Monday 26 January 2015

எம்.ஆர்.சீனிவாசன், அத்வானி, அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண்; கோபால்சாமி, சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு


எம்.ஆர்.சீனிவாசன், அத்வானி, அமிதாப் | கோப்புப் படம்
எம்.ஆர்.சீனிவாசன், அத்வானி, அமிதாப் | கோப்புப் படம்
முன்னாள் அணுசக்தி கழகத் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் (தமிழகம்), பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (குஜராத்), நடிகர் அமிதாப் பச்சன் (மகாராஷ்டிரம்) ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 104 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 20 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பட்டியில் 17 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் 14 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு இறப்புக்கு பின்னர் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விபூஷண்
அரசியல் தலைவர் எல்.கே.அத்வானி (குஜராத்), நடிகர் அமிதாப் பச்சன் (மகாராஷ்டிரம்), விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் (தமிழகம்), அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), துளசி மடத்தின் ஜெகத்குரு ராமானந்த் ஆச்சார்யா (உ.பி.) உள்ளிட்ட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபால்சாமி, சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி (தமிழகம்), கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகள்
வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமாரி (தமிழகம்), பி.வி.ராஜாராமன் (தமிழகம்), மறைந்த ஆர்.வாசுதேவன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment