http://www.dinamani.com/latest_news/2015/01/04/திருவாரூரில்-மீலாதுநபி-பெர/article2603178.ece.
திருவாரூரில் மீலாதுநபி பெருவிழா பேரணி
By தங்கராஜ், திருவாரூர்,
First Published : 04 January 2015 11:25 AM IST
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை மீலாதுநபி பெருவிழா பேரணி நடைபெற்றது.
நபிகள்நாயகம் பிறந்த நாள் தினமான மீலாதுநபி மீலாது பெருவிழா கொடிக்கால்பாளை யத்தில் கடந்த டிசம்பர் 23 முதல் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மத்லபுல்கைராத் கல்விக்குழுமம் சார்பில் நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி பள்ளிவாசலில் இரவு தோறும் மார்க்க அறிஞர்கள் பலர் பங்கேற்று தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி இரவு நாளான சனிக்கிழமை ஜமாஅத் தலைவர் ரபியுதீன் தலைமையில், பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் கிராஅத் குரான் வசனம் ஓதினார்.
சிறப்பு பேச்சாளராக காரைக்கால் பள்ளிவாசல் இமாம் அலி முஹ்யித்தீன் சமதானி நபி களாரின் அருட்கொடையும் பண்புகள் குறித்து பேசினார். தவிர நபிகள் நாயகம் குறித்த வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மத்புல்கைராத் பள்ளி மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலிருந்து மீலாது நபி பேரணி புறப்பட்டு பள்ளி மாணவர்கள், ஜமாஅத்தார்கள் பங்கேற்று அனைத்து தெருக்க ளிலும் நபிகள் நாயகம் புகழ்ந்து கூறியவாறு சென்றனர்.
பேரணியில், பள்ளிவாசல் இமாம்கள் அப்துல் நாசர், முஹிப்புல்லாஹ் ஷாஹ் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லி ஜெஹபர் ஷேக் அலாவுதீன், மத்லபுல் கைராத் கல்விக் குழு மச் செயலர் முஹம்மது ஆதம், துணை செயலர் ஜலாலுதீன், பொருளர் முஹம்மது அப்துல்காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment