Saturday 16 August 2014

சமுதாயக்கூடத்தை பள்ளிவாசலாக மாற்றுவதற்கு கிராமசபைக் கூட்டத்தில் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் சமுதாயக்கூடத்தை பள்ளி வாசலாக மாற்றுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவரங்குளம் பிரதான சாலையில் கடந்த 8 -ம் தேதி பள்ளி வாசல் திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளி வாசல் தேரோடும் வீதியில் இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருவரங்குளத்தை சோ்ந்த ஒரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னதாக மனு அளித்தனர். அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவரங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கிராமசபைக் கூட்டத்தில் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. சுதந்திர தினத்தையொட்டி திருவரங்குளத்தில் ஊராட்சித்தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் சிலர், சமுதாய கூடம் கட்டுவதாக திருவரங்குளம் ஊராட்சியில் அனுமதி பெற்று அந்த இடத்தில் பள்ளி வாசல் கட்டப்பட்டுளளது என்றும் எனவே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து. இந்தப்பிரச்சினை கிராம சபைக் கூட்டத்தில் பொருள் எண்: 22 -ல் விவாதிக்கப்பட்ட பின், திருவரங்குளம் ஊராட்சியால் 7.3.2011 -ல் முஸ்லீம் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுள்ளனர். சமுதாய கூடம் என்ற அனுமதி பெற்றுவிட்டு 8.8.2014 முதல் பள்ளிவாசலாக மாற்றி, அதில் தொழுகை நடத்தப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு கிராமசபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மீறி செயல்பட்டால் மேல் நடவடிக்கை சட்ட ரீதியாக எடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் திருவரங்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment