Saturday, 17 January 2015

திருவாரூரில் 1.22 லட்சம் குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து


திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.18) 1,22,278 குழந்தைகளுக்கும். நாகையில் 1,46,586 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
திருவாரூரில்: 870 முகாம்கள் மூலம் 1,22,278 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் முதல் தவணையாக சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், வளாóகல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்படவுள்ளது. மேலும் நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பணி நிமித்தம் இடம் பெயாóந்து செல்லும் செங்கல் சூளை தொழிலாளாóகள், கட்டுமானத் தொழிலாளாகள், பிற மாநில தொழிலாளாóகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணியில் சுகாதாரம், ஊட்டச்சத்து, ஊரக வளாóச்சி, கல்வித் துறை, வருவாய்த் துறை, மாணவாóகள், தன்னார்வலாகள், ரோட்டாõ சங்கத்தினாó ஆகியோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment