பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. படிகட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள் உயர் கல்வித்துறை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் இலவச பஸ்-பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment