எல்.பி.ஜி. வாடிகையாளர்களுக்கு வியாழக்கிழமை முதல் வங்கிக் கணக்குகளில் மானியத் தொகை வந்து சேரும். | கோப்புப் படம்.
நாடு முழுதும் உள்ள சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு வரும் வியாழக்கிழமை முதல் வங்கிக் கணக்குகளில் சிலிண்டர் மானியத் தொகை செலுத்தப்படவுள்ளது.
வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனாளர்களுக்கு ரூ.568 வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இந்தத் தொகையின் மூலம் சந்தை விலைக்கு 14.2 கிலோ சிலிண்டர்களில் எரிவாயு மறுநிரப்புதல் செய்து கொள்ளலாம்.
டெல்லியில் தற்போது மானிய விலை 14.2 கிலோ சிலிண்டர் ரூ.417-க்கு கிடைக்கிறது. மறுநிரப்புதலுக்கான சந்தை விலை சிலிண்டருக்கு ரூ.752 ஆக உள்ளது.
மற்ற நகரங்களில் உள்ளூர் வரிகளைப் பொறுத்து இந்த விலை மாறுபாடடையும்.
“இத்திட்டத்தில் இணைய விரும்பும் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடனும், எல்.பி.ஜி. நுகர்வோர் எண்ணுடனும் இணைக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணை தங்களது 17 இலக்க எல்.பி.ஜி. அடையாள எண்ணுடன் இணைத்தல் அவசியம்” என்று அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
மானியத் தொகையை வங்கிக் கணக்குகளில் அரசு செலுத்தும் திட்டம் நவம்பர் 15ஆம் தேதி முதல் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இது நாடு முழுதும் ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் எல்.பி.ஜி. நுகர்வோருக்கு ரொக்க மானியம் 14.2 கிலோ எடையுடைய 12 சிலிண்டர்களுக்கும் 5 கிலோ எடையுடைய 34 சிலிண்டர்களுக்கும் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் இணைந்து முதல் சிலிண்டருக்கு புக் செய்தவுடன் மானியத் தொகை வங்கிக் கணக்குகளில் வந்து சேரும். சிலிண்டரைப் பெற்ற பிறகு இன்னொரு மானிய முன் பணம் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேரும்.

No comments:
Post a Comment