Friday, 16 January 2015

விடுமுறை நாளில் ஒரு விடுமுறைச் செய்தி : உலகிலேயே இந்தியாவில் தான் அரசு விடுமுறை அதிகமாம்


பொங்கல் விடுமுறையை பலரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் விடுமுறைப் பற்றிய ஒரு செய்தி நம் கண்ணில் பட்டது. அதாவது, உலகத்திலேயே குறிப்பாக ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அதிக அரசு விடுமுறை நாட்கள் விடப்படுகிறதாம்.
அலுவலகம் செல்வோர், அரசு விடுமுறை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால், இந்தியாவில் 21 நாட்கள் அரசு விடுமுறை விடப்படுகிறது. இந்த 21 என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.
பிலிப்பைன்ஸ் (18), சீனா (17), ஹாங்காங் (17), மலேசியா (15) போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவில் அதிகமான விடுமுறைகள் விடப்படுகிறது.

No comments:

Post a Comment