Thursday 28 August 2014

திரு.வி.க. மணிமண்டபம் திருவாரூரில் இலவசமாக புனரமைத்து நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்:
திருவாரூரை பூர்வீகமாக கொண்ட திரு.வி.க.வின் மணிமண்டபம் திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இது 1973 ஆம் ஆண்டு அரசால் சிலையாக நிறுவப்பட்டு, பின்னர் மணிமண்டபமாக மாற்றப்பட்டது. பல்வேறு காரணங்களால் சரியாக பராமரிக்க முடியாத சூழ்நிலையில், சிதிலமடைந்து காணப்பட்ட திரு.வி.க.வின் மணிமண்டபம் இன்று 'நூர் முகமது நண்பர்கள் சமூக சேவை' இயக்கத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது.
நூர்முகமது என்ற இறந்துபோன நண்பனின் நினைவாக ஒரு சமூக சேவை இயக்கத்தை உருவாக்கி கடந்த 7 ஆண்டுகளாக சேவை செய்து வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தேசிங்கு கூறினார். மேலும் அவர் கூறுகையில், ''கூலி தொழிலாளிகளின் வருமானத்தில் பெருமுயற்சி மேற்கொண்டு சிதிலமடைந்த இந்த மணிமண்டபம் புனரமைக்கப்பட்டிருக்கிறது.

இது இலவசமாக புனரமைக்கப்பட்டு நகராட்சிக்கு தரப்பட்டதாலோ என்னவோ, நகரமன்றத் தலைவரும், நகராட்சி ஆணையரும் இதனை பெற்றுக்கொள்ள வராதது வருத்தமளிக்கிறது" என்றார்.

ஆனால், இந்த விழாவில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்றத் துணத் தலைவர் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment