Sunday 31 August 2014

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக உயர்வு!! வேளான் துறை வளர்ச்சி 3.8% சரிவு..

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துவித்துள்ளது. மேலும் 5.7 சதவீதத்தை எட்டியதை தொடர்ந்து இருவருட உயர்வை எட்டியது குறப்பிடதக்கது.புதிய அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் அதிகப்பிடியான அன்னிய முதலீடு அனுமதி மற்றும் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக 2 வருடமாக சரிந்திருந்த நாட்டின் வளர்ச்சி
தற்போது மீண்டுள்ளது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது வலுவான நிலையில் உள்ளது. தங்க இறக்குமதி மற்றும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக நாட்டின் தங்க இறக்குமதி குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.ஆனால் கடந்த நிதியாண்டில் 3.9 சதவீதம் சரிவடைந்திருந்த சுரங்க துறை உற்பத்தியை நடப்பு நிதியாண்டில் 2.1 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.மேலும் நடப்பு நிதியாண்டில் அதிகப்படியான வளர்ச்சி கண்ட துறை நிதி சேவைத் துறையாகும். இக்காலகட்டத்தில் இத்துறை 10.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதுபோல தயாரிப்பு துறையின் உற்பத்தி 3.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.இதேபோல் மின்சாரம், எரிவாயு துறைகள் தலா 10.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை முறையே 2.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.ஆனால் வேளாண் துறை வளர்ச்சி 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 30 August 2014

குற்றாலம் பகுதியில் தொடர் மழை: பேரருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை

குற்றாலம் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

இதனால், அங்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தொடர்ந்து சிறிது நேரத்தில் பேரருவியில் தண்ணீரின் நிறம் மாறி, செம்மண் நிறத்துடன் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. இதனால் பேரருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Friday 29 August 2014

நமதூர் நிக்காஹ் தகவல் 31/08/2014







நமது ஜாமியுல் மஸ்ஜித் மேலத்தெரு பள்ளிவாசல் நிர்வாகத்தால் நடைபெற உள்ள நிக்காஹ்  :



நமதூர் தாஜ் பிராக் ஷா  தெரு எம் ஜெய்னுல்லாபுதீன் (நாட்டாண்மை மேலத்தெரு பள்ளிவாசல் ) அவர்களின் மகளார் ஆயிஷா சித்திக்கா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1435 துல் காயிதா பிறை 4 31/8/2014 ஞாயிற்றுக்கிழமை  அன்று பகல் 11:45 மணிக்கு தாஜ் பிராக் ஷா தெரு மணமகள் இல்லத்தில் நடை பெற உள்ளது .




மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

 

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

 

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

 

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

 

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் .


















சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கல்வி உதவித்தொகைகல்வியில் சிறந்து விளங்க வசதியின்றி கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த 2014–15–ம் கல்வியாண்டில் 11–ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலான ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது. (11–ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரம், 12–ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரம்) இக்கல்வி உதவித்தொகை, கல்விக்கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு 1,343 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதிகள்இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவிகள் 10–ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நடப்பாண்டில் 2013–14–ம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11–ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்கள் ‘‘http://maef.nic.in’’ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11–ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1–ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2–ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக ‘‘The Secretary, Maulana Azad Education Foundation, (Ministry of Minority Affairs, Government of India) Chelms Ford Road, New Delhi –110 055’’ என்கிற முகவரிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30–ந் தேதி மாலை 5.00 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Kodikkalpalayam - நமதூர் பள்ளிவாசல் கார்பெட் விரிப்புகள்

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் புதியதாக போடப்பட்டுள்ள கார்பெட் விரிப்புகள் .
 
 
 



Thursday 28 August 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 28/8/2014

  நமதூர் வடக்குத்தெரு மர்ஹும் மு ப மஹ்முது  அவர்களின் மகளாரும் வேளாங்கண்ணி ரஹமத் துல்லாஹ் அவர்களின் மனைவியும் ஹாஜா கமால் ,தமிமுல் அன்சாரி இவர்களின் தாயாருமான மும்தாஜ் பேகம் அவர்கள் புதுமனைத்தெரு தீன் காலனியில் மௌத்



இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்




அன்னாரின் ஜனாஸா 28/8/2014  பிற்பகல் 3  மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் 
செய்யபடுகிறது . 

திரு.வி.க. மணிமண்டபம் திருவாரூரில் இலவசமாக புனரமைத்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்:
திருவாரூரை பூர்வீகமாக கொண்ட திரு.வி.க.வின் மணிமண்டபம் திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இது 1973 ஆம் ஆண்டு அரசால் சிலையாக நிறுவப்பட்டு, பின்னர் மணிமண்டபமாக மாற்றப்பட்டது. பல்வேறு காரணங்களால் சரியாக பராமரிக்க முடியாத சூழ்நிலையில், சிதிலமடைந்து காணப்பட்ட திரு.வி.க.வின் மணிமண்டபம் இன்று 'நூர் முகமது நண்பர்கள் சமூக சேவை' இயக்கத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது.
நூர்முகமது என்ற இறந்துபோன நண்பனின் நினைவாக ஒரு சமூக சேவை இயக்கத்தை உருவாக்கி கடந்த 7 ஆண்டுகளாக சேவை செய்து வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தேசிங்கு கூறினார். மேலும் அவர் கூறுகையில், ''கூலி தொழிலாளிகளின் வருமானத்தில் பெருமுயற்சி மேற்கொண்டு சிதிலமடைந்த இந்த மணிமண்டபம் புனரமைக்கப்பட்டிருக்கிறது.

இது இலவசமாக புனரமைக்கப்பட்டு நகராட்சிக்கு தரப்பட்டதாலோ என்னவோ, நகரமன்றத் தலைவரும், நகராட்சி ஆணையரும் இதனை பெற்றுக்கொள்ள வராதது வருத்தமளிக்கிறது" என்றார்.

ஆனால், இந்த விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்றத் துணத் தலைவர் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Wednesday 27 August 2014

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த விவசாயிகள் (படங்கள்

 
 
 
திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் கேட்டை உடைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே நேரத்தில் உள்ளே சென்றதால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
 
விவசாயிகளை பாதிக்கக்கூடிய புதிய காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பயிர் காப்பீட்டு திட்டமே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விளமல் கல்பாலம்  இருந்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர்.
 
அப்போது, காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளை தடுத்தனர். இதையடுத்து, முழக்கமிட்ட விவசாயிகள் திடீரென தடுப்பு கம்பிகளை அகற்றிவிட்டு, கேட்டை உடைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். இதனால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஒரே சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளே சென்றதால் கலெக்டர் அலுவலகத்தில் 3 மணி நேரம் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
 
பின்னர் கலெக்டரை சந்தித்து பேசிய விவசாயிகள், பழைய பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு 128 ரூபாய் பிரிமியம் செலுத்தினால் 12,600 ரூபாய் கிடைக்கும். ஆனால் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி 333 ரூபாய் பிரிமியம் செலுத்தியாக வேண்டும். அப்படி செலுத்தினாலும் ஒரு ஏக்கருக்கு 2,560 ரூபாய் மட்டுமே இழப்பீடாக கிடைக்கும். இது விவசாயிகளை வஞ்சிக்கக் கூடியது.
 
2012ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்தது. பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்தாண்டுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தாண்டுக்கு ஏக்கருக்கு 19,500 ரூபாய் பயிர் கடனாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தினர்.
 
இதைத் தொடர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற கலெக்டர், இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததின் பேரில், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தின் கேட்டை உடைத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளே சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிய மாணவர்களுக்கு நியூசிலாந்து பல்கலை வழங்கும் உதவித்தொகை


 
நியூசிலாந்தில் உள்ள வைகாட்டோ பல்கலைக்கழகம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
வைகாட்டோ பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்தியா, இந்தோனேசியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், மலேசியா, பிலிபைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், தைலாந்து மற்றும் வியாட்னம் ஆகிய 12 ஆசிய நாடுகளில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு நியூசிலாந்து $10,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள் அறிய www.waikato.ac.nz என்ற இணையதளத்தை அணுகலாம்.

Tuesday 26 August 2014

திரு.வி.க. கல்லூரியில் புதிய ஆராய்ச்சிப் படிப்புகள் தொடக்கம்

திருவாரூர் திருவிக கலைக் கல்லூரியில் தமிழ், வரலாறு, பொருளியல் உள்ளிட்ட 10 துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

இந்தப் படிப்புகளை தொடங்கிவைத்து அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:

திருவாரூர் திருவிக கல்லூரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ. 1 கோடி ஒதுக்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

1970-ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் 14 பாடப் பிரிவுகளில் இளநிலை பட்ட வகுப்புகளும் 11 துறைகளில் முதுநிலை பட்ட வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. சுமார் 3,500 மாணவர்கள் படித்து வரும் கல்லூரியில் 75 சதவீத மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கல்லூரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 20 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன; மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனாó.

தற்போது, தமிழ், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வணிக நிர்வாகவியல், காட்சி வழி தகவல் தொடாóபியல், இதழியல் மற்றும் தகவல் தொடாóபியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார வளாóச்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வியே மிகவும் இன்றியமையாதது என்பதால், கல்வியே சமுதாயத்தை முன்னெடுத்து செல்கிறது என்று கூறலாம் என்றார் காமராஜ்.

நாகை எம்.பி. கே. கோபால், ஆட்சியர் எம். மதிவாணன், கல்லூரி முதல்வர் விஸ்வலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Monday 25 August 2014

டிராய் அமைப்பின் புதிய விதியால் ISD கால்களின் விலைகள் குறைகின்றன

 
 
     இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் TRAI புதிய நடவடிக்கையால் ஐஎஸ்டி கால்களின் விலைகள் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிராய் தகவலின் படி வயர்லெஸ் சேவைகளுக்கு நிமிடத்திற்கு 40 பைசாவும், வயர்லைன் சேவைகளுக்கு 1.20 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக டிராயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
ஐஎஸ்டி களுக்கான அணுகும் வரிகளை இது வரை சர்வதேச தொலைதூர ஆப்பரேட்டர்கள் தான் செலுத்தி வந்தனர்.சர்வதேச தொலைதூர ஆபரேட்டர்களை இன்று வரை வாடிக்கையாளர்கள் நேரடியாக அனுகமுடியாமல் இருந்தது. டிராய் அமைப்பின் புது விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் சர்வதேச தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் காலிங் கார்டுகளை வாங்கலாம், இது தொலைதொடர்பு துறையில் போட்டியை உருவாக்கும்.
 
 
 
 எஸ்டிடி/ ஐஎஸ்டி கால்களை செய்ய வாடிக்கையாளர்கள் தங்களின் என்.டி.எல்.ஓ/ஐ.எல்டி.ஓ களை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட போது டெலிகாம் ஆப்பரேட்டரேகளின் இடையூறால் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் வெவ்வேறு முயற்சிகளால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக டிராய் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

Sunday 24 August 2014

நமதூர் மௌத் அறிவிப்பு 24/8/2014


    நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனாரும், முஹம்மது ரஸ்புதீன் ,ஹுமாயுன் கபீர் இவர்களின் தகப்பனாருமான JMM அப்துல் சலாம் அவர்கள் மௌத் .


இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்




அன்னாரின் ஜனாஸா 24/8/2014  காலை 11 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் 
செய்யபடுகிறது . 


Saturday 23 August 2014

திருவாரூரில் ஆக.26-ல்எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்


திருவாரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோருக்கு இணைப்பு மற்றும் சிலிண்டர்கள் வழங்கும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் வருகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆக. 26-ம் தேதி மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளாóகள், நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்கவுள்ளனர்.
எனவே, நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்னைகள் குறித்து தெரிவித்து பயன் பெறலாம்.

வாட்ஸ்ஆப்-க்கு 'ஆப்பு' வைத்த டெலிகிராம்

பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இதன் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-பையே விலைக்கு வாங்கியது.
சமூக வலைதளங்களில் அமோகமாக ஆட்சி செய்து வந்த வாட்ஸ்ஆப்-பை வீழ்த்த வந்து விட்டது இன்னொரு சமூக வலைதளம். அதுதான் டெலிகிராம் மென்பொருள் ( Telegram Messenger). இதை ரஷ்யாவின் நிகோலாய் மற்றும் பவல் டுரவ் சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 'விகே' எனும் சமூக வலைதளத்தை உருவாக்கினர். (இதை ஐரோப்பாவில் பேஸ்புக்கிற்கு அடுத்து அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்).
டெலிகிராம் மென்பொருள் 2013 அக்டோபரில் வெளியிடப்பட்து. அப்போது ஒரு நாளைக்கு 1 லட்சம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். பின் அபார வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சில் 1.5 கோடி பேரைத் தொட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்- பை விட இதில் அதிக வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளும் அதிகம். வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் ஆண்டு மட்டுமே இலவசம். அதற்குப் பிறகு இதைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருள் எப்போதும் இலவசம்.
வாட்ஸ்ஆப்-ல், ஒரு குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 பேருக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்-ல் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும்தான் அனுப்பமுடியும். டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது. டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயங்குதளங்களில் நேரடியாக பயன்படுத்தலாம்.
வாட்ஸ்ஆப்-ல் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. டெலிகிராம் மென்பொருளில் போட்டோக்களை உங்கள் சம்மதம் இல்லாமல் யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மென்பொருளில் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக், ஜெர்மன், இத்தாலியன், டச்சு, போர்ச்சுகீசு ஆகிய மொழிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:
android - https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
iphone/ipad - https://itunes.apple.com/us/app/telegram-hd/id898228810
windows mobiles - http://www.windowsphone.com/en-us/store/app/telegram-messenger-beta/945b96a7-aadc-4dd0-806a-c2d1e0e6ca9a
website version - (இணைய தளம் மூலம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்) - http://zhukov.github.io/webogram/

Friday 22 August 2014

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் அவதி

மாற்று சாலையை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு






 
நீடாமங்கலம், ஒளிமதி ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாற்று சாலையை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ரெயில்வே கேட்திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்கேட் அடிக்கடி பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்திற்காக மூடப்படுவதால் கும்பகோணம் – மன்னார்குடி – அதிராம்பட்டினம் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67–ல் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்ல மாற்று சாலை வழி குறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

திட்ட மதிப்பீடுஇந்த மாற்று சாலை வழி நீடாமங்கலம் ரெயில்வே கேட்டிற்கு முன்தாக பிரிந்து பேருராட்சி சாலை, பழைய நீடாமங்கலம் சாலை, அனுமந்தபுரம் சாலை, கிளரியம் பாலத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 67–ல் மீண்டும் இணைகிறது. நீடாமங்கலம் மற்றும் ஒளிமதி 2 ரெயில்வே கிராசிங்குகளை தவிர்க்கும் வகையில் மாற்று பாதை அமைகிறது. இதில் 3.20 கிலோ மீட்டர் நீளமுள்ள அனுமந்தபுரம் சாலையினை மாற்றுவழிக்காக மேம்படுத்த ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


நமதூர் நிக்காஹ் தகவல் ( 24 மற்றும் 28 ஆகஸ்ட் 2014 )











நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் நிருவாக அனுமதி மற்றும் நிருவாகத்தால்  நடைபெறும் நிக்காஹ் கள் :


1. நமதூர் வடக்குத்தெரு ஹபீப் ரஹ்மான் அவர்களின் மகனார் முஹம்மது யூசுப்தீன் அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 24/08/2014 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இராஜகிரி மஸ்ஜித் கத்தாப் கீழ ஹனபி பள்ளியில் நடைபெற உள்ளது .


2. நமதூர் நடுத்தெரு OPMA முஹம்மது ஜெஹபர் சாதிக் அவர்களின் ஜமால் முஹம்மது அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 28/08/2014 அன்று முற்பகல் 11.30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .


நமது மேலத்தெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தால் நடைபெற உள்ள நிக்காஹ் :



1. நமதூர் மேலத்தெரு ஜெ அமீருதீன் அன்சாரி அவர்களின் மகளார் ரசீனா அவர்களின் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் 24/08/2014 அன்று பகல் 12 மணிக்கு நமதூர் மேலத்தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது .

 

Thursday 21 August 2014

அம்மா திட்டம் முகாம் 22/08/2014

   


நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நாளை 22/08/2014 வெள்ளிக்கிழமை  காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை வருவாய் துறை முலமாக நடைபெறும் சாதி ,வருவாய், இருப்பிடம் சான்றிதழ்கள் ,பட்டா மாற்றம் , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் ,நீக்கம் ,முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மக்களிடம் நேரடியாக செல்லும்  "அம்மா திட்டம்" (Assured Maximum Service To Marginal People To all Villages -AMMA THITTAM)  முகாம் நடைபெறுகிறது .


திருவாரூர் வடக்கு சேத்தி நிருவாக கிராமம் பகுதியை சேர்த்தவர்கள் பயன் பெறலாம் .

தக்க ஆவணகளுடன் வந்து உரிய படிவத்தை பூர்த்தி செய்து வந்தால் விரைவாக வும் நேரத்தையும் பயன் படுத்தி கொள்ளலாம் .

21 இலட்ச வாடிக்கையாளர்களை இழந்த பி.எஸ்.என்.எல்!!

மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 21 இலட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுப்பட்ட போது 21 இலட்ச வாடிக்கையாளர்கள் பயன்பாட்டில் இல்லாததை இந்நிறுவனம் கண்டிறிந்துள்ளது. இந்த இணைப்பு துண்டிப்பின் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 8.94 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. 

என்ன காரணம்?? கடந்த 10 வருடமாக வாடிக்கையாளர் தளத்தில் பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களை நீக்கும் பொருடாக இணைப்பு துண்டித்தோம். இதன் மூலம் இந்த இணைப்பு எண்ணை மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் தெரிவித்தார்.

Tuesday 19 August 2014

திருச்சி விமான நிலையத்தில் எபோலா மருத்துவ சோதனைகள் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்திலும் எபோலா மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆப்ரிக்காவிலிருந்து வரும் பயணிகளை சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிர சோதனைக்கு பின்னர் அவர்களின் முகவரி தொலைபேசி உள்ளிட்ட் முழு விவரங்களை சேகரிக்கப்பட்டு பின்னர் அனுப்பப்படுகின்றனர்.

எபோலா நோய் ஆப்ரிக்க நாடுகளிருந்து பரவி வரும் கொடிய உயிர்க்கொல்லி நோயாக சர்வதேச சுகாதாரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கத்திலிருந்து விலக்கு பெற குறைந்தபட்சம் 6 மாதங்களாகும் என்பதால் அதனை பரவவிடாமல் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்திய விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு எபோலா பரவுவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் எபோலா சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்திலும் எபோலா சோதனை மேற்கொள்வது குறித்து அவசர கூட்டம் கூட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருச்சி விóமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் எபோலா மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் மற்றும் மாநரகராட்சி சுகாதார மாரியப்பன் கண்காணிப்பின் பேரில் மருத்துக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விமான நிலைய மருத்துவ அதிகாரியுடன் இணைந்து எபோலா குறித்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விமான நிலைய மருத்து அதிகாரி எஸ். இசக்கி கூறியது:
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இந்நோய் பரவிவருகின்றது. அங்கிருந்து திருச்சிக்கு நேரடி விமான போக்குவரத்து கிடையாது, எனவே இந்தியாவில் இந்நோய் பரவ வாய்ப்பில்லை. என்றாலும் சுகாதாரத்துறை மருத்துவ சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

முதல் கட்டமாக பயணிகளில் சிலர் உடல் நலக்குறைவுடன் வருவதாக அவர்களாகவே கூறினாலும் அல்லது சந்தேகப்பட்டாலும் அவர்களை சோதிக்கின்றோம். இதற்கென மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இரு மருத்துவ அதிகாரிகளுடன் (1 மருத்துவர் 1 ஆய்வாளர்) இணைந்து சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
துபாய் மற்றும் இலங்கை வழியாக ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருவோரின் முழு விவரங்களையும் தொலைபேசி மற்றும் முகவரியை படிவம் 1-ல் பூர்த்தி செய்து கொடுத்த பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அவற்றை வைத்து தினசரி 21 நாள்கள் பயணி கண்காணிக்கப்படுகின்றார். தற்போது இந்த நடவடிக்கைகள் மூலம் எபோலாவை கட்டுப்படுத்தவும், நாட்டுக்குள் பரவாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளோ பொது மக்களோ அச்சப்படத் தேவையில்லை என்றார்.

Monday 18 August 2014

CAT - 2014 தேர்வுக்கு செப்.,30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மேனஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள்
CAT
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானதாகும்.
இந்தியா முழுவதும் 99 நகரங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேர்வு மைய விபரங்கள் அக்.,16 முதல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகள் டிசம்பர் 2014 மூன்றாவது வாரம் வெளியிடப்படும். CAT தேர்வு மதிப்பெண்கள் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.
விண்ணப்பக் கட்டணம்; ரூ.1600ம், சிறப்பு பிரிவினருக்கு ரூ.800ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iimcat.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். செப்.,30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

Sunday 17 August 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்படுமா?

 ஐஏஎஸ் தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் எதிர்பார்ப்பு

 

கோப்புப் படம்
கோப்புப் படம்










ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு அதிகரிக்கப்படுமா? என தமிழக மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேருவோர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று சொந்த மாநிலத்திலேயே பணியைத் தொடரலாம். எனவே, குரூப்-1 தேர்வுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும்.
பொதுப்பிரிவினருக்கு வயது 30 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பின ருக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டிருந் தது. அந்த சலுகையும் 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்துவிட்டது.
சிவில் சர்வீசஸ் தேர்வு வயது வரம்பு கடந்த ஆண்டு வரை பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், ஓபிசி பிரிவினருக்கு 33 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 35 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டிலிருந்து வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி குரூப்-1 தேர்வெழுதுவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் தேன்மொழி கூறியதாவது:
குரூப்-1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடுகிறது. ஐஏஎஸ் தேர்வைப் போல குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. 2001 முதல் 2013 வரையில் கடந்த 12 ஆண்டுகளில் 5 குரூப்-1 தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் குரூப்-1 தேர் வெழுத வயது வரம்பு 50 ஆகவும், ஆந்திராவில் 43 ஆகவும், குஜராத், பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட வடமாநிலங்களில் 45 ஆகவும் உள்ளது. எனவே, தமிழ்நாட்டிலும் வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும். ஒருவேளை வயது வரம்பை நிரந்தரமாக அதிகரிக்க முடியாவிட்டால்கூட, குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டு அறிவிப்புகளுக்காவது 45 வயது வரை உள்ளவர்களை தேர்வெழுத அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அரசிடம் இறுதி முடிவு
குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு பிரச்சினை குறித்து டிஎன் பிஎஸ்சி செயலாளர் மா.விஜய குமாரிடம் கேட்டபோது, வயது வரம்பை அதிகரிக்கக்கோரி பல தேர்வர்கள் எங்களிடம் முறை யிட்டனர். அவர்களின் கோரிக் கைகளை அரசின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தோம். வயது வரம்பை அதிகரிப்பது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.