Saturday 9 August 2014

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் கலெக்டர் மதிவாணன் பேச்சு


திருவாரூர்,

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தை களுக்கு தாய்ப்பால் அவசியம் என கலெக்டர் மதிவாணன் கூறினார்.

தாய்ப்பால் வார விழா

திருவாரூர் கொடிக்கால் பாளையம் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந் தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார்¢. நகர சபைத்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சுகா தாரத்துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் மதி வாணன், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறையை விளக்கும் கையேட்டை பெண் களுக்கு வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது-

நோய் எதிர்ப்பு சக்தி


குழந்தை பிறந்த 4 மணி நேரத்தில் சுரக்கும் சீம்பால் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு மருந்தாகும். குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்கும் மருந்தாக சீம்பால் செயல்படுகிறது. குழந்தை களின் முதல் உணவும், முழு மையான உணவும் தாய்ப்பால் ஒன்று தான். தாய்ப்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, தாய்க்கும்- சேய்க்கும் இடை யேயான பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். ஆனால் இப் போதைய விஞ்ஞான உலகில் பெண்கள் வேலைக்கு செல்வது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றால் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் பெண் களிடையே குறைந்து விட்டது.

புற்றுநோயை தடுக்கலாம்


தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்று சில தாய்மார்கள் எண்ணுவது தவறு. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை கோளாறுகள், சினைப்பை புற்றுநோய்களை தாய்ப்பால் கொடுத்தால் தவிர்க்கலாம். எனவே குழந் தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் பரமசிவம், தாசில்தார் நாகராஜன், துணை இயக்குனர் இளவழ கன், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி அலுவலர் ரவிச் சந்திரன், சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ரவிச்சந் திரன், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் ராமச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ்குமார், நகர மருத்துவ அலுவலர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment