Wednesday 30 June 2021

CUTN: நமதூருக்கு அருகில் உள்ள மத்திய பல்கலைகழகம்..! 

 


நிறைய பேருக்கு நமதூருக்கு ( அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எது என்று கேட்டால், ஞாபகம் வருவது திரு. வி.க. அரசு கலை கல்லூரிதான். ஆனால் அதே திருவாரூர் அருகில்தான் (Just 15km) மத்திய அரசின் தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu) இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. மத்தியப் பல்கலைகழகம்-அப்படின்னா என்ன...? அதில் என்ன ஸ்பெஷல் ? மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 20 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது. இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் (2009ல்) ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர். விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது இந்த CUTN பல்கலைகழகம். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது CUTN. பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி M.A. தமிழ் படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் Ph.D.க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது. எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது. இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. CUTN பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: 🔹Madras School of Economics (MSE) 🔹Central Institute of Classial Tamil (CICT) 🔹National Law School of India (NLSIU) 🔹Tamil Nadu Agricultrual University (TNAU) துறைகள்/SCHOOLS 🔳 BASIC & APPLIED SCIENCES 🔳 MATHEMATICS 🔳 COMPUTER SCIENCES 🔳 SOCIAL SCIENCES 🔳 HUMANITIES 🔳 BEHAVIORAL SCIENCES 🔳 COMMERCE 🔳 BUSINESS MANAGEMENT 🔳 COMMUNICATION 🔳 EDUCATION & TRAINING 🔳 TECHNOLOGY 🔳 PERFORMING ARTS 🔳 FINE ARTS 🔳 EARTH SCIENCES 🔳 LIFE SCIENCES 🔳 LEGAL STUDIES என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? Five Years M.Sc Integrated Courses (iM.Sc.) ஐந்து வருட ஒருங்கினைத்த M.Sc., 🔸Integrated M.Sc., Chemistry 🔸Integrated M.Sc., Economics 🔸Integrated M.Sc.,Life Sciences 🔸Integrated M.Sc., Mathematics 🔸Integrated M.Sc., Physics Two Year M.Sc., Couses (after graduation) ▪️ M.Sc., Chemistry ▪️ M.Sc., General Economics ▪️ M.Sc., Financial Economics ▪️ M.Sc., Acturarial Economics ▪️ M.Sc., Environmental Economics ▪️ M.Sc., Applied Quantitative Finance Two Year M.Tech., Courses (after graduation) ◽️M.Tech., Material Science & Nano Technology ◽️M.Tech., Energy & Environmental Technology Two Year M.A. Courses ( after graduation) 🔸M.A. English Studies 🔸M.A. HIndhi 🔸M.A. Media & Communication 🔸M.A. Social Work 🔸M.A. Tamil Ph.D. program (after post graduation) 🔸Ph.D in Chemistry 🔸Ph.D in Economics 🔸Ph.D in English 🔸Ph.D in Lifescience 🔸Ph.D in Mathematics 🔸Ph.D in Physics 🔸Ph D in Tamil CUTNல் சேர்வது எப்படி? CUCET (Central Universities Common Entrance Test) நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு 2021-22 க்கான சேரக்கை அறிவிப்பு கொரோனா இரண்டாம் அலை காரணமாக இதுவரை வெளியாகவில்லை. அனைத்து மத்திய பல்கலை நுழைவுத்தேர்வுக்கான இணையதளம் : https://www.cucetexam.in/ மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில்.... Contact Info: Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005 TELEPHONE: +91 4366 277230 EMAIL: info@cutn.ac.in CUTN இணையதளம் : https://www.cutn.ac.in/ What is CUCET? Central Universities Common Entrance Test (CUCET) is an all-India level entrance exam conducted jointly by 14 central universities for admission in UG, PG, and PhD courses offered in all the participating institutions. CUCET is conducted once a year across 120 cities in India. The exam is conducted in offline mode (pen & paper) which is for two hours. A total of 20 universities participate, including 13 central universities and apart from them, Dr B R Ambedkar School of Economics (BASE) is also a participating institute for the exam. The Central University of Rajasthan is the coordinating university, which invites applications from eligible students each year. The official dates for CUCET 2021 will be announced soon on the official website of CUCET.

Saturday 26 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு




கொடிக்கால்பாளையம் நடுத்தெரு கஞ்சாவீட்டு மர்ஹூம் கா.மு.முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், மு.முஹம்மது அப்துல்காதர், மர்ஹூம் மு.முஹம்மது ஹாஜா அலாவுதீன், மு.முஹம்மது சுல்தானுல் ஆரிபின் , மு.முஹம்மது பதுருதீன், மு.முஹம்மது சித்திக் இவர்களின் தாயாருமான பொன்னாச்சி என்கிற ஹாஜியா.சுபைதா பீவி அவர்கள் மலாயத்தெரு தனது மூத்த மகனார் இல்லத்தில் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன். 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கொடிக்கால் பாளையம் நியாயவிலை கடை மேலாளர் ஆனந்த் மரணம்


 

ஜூலை 5 வரை திருவாரூர் மாவட்டத்தில் தளர்வுடன் ஊரடங்கு அமல்

Thursday 24 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


 நமதூர் புதுமனைத்தெரு ஆலிம்ஷா வீட்டு மர்ஹூம் த.மு.இனாயத்துல்லா அவர்களின் மகனாரும், அடியக்கமங்கலம் பாரூக் ஷா அவர்களின் மாமனாரும் ,ப.செய்யது கஜ்ஜாலி மற்றும் ப.செய்யது மன்சூர் ஆகியோரின் தகப்பனாருமான ஹாஜி. இ.பஹாவுதீன் அவர்கள் மெளத்


. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன் 

 அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

திருவாரூர் தடுப்பூசி முகாம்


 

Monday 21 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 


நமதூர் மர்ஹீம் KP காதர்மைதின் அவர்களின் மனைவியும் சாகுல்ஹமீது அவர்களின் தாயாரும் அப்துல்கப்பார் அவர்களின் மாமியாரும் மாஸப்பா அவர்களின் பாட்டியாருமாகிய தங்கா என்கிற சிராஜ்நிஷா அவர்கள் பர்மா தெரு 52 பணப்பகுதியில் வஃபாத்தாகி விட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம்

Tuesday 15 June 2021

கொடிக்கால்பாளையம்

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு

15.06.2021



 நமதூர் நடுத்தெரு மர்ஹூம் வெ.ப.மு.அப்துல் வஹாப் மற்றும் மர்ஹூம் வெ.ப.மு.அப்துல் ரெஜாக் இவர்களின் சகோதரி மகனும், அடியக்கமங்கலம் ரயிலடித்தெரு, (புதுரோடு) ‘நல்லசுழி வீட்டு’, மர்ஹூம் T. முகம்மது சாலி அவர்களின் மகனாரும், M. ஹாஜா கமால், M. முகம்மது பைசல், M. முகம்மது அக்தாருல் ஆரிஃபின், M. முகம்மது யூசுப் இவர்களின் சகோதரரும், G. முஹம்மது சுல்தான் அவர்களின் தகப்பனாருமான M. கௌதுல் அமீன் அவர்கள் அமீரகம் (UAE )- அல் அய்னில் வஃபாத்தாகிவிட்டார்கள்

 இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! .

திருவாரூர்

Monday 14 June 2021

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்


 

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது*

  கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறையாததால் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித்தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டன. தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால் அந்த தேர்வை ரத்து செய்வது மட்டும் தாமதமானது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.  அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு செல்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடாக 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை நடத்தலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மாணவ-மாணவிகளை அழைத்து மாணவர் சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.  முதலில் அந்தந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பின்னரே மற்ற பள்ளிகளில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால் கூடுதலாக 15 சதவீதம் வரை இடங்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை முழுவதுமாக முடிவடைந்த பிறகு மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு


Sunday 13 June 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு


நமதூர் ஜெயம் தெரு செய்மித்தான் வீட்டு மர்ஹூம் எஸ்.எம். அப்துல் ரசீது அவர்களின் மகனாரும் A.முஹம்மது நஜீப், மர்ஹூம் A.ஹாஜா மைதீன் இவர்களின் சகோதரரும் முஹம்மது ஃபவாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய A.அப்துல் மாலிக் அவர்கள் நாகூர் மீரான் தெருவில் மௌத். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8.00 மணிக்கு நாகூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

வெளியூர் மௌத் அறிவிப்பு

Friday 11 June 2021

வெளியூர் மௌத் அறிவிப்பு


 நமதூர் மேலத்தெரு மர்ஹூம் அன்வர்தீன் அவர்களின் சம்பந்தரும் முஹம்மது ரியாஸ் அவர்களின் மாமனாரும், அடியக்கமங்கலம் ரயிலடி தெரு மர்ஹூம் ஹமீத் நத்தர் அவர்களின் மகனாரும், குத்புதீன் ,மெய்தீன் இவர்களின சகோதரரும் , முஹம்மது ஹாலிதீன் அவர்களின் தகப்பனாருமான   நிஜாமுதீன் அவர்கள் அடியக்கமங்கலம் முஹம்மதியா தெருவில் (நாகை மெயின்ரோடு) மௌத்

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

Wednesday 9 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


நமதூர் ஜெயம் தெரு செய்மித்தான் வீடு  நஜிபுதீன் மற்றும் அப்துல் மாலிக் அவர்களின் சகோதரரும் , அடியக்கமங்கலம் தவ்லத் முஹம்மது அவர்களின் மாமனாரும்,செய்யது முஹம்மது அவர்களின் தகப்பனாருமான திருவாரூர் விஜயபுரம் ஆற்றுப்பாலம் அருகில் கயிற்றுக்கடை நடத்தி வந்த ஹாஜா மெய்தீன் அவர்கள்  தெற்கு தெரு தனது இல்லத்தில் மெளத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்


அன்னாரின் ஜனாசா மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

வெளியூர் மௌத் அறிவிப்பு




 •••அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)••• ••• 

அடியக்கமங்கலம் ஜனாஸா அறிவிப்பு 

••• நமதூர் அடியக்கமங்கலம் தெற்கு தெரு, (மரஹூம்) M.புர்ஹானுதீன் அவர்களின் மகனும், M.B. முகம்மது ஜலாலுதீன், M.B. நூருல் ஹயாத் மற்றும் M.B. குத்துபுதீன் இவர்களின் சகோதரரும், ‘பெட்டிக்கார வீட்டு’ (மர்ஹூம்) அலியார் அவர்களின் மருமகனும், A. தவ்லத் முகம்மது, கௌது அலியார் இவர்களின் மச்சானுமான ‘வாப்பா கடை’ M.B. சர்புதீன் அவர்கள் அடியக்கமங்கலம் ஹைஸ்கூல் ரோடு (பிஸ்மில்லா நகர்) தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

 இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

 இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் மதியம் 2 மணிக்கு நடைபெறும்

எல்லாம் வல்ல இறைவன் அவருடைய அமல்களை பொருந்திக்கொண்டு உயரிய சொர்க்கத்தை வாங்குவனாக ஆமீன்.

Friday 4 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு


 நமதூர் மலாயத்தெரு மர்ஹூம் இ.கா.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனாரும் கூத்தூர் இம்தியாஸ் அஹமது அவர்களின் மாமனாருமாகிய E.K.M.S பசீருதீன் அவர்கள் மெளத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

Thursday 3 June 2021

கொடிக்கால்பாளையம் நகர்நல அரசு சுகாதார நிலையம் கட்டடம் திறப்பு

வெளியூர் மௌத் அறிவிப்பு


03.06.2021  கொடிக்கால்பாளையம் நடுத்தெரு இ.மு.மு.குத்புதீன் அவர்களின் சகலரும் புதுமனைத்தெரு ச.மு.மு.ஜமால் முஹம்மது அவர்களின் சம்பந்தரும் நூர் நிக்மான் மற்றும் யாசிர் அலி இவர்களின் தகப்பனாருமான ஹாஜி A.S.Mகாதர் யூனுஸ் அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தனது இல்லத்தில் மௌத்


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன் 


 அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday 2 June 2021

நமதூர் மௌத் அறிவிப்பு

 நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் முஹம்மது மஸ்ஹூர்தீன் அவர்களின் மகனாரும் ,ஹாஜி முஹம்மது தாஹிர்,மர்ஹூம் ஹாஜி மமுஹம்மது பாக்கர் இவர்களின் சகோதரரும் ,தெற்கு தெரு ஹாஜா சேக் அலாவூதீன் அடியக்கமங்கலம் முஹம்மது ரியாஸ் இவர்களின் மாமனாரும்,முஜிபுர் ரஹ்மான் ,பாபு என்கிற அசாருதீன் இவர்க


ளின் தகப்பனாருமான ஹாஜி மு.முஹம்மது ஜலீல் அவர்கள் மௌத்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்

Tuesday 1 June 2021

திருவாரூர்

வெளியூர் மௌத் அறிவிப்பு


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.. 

 நமதூர் தெற்குத்தெரு கருத்துணி வீட்டு மர்ஹும் முஹம்மது ஷரீப் அவர்களின் மருமகனும், ஹாஜி முஹம்மது ஜெஹபர், மர்ஹும்.ஷேக் அலாவுதீன், இணையத்துல்லா ஆகியோரின் மைத்துனரும், கலிபுல்லா, ஜஹ்ருதீன் பயாஸ் ஆகியோரின் தாய் மாமாவும், சூஃபிநகர்( EB)சாதிக் பாட்சா அவர்களின் மாமனாருமாண உபையதுல்லா அவர்கள் குருக்கத்தியில் மௌத்..