குற்றாலம் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் அவ்வப்போது பெய்து வரும் மிதமான மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது.
இதனால், அங்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறிது நேரத்தில் பேரருவியில் தண்ணீரின் நிறம் மாறி, செம்மண் நிறத்துடன் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. இதனால் பேரருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment