சேலத்தில் இலவசமாக கணினி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் சிறுதொழில் அமைச்சக உதவியுடன் நடைபெறும் இந்தப்பயிற்சியின் நோக்கம் சுயதொழில் வேலையில் ஈடுபட வைத்து வருமானம் ஈட்ட வைப்பதாகும்.
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-முதல் 35 வயதுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது முழுநேர இரண்டு மாத காலப் பயிற்சியாகும். இதில் அடிப்படை கணினி, கணினி பாகங்கள், கணினி ஒன்றிணைத்தல், பிரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடித்த பின்பு இந்திய அரசு சான்றிதழ், வேலைக்குச் செல்லவும், சுயதொழில் ஆரம்பிக்கவும் தொடர் உதவிகள் கிடைக்கும்.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், அனைத்து கல்விச் சான்று நகல்கள், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்தை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல்களுடன் நேரில் இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் எண்.516-ஏ, ரங்கா நகர், மசூதி பின்புறம், சூரமங்கலம், சேலம் - 636 005, (தொலைபேசி எண்0427-2335383, செல்போன் 9087818283) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்குநர் பி.மோகன்ராம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment