Tuesday, 12 August 2014

காமன்வெல்த் போட்டியில் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசளிப்பு


 


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். 'ஆசிய விளையாட் டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால், 50 லட்சம் ரூபாய்; வெள்ளிப் பதக்கத்திற்கு, 30 லட்சம் ரூபாய்; வெண்கலப் பதக்கத்திற்கு, 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, கடந்த 2011ல், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில், பளு தூக்குதல் போட்டியில், 77 கிலோ உடல் எடைப்பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார், தங்கப் பதக்கம் வென்றார்.

'ஸ்குவாஷ்' மகளிர் இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களுடன், டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ்; வெள்ளிப் பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த, ரூபிந்தர் பால் சிங், ஹஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோர், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர். அவர்களைப் பாராட்டி, முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே அறிவித்திருந்தபடி, பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

No comments:

Post a Comment