அத்வானி, அமிதாப் | கோப்புப் படம்
முன்னாள் அணுசக்தி கழகத் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் (தமிழகம்), பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (குஜராத்), நடிகர் அமிதாப் பச்சன் (மகாராஷ்டிரம்) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 104 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 20 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பட்டியில் 17 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் 14 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு இறப்புக்கு பின்னர் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விபூஷண்
அரசியல் தலைவர் எல்.கே.அத்வானி (குஜராத்), நடிகர் அமிதாப் பச்சன் (மகாராஷ்டிரம்), விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் (தமிழகம்), அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), துளசி மடத்தின் ஜெகத்குரு ராமானந்த் ஆச்சார்யா (உ.பி.) உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபால்சாமி, சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி (தமிழகம்), கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகள்
வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமாரி (தமிழகம்), பி.வி.ராஜாராமன் (தமிழகம்), மறைந்த ஆர்.வாசுதேவன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

Sunday 25 January 2015

Kodikkalpalayam பைத்துல் மால் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா

கொடிக்கால் பாளையம் பைத்துல் மால் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா 25/01/2015







Friday 23 January 2015

Kodikkalpalayam பைத்துல்மால் அலுவலகம் திறப்புவிழா அழைப்பு






KEIA கூட்டம்

கொடிக்கால்பாளையம் எமிரோட்ஸ் இஸ்லாமிக் அசோசியேசன் KEIA வின்
ஆண்டு கூட்டம் இன்று 23/1/15 துபையில் நடைபெறுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.வல்ல இறைவனின் கருணை யை கொண்டு பல சாதனைகளை நமதூர் மக்களுக்கும் ஊருக்கும் புரிய பிராத்திக்கிறோம் ...

Thursday 22 January 2015

Kodikkalpalayam அஞ்சலக நூற்றாண்டு விழா கண்காட்சி -முழு தொகுப்பு




Mq;fpNyaH fhyj;jpy; njhlq;fg;gl;l nfhbf;fhy;ghisak; fpis mQ;ryfk; jw;NghJ E}w;whz;il nfhz;lhb tUfpwJ.
  gpupl;b]; Vfhjpgj;jpa Ml;rpapy;> 1915-k; Mz;by; xUq;fpize;j jQ;rht+H khtl;lj;Jf;Fs; cs;slf;fp ,Ue;j ehfg;gl;bdk; jhYfh jpUth&H efuhl;rpg;gFjpf;Fs;gl;l nfhbf;fhy;ghisaj;jpy; fpis mQ;ryk; njhlq;fg;gl;lJ. mQ;ryfj;jpy; rpWNrkpg;G> ePz;lfhy Nrkpg;Gfzf;Fj; njhlq;fp njhlf;ff; fhyj;jpypUe;J mQ;ry;Jiwf;F tUthia <l;bf;nfhLj;J te;Js;sJ. ,e;jmQ;ryfj;Jf;F kNyrpah> rpq;fg;g+H  gh;kh kw;Wk; muGehLfspypUe;J fbjg; Nghf;Ftuj;J ,Ue;J ,ilapy; epWj;jk; VJkpd;wp njhlHe;J jw;NghJ tiu fbjj; Nghf;Ftuj;J njhlHe;J nfhz;bUf;fpwJ.
  1915-y; njhlq;fpa ,e;j mQ;ryfk; 2015-y; E}w;whz;il nfhz;lhLfpw ngUikia ngw;Ws;sJ. nfhbf;fhy;ghisak; kj;yGy; ifuhj; koiyah; kw;Wk; njhlf;fg;gs;sp rhHgpy; ,e;j mQ;ryf E}w;whz;iltpohit nfhz;lhl Vw;ghL nra;J>mjd; tpoh Gjd;fpoik eilngw;wJ.
  tpohtpy;>jpUth&h; khtl;l ehzak; kw;Wk; mQ;ry;jiy Nrfhpg;ghsh;fs; rq;fk; kw;Wk; gs;sp khztHfs; Nrfupj;j ,e;jpah> rpq;fg;g+H> kNyrpah> rTjpmNugpah> mnkupf;fh cs;spl;l ehLfspd; jghy;jiyfis Nrfupj;J fz;fhl;rpf;F itj;jpUe;jdH. tpf;Nlhupahuhzp> vl;tHL MfpNahH fhyj;jpa jghy; ciufs;> ,e;jpa Rje;jpuj;Jf;Fg; gpwF mQ;ry;Jiwapy; jiytHfs;> tpisahl;LtPuHfs;> fiyf;F ngUikNrHj;jtHfs;> fyhr;rhuj;ij gpujpgypf;Fk; epfo;Tfs; Fwpj;J ntspapl;l jghy;jiyfs; fz;fhl;rpapy; itj;jpUe;jdH.
   ,f;fz;fhl;rpia nfhbf;fhy;ghisak; muR Nky;epiyg;gs;sp> efuhl;rpnjhlf;fg;gs;sp> uhkNfrhiy efuhl;rpg; gs;sp> ghj;jpkh nkl;upf; gs;spkhztHfs; kw;Wk; Ch; nghJkf;fs; ghHj;J gad;ngw;wdH.

 Kd;djhf eilngw;w fpis mQ;ryf E}w;whz;L tpoh fz;fhl;rpia jpUth&H tlf;F mQ;ryf cjtp mYtyH Rg;gpukzpak; Jtf;fp itj;jhh;. gs;sp jiyth; fypY}h; u`;khd; jiyikapy; nfhbf;fhy;ghisak; fpis mQ;ryf mYtyH Ry;jhd; mg;Jy; fhjH gs;sp Jizj;jiyth; K`k;kJ Mjk; nghUshsh; K`k;kJ mg;Jy; fhjh; nrayh; [yhYjPd;  cs;spl;NlhH gq;Nfw;wdH.















மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு



பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. படிகட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள் உயர் கல்வித்துறை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் இலவச பஸ்-பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday 21 January 2015

Kodikkalpalayam - அஞ்சலக நூற்றாண்டு கண்காட்சி அழைப்பு

அன்பான வேண்டுகோள் !

ஏக இறைவனின் கருனையை கொண்டு நமது முன்னோர்கள் நமதூருக்கு அளித்து சென்ற கொடிக்கால் பாளையம்
 கிளை தபால் நிலையம் (POST OFFICE )தனது நூறு வயதை அடையும் நிகழ்வு இந்த 2015ம் ஆண்டு எட்டியுள்ளது என்பது நாம் அறிந்தே .
இதன் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அஞ்சல் தலைகள் சேகரிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் அரிய பழங்கால கடிதங்கள் பொருட்கள்  நம் ஊர்மக்களுக்கு காட்சிப்படுத்தவும் அறிய வாய்ப்பு அமைந்துள்ளது.

நமதூர் மத்லபுல் கைராத் கல்வி குழும்ம், திருவாரூர் மாவட்ட அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கொடிநகர் டைம்ஸ் இணைந்து கண்காட்சி நடைபெறுகிறது .

நாள். : 22 ஜனவரி 2015 வியாழன்
   காலை 9: 30 மணிக்கு

இடம் :
மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளி.
கொடிக்கால்பாளையம்,திருவாரூர்

இந்த பதிவை பார்க்கும் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து சென்ற தலைமுறை செய்த வரலாற்றை நாம் வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல முயலுவோம் .வாய்ப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக வருங்கள் இது நமது நிகழ்ச்சி .....

Tuesday 20 January 2015

Kodikkalpalayam - மத்லபுல் கைராத் பள்ளி விளையாட்டு தினம்

நமதூர் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் இன்று 20/01/2015 அதன் தலைவர் கலிலூர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் முஹம்மது ஆதம்,ஜமாஅத் ஆடிட்டர் அப்துல் ரெஜாக்,பள்ளி பொருளாளர் முஹம்மது அப்துல் காதர்,நிர்வாக உறுப்பினர் நிஷாத் அலி ,தலைமை ஆசிரியை கலையரசி மற்றும் பெற்றோர்கள்,மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.