குழந்தைகளுக்கான நூடுல்ஸ் விளம்பரங்கள் நிறைய நிறைய. இன்னொரு பக்கம், விதவிதமான வடிவங்கள், ஃப்ளேவர்கள் என நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்குகின்றன. விளைவு... கிராமத்துக் குழந்தைகள் வரை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் நூடுல்ஸ்!
‘இரண்டே நிமிடத்தில் ரெடி!’ என்பதையே பிரதான பிளஸ் பாயின்டாகக் கொண்டுள்ள இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், நம் வயிற்றில் செரிக்க எத்தனை மணி நேரம் ஆகிறது என்பது, அதிர்ச்சித் தகவல்!
மஸாச்சுசெட்ஸ் ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர். பிரேடன் குவோ, இதுகுறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினார். ஒருவரை பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட வைத்து, உடனேயே மாத்திரை வடிவிலான கேமரா ஒன்றை அவரை விழுங்கச் செய்தார். கேமரா குடலுக்குச் சென்றதும் அங்கு நூடுல்ஸ் செரிக்கும் புராசஸ், இங்கே வெளியே மானிட்டரில் தெரிகிறது. சாதாரணமாக, வீட்டில் தயாரிக்கும் நூடுல்ஸ் நம் வயிற்றில் 20 நிமிடங்களில் ஜீரணிக்கப்பட்டு விடும். ஆனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இரண்டு மணி நேரம் கழித்தும் பாதியளவே ஜீரணிக்கப்படுகிறது. செரிமானத்திலேயே இவ்வளவு சிக்கல் என்றால், அது ஏற்படுத்தும் விளைவுகள் அச்சம் கொள்ள வைக்கின்றன! அதன்பின் உங்கள் குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுங்கள்! - ம.பிரியதர்ஷினி |
No comments:
Post a Comment