Tuesday, 19 August 2014

திருச்சி விமான நிலையத்தில் எபோலா மருத்துவ சோதனைகள் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்திலும் எபோலா மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆப்ரிக்காவிலிருந்து வரும் பயணிகளை சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிர சோதனைக்கு பின்னர் அவர்களின் முகவரி தொலைபேசி உள்ளிட்ட் முழு விவரங்களை சேகரிக்கப்பட்டு பின்னர் அனுப்பப்படுகின்றனர்.

எபோலா நோய் ஆப்ரிக்க நாடுகளிருந்து பரவி வரும் கொடிய உயிர்க்கொல்லி நோயாக சர்வதேச சுகாதாரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கத்திலிருந்து விலக்கு பெற குறைந்தபட்சம் 6 மாதங்களாகும் என்பதால் அதனை பரவவிடாமல் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்திய விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு எபோலா பரவுவதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் எபோலா சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்திலும் எபோலா சோதனை மேற்கொள்வது குறித்து அவசர கூட்டம் கூட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருச்சி விóமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் எபோலா மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் மற்றும் மாநரகராட்சி சுகாதார மாரியப்பன் கண்காணிப்பின் பேரில் மருத்துக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விமான நிலைய மருத்துவ அதிகாரியுடன் இணைந்து எபோலா குறித்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விமான நிலைய மருத்து அதிகாரி எஸ். இசக்கி கூறியது:
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இந்நோய் பரவிவருகின்றது. அங்கிருந்து திருச்சிக்கு நேரடி விமான போக்குவரத்து கிடையாது, எனவே இந்தியாவில் இந்நோய் பரவ வாய்ப்பில்லை. என்றாலும் சுகாதாரத்துறை மருத்துவ சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

முதல் கட்டமாக பயணிகளில் சிலர் உடல் நலக்குறைவுடன் வருவதாக அவர்களாகவே கூறினாலும் அல்லது சந்தேகப்பட்டாலும் அவர்களை சோதிக்கின்றோம். இதற்கென மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள இரு மருத்துவ அதிகாரிகளுடன் (1 மருத்துவர் 1 ஆய்வாளர்) இணைந்து சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
துபாய் மற்றும் இலங்கை வழியாக ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருவோரின் முழு விவரங்களையும் தொலைபேசி மற்றும் முகவரியை படிவம் 1-ல் பூர்த்தி செய்து கொடுத்த பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அவற்றை வைத்து தினசரி 21 நாள்கள் பயணி கண்காணிக்கப்படுகின்றார். தற்போது இந்த நடவடிக்கைகள் மூலம் எபோலாவை கட்டுப்படுத்தவும், நாட்டுக்குள் பரவாமல் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளோ பொது மக்களோ அச்சப்படத் தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment