திருவாரூரில் உலக நுகர்வோர் உரிமை தின விழா நடைபெற்றது. அதில் கலெக்டர் மதிவாணன் கலந்து
கொண்டார்.
நுகர்வோர் உரிமை தின விழா
திருவாரூர் மாவட்ட உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் உலக நுகர்வோர் உரிமை தின விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி மணிமாறன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மனோகரன் வரவேற்றார்.
கலெக்டர் மதிவாணன் மதிவாணன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
உரிய ரசீதுநுகர்வோர் எந்தவித பொருட்களையும் சரிவர பார்த்து வாங்க வேண்டும். அந்த பொருளின் தயாரிப்பு தேதி, காலாவதியாகின்ற தேதிகளை சரிபார்க்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது அவசியம் கேட்டு வாங்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு தரச்சான்று உள்ளது. அதன்படி ஹால்மார்க், ஐ.எஸ்.ஐ, கே.டி.எம், ஐ.எஸ்.ஓ போன்ற பொருட்களுக்கு ஏற்ப தரச்சான்றுகளை அவசியம் பார்த்து வாங்கிட வேண்டும்.வாங்குகின்ற பொருட்களின் ரசீது, உத்தரவாத கால ரசீது ஆகியவற்றை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் பின்னால் எந்த வித பாதிப்பு ஏற்பட்டாலும் நுகர்வோர் நீதிமன்றத்தில் நமது உரிமையை பெற்றிட முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில் நமது பழைமையான சத்தான உணவுகளை மறந்து விட்டோம். ஆனால் நாம் மறந்து போன விஷயங்களை பாக்கெட்டில் தாயார் செய்து பணம் சம்பாதிகின்றனர். ஆன்லைன் வியாபாரம் அதிகரித்து வருகிறது. அதில் பல ஏமாற்று வேலை நடைபெறுகிறது. கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி மலிவான பொருட்களை வாங்கி ஏமாறக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். விழாவில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
இதில் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா, உதவி கலெக்டர் பரமசிவம், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் அறிவழகன், பொதுச்செயலாளர் ரமேஷ், நுகர்வோர் விழிப்புணர்வு குழு உறுப்பினர் ஜெயராமன், நன்னிலம் அரசு கல்லூரி முதல்வர் குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட வழங்கல் அலுவலக தலைமை உதவியாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment