Tuesday 30 June 2015

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 1 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு

கோப்புப் படம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்) மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதில் சேர இந்த ஆண்டு 3500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ஆன்லைனில் மாவட்ட அளவில் நடத்தப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மாவட்ட அளவிலான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 அன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியைத் தேர்வுசெய்யும் மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

Monday 29 June 2015

சென்னை மெட்ரோ ரயில் சேவை: ஜெயலலிதா இன்று தொடக்கிவைக்கிறார்


சென்னை மாநகர மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்குகிறது. சென்னை ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான முதல் மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடக்கி வைக்கிறார்.
 சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த 45.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகின்றன. 2008-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டபோது இதன் திட்ட மதிப்பீடு ரூ. 14,600 கோடியாக இருந்தது.
 வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கி.மீ. தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கி.மீ. தொலைவுக்கு 2-வது வழித்தடமும் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும் சார்நிலைக் கடனாக 5 சதவீதமும் வழங்குகிறது. தமிழக அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும், சார்நிலை கடனாக 5.78 சதவீதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவீத நிதி ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது.
 இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 10 கி.மீ. தொலைவுக்கான முதல் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறார். அதன்பிறகு, கோயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும், கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ நிர்வாக அலுவலகம், பணிமனை, கட்டுப்பாட்டு அறைகளையும் காணொலிக் காட்சி முறையில் அவர் திறந்து வைக்கிறார்.
 இதன்மூலம் ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரெயில் சேவை முழுமையான பயன்பாட்டுக்கு வரும். இந்த விழாவில் அரசு தலைமை செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
 தொடர் சோதனை: மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டத்தை 2013-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போதிலிருந்து சுமார் 20 மாதங்களாக மெட்ரோ ரயிலுக்கான தொடர் சோதனைகள் நடைபெற்று வந்தன.
 தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் 100 பெட்டிகள் கொண்ட 25 ரயில்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக ஆலந்தூர் - கோயம்பேடு இடையே பயணியர் பயன்பாட்டுக்கு 9 ரயில்கள் இயக்கப்படும். 
 சென்னை மெட்ரோ ரயிலின் மொத்த சேவைக்கு 32 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இன்னும் 7 ரயில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு கொண்டுவர வேண்டியுள்ளது.
 மூன்று நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
 மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன், மூன்று நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 24 ஆயிரம் பேர் பயணம் செய்யலாம். இதன் காரணமாக, சென்னையில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ஜப்பான், சீனாவில் நடைமுறையில் இருக்கும் ரயில்களைப் போல சென்னையிலும் அதிவேகத்துடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இந்தியாவில் தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
 

Sunday 28 June 2015

Kodikkalpalayam - இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு



கொடிக்கால் பாளையம் ஹாஸ் பாவா தர்கா வளாகத்தில் உள்ள முஹயத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 

Saturday 27 June 2015

தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார்.
இத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார்.
நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்துள்ள பட்டியலில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட்சிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Friday 26 June 2015

நோன்புக்காலம்: 5000 ஆண்டுகள் வாழ வேண்டுமா?

ரமலான்- நோன்புக்காலம்
மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்பும்போது அவன் வாழும் 60 ஆண்டுக்குள் 5000 ஆண்டுகள் வாழ்ந்த பேற்றை, இறைவனைப் பணிந்து வாழும் தவப்பேற்றை அடைய முடியும் என இஸ்லாம் கூறுகிறது.
“இறைத்தூதர் அவர்களே! உங்களைப் பின்பற்றி வாழும் எங்கள் வாழ்க்கையோ மிகக் குறுகிய காலம். ஆனால் முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களின் காலமோ 900 வருடங்களுக்கு மேல்.
ஆகவே இந்த குறுகிய காலத்தில் நிறைந்த நன்மைகள் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு உண்டா?” என முஹம்மது நபி அவர்களிடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபியவர்கள் இந்த ரமலான் மாதத்தை சுட்டிக்காட்டி விளக்கம் தந்தார்.
உடலையும் மனதையும் புடம்போடும் நோன்பு
ரமலான் என்ற அரபுச் சொல்லின் பொருள் “சுட்டெரித்தல்”. பொன்னைப் புடம் போடுவதன் மூலம் அதிலுள்ள கசடுகள் தனியாகப் பிரிந்து சொக்கத் தங்கம் கிடைக்கிறது. அதுபோல் ரமலான் நோன்பு நன்மையை தீமையிலிருந்து பிரித்தெடுக்கிறது.
இம்மாதத்தில் காலை சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி, மாலை சூரியன் மேற்கில் சாயும்போது நிறைவடைகிறது. இந்த நோன்பால், உடலுக்குச் சக்தியைத் தரும் சர்க்கரை அளவு குறைவடைந்து மனித உடல் உறுப்புக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான சக்தி மட்டுமே எஞ்சி இருக்கிறது.
கண், காது, மூக்கு, வாய், மெய் என ஐம்புலன்களும் அவற்றிற்கான முக்கிய பணியை மட்டும் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உடல் இயங்குகிறது. ஆகவே, கண் பார்க்க வேண்டியதை மட்டும் பார்க்கிறது; காது கேட்க வேண்டியதை மட்டும் கேட்கிறது; மூக்கு எதை முகர வேண்டியதை மட்டும் முகருகிறது; வாய் பேச, சுவைக்க வேண்டியதை மட்டும் செய்கிறது; மெய்யாகிய இந்த உடல் உணர வேண்டிய சுகத்தை மட்டும் உணருகிறது. அதற்கு மேல் அது எதையும் செய்யாத கட்டு திட்டத்திற்கு வருகிறது.
நோன்பு நம்மை எச்சரிக்கிறது
குளிர்ப்பதனப் பெட்டியைத் திறந்தால் அங்கே வண்ண வண்ண நிறங்களில் குளிர்பானங்கள் குலுங்கி வரவேற்கின்றன. ஆனால் நோன்பு, ‘நீ நோன்பாளி உன்னை இறைவன் பார்க்கிறான்’ என எச்சரிக்கிறது. ஆம்! உடல் பசித்திருக்கும்போது மனிதனின் ஐம்புலங்களுக்கும் ஒரு நிறைவு.
இப்போது அவனது ஆறாம் அறிவான பகுத்தறிவு விழித்துக்கொள்ள, அவன் தன்னைப் பற்றி சிந்திக்க, அதன் மூலம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி தியானிக்க ஆரம்பிக்கின்றான். இறைநெருக்கமும் அதனால் அச்சமும் பெறுகின்றான். இதனைப் பின்வரும் குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர் ஆகலாம்’ என்கிறது குர்ஆன் (2:183).
மனிதனை அவனது அதிகப்படியான இச்சைகளிலிருந்தும் அதனால் ஏற்படும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் அதன் காரணமாக அவன் போய்ச்சேர வேண்டிய நரகத் தீயிலிருந்தும் பாதுகாக்கிறது. அதனால் ‘நோன்பு ஒரு கேடயம்' என்கிறது ஒரு நபிமொழி.
பொழுது சாய்கிறது. தொழுகைக்கான அழைப்போசை கேட்கிறது. ஒரு நோன்பாளி ஒரு மிடறுத் தண்ணீர், ஒரு பேரீச்சை பழத்துண்டைக் கொண்டு நோன்பு திறக்கிறார். உடல் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவுகிறது.
உற்சாகம் ஊடுருவுகிறது. காய்ந்துபோன செடியின் வேரில் நீர் விழுந்ததும் அதன் இலைகளும் கிளைகளும் பசுமையாகி நிமிர்ந்து நின்று நமக்கு நன்றி சொல்வதைப் போல ஒரு நோன்பாளிக்குள் ‘ஒரு மிடறு தண்ணீர், ஒரு பேரீச்சைப் பழத்துண்டுக்கு இத்தனை மகிமையா? இறைவனின் எத்தனை அருட்கொடைகளை நாம் அனுபவித்திருக்கிறோம்’ என்ற நன்றியுணர்வு அவனுள் மேலோங்குகிறது. பிறர் பசியும் இந்த நோன்புகாலத்தில் தான் உணரப்படுகிறது. ஆம் கஞ்சனும் வள்ளலாகும் சமயம்தான் இந்த ரமலான் நோன்புக்காலம்.
ஆகவே இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இந்த ரமலானை வரவேற்போம். வாழும் 60 ஆண்டுகளில் 5000 ஆண்டுகள் வாழ்ந்த தவ வாழ்வைப் பெறுவோம்.

Thursday 25 June 2015

உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்கள் 2015-16ஆம் கல்வியாண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகாõக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளநிலை (ம) முதுநிலை பட்டப்படிப்புகள் எம்பில், ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயனாளி கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு செய்து மாணவர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து, அனைத்து சான்றின் நகல்களுடன் இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து படிக்கும் கல்வி நிலையங்களில் செப். 15ஆம் தேதிக்குள் புதியதுக்கும், அக்.10ஆம் தேதிக்குள் புதுப்பித்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் பரிசீலித்து தகுதியான விண்ணப்பங்களை அக். 5ஆம் தேதிக்குள் புதியதுக்கும், அக்.31-ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் ஆன்லைன் மூலம் அனுப்பவேண்டும்

Wednesday 24 June 2015

புதிய வருமான வரி படிவம்: அரசு அறிவிக்கை வெளியீடு


எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி படிவத்துக்கான அறிவிக்கையை அரசிதழில் மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
 மேலும், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு இதற்கு முன்பு 14 பக்க படிவம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தப் படிவத்தில் வெளிநாட்டுப் பயணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன.
 இதனால், படிவத்தில் தேவையற்ற கேள்விகள் இருப்பதாகவும், அதனை பூர்த்தி செய்வது சிரமமாக இருப்பதாகவும், தனி நபர்கள், தொழிலதிபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.
 இதையடுத்து, அந்தப் படிவத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டார். அந்தப் படிவங்களுக்குப் பதிலாக, தலா 3 பக்கத்தில் ஐ.டி.ஆர்-2ஏ, ஐ.டி.ஆர்-2 என்ற 2 படிவங்களை மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
 அதில், "ஐ.டி.ஆர்- 2ஏ' படிவத்தை தொழில், வர்த்தகம், வெளிநாட்டுச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டாத தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
 "ஐடிஆர்-2' படிவத்தை தொழில், வெளிநாட்டுச் சொத்துகள் ஆகியவற்றின் மூலம் வருவாய் பெறுவோர் தாக்கல் செய்ய வேண்டும் அந்த அதிகாரி கூறினா

Tuesday 23 June 2015

திருவாரூர் மாவட்டத்தில் பொது சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்


திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்  செயல்படும் பொது சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர்  அலுவலகங்களிலும் பொது இ சேவை மையங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாள்கள் தவிர பிற நாள்களில் காலை 9.45 முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளை பெறலாம்.
ஆதார் அட்டை பெற ஏற்கெனவே விண்ணப்பம் செய்து கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவாóகள் பொது இ சேவை மையங்களுக்குச் சென்று ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற ரூ. 40 செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஆதார் எண் பெற்றவாóகள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

நோன்பு காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை மலேசியா-திருச்சி விமானம் தாற்காலிக ரத்து


பணியாளர்கள் பற்றாக்குறையால் திருச்சி - மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் பகல்நேர மலிண்டோ விமானங்கள் ஜூலை 19-ம் தேதி வரை தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மலிண்டோ நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறியது:
ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் மலேசியாவில் பெரும்பாலானோர் பகல் நேரத்தில் பணிக்குச் செல்வதில்லை. வீட்டிலேயே இருந்து நோன்பு இருப்பது வழக்கமாம். எனவே பெரும்பாலான நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டும் வருகின்றது.
திருச்சி - மலேசியா இடையே மலிண்டோ நிறுவன விமானங்கள் தினசரி பகல் நேரத்திலும், திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இரவு நேரத்திலும் என வாரம் 10 முறைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நோன்பு காரணமாக பகல் நேரத்தில் பெரும்பாலான பணியாளர்கள் பகலில் விடுமுறையில் சென்றுவிட்டனர். இதன் காரணமாக பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே பகல் நேர விமானங்கள் அனைத்தும் ஜூன் 16-ம் தேதியிலிருந்து தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக இரவு நேரத்தில் வாரத்தில் 3 நாட்கள் இருந்த விமானப் போக்குவரத்தை தினசரி இயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை ரமலான் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூலை 19 வரை அமலில் இருக்கும். என தெரிவித்துள்ளனர்.

Monday 22 June 2015

"எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் 0.35% பேர் மட்டுமே'


பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, எரிவாயுவுக்கான மானியத்தை 0.35 சதவீதம் பேர் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
 தில்லியில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கடந்த வாரம் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நாட்டில் எரிவாயு உருளைக்காக மானியத் தொகை பெறும் 15 கோடி நுகர்வோர்களில் 5.5 லட்சம் பேர் மட்டுமே தாங்களாக முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரிடமும் மானியத்தை விட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் பலர் இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை.
 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்பட சில அமைச்சர்களும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் எரிவாயு உருளைக்காக அளிக்கப்படும் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 கடந்த மார்ச் மாதம், எரிவாயு உருளைக்காக அளிக்கப்படும் மானியத்தை வசதி உள்ளவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

Sunday 21 June 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 21/06/2015

  
நமதூர் தினா இப்ராஹிம்ஷா தெரு (தெற்கு தெரு ) ஜெய்னுதீன்   அவர்களின் தகப்பனார் மீன் வியாபாரி முஹம்மது ஹனிபா அவர்கள் மௌத்.  

அன்னாரின் ஜனாசா 21/06/2015   நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள்  பள்ளிவாசல்
அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

Saturday 20 June 2015

"செல்வமகள்' சேமிப்புக் கணக்குத் திட்டம்: தமிழகம் முன்னிலை


நாட்டிலேயே செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் தமிழகம் முன்னிலையில் இருந்துவருவதாக தலைமை அஞ்சலக இயக்குநர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும், மத்திய அரசால் "செல்வமகள்' (சுகன்யா சம்ரித்தி) சேமிப்புக் கணக்கு என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். தமிழகத்தில் அஞ்சல் துறை வாயிலாக செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாதத்தில், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால், செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் இயங்கும் என, அஞ்சல் துறையால் அறிவிக்கும் அளவுக்கு, நாளுக்கு நாள் அஞ்சலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஞ்சலக இயக்குநர் சார்லஸ் கூறுகையில், தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. மின்னணு வணிகத்திலும் அமேசான், ஸ்நாப் டீலுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் எஸ்.ஆர்.எம் டிராவல்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பஸ் டிக்கட்டுகளை கணினிமயமாக்கப்பட்ட 2 ஆயிரத்து 580 அஞ்சல் நிலையங்களில் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

Friday 19 June 2015

ரமலான் நோன்புத் தொடக்கம்: இறையாற்றல் பெருகும் ரமலான்

மக்காவுக்கு வெளியே இருந்தது ‘நூர்’ மலை. அதில் ஒரு குகை. ‘ஹிரா’ என்பது அதன் பெயர். அதை நோக்கி நபிகள் சென்று கொண்டிருந்தார். கையில் சிறிது உணவு மற்றும் குடிநீர். பார்வையோ பாதையில் பதிந்திருக்க நினைவுகளோ மக்காவாசிகளைச் சுற்றி வட்டமிட்டவாறு இருந்தன. அந்த நினைப்பால் இதயம் கனத்து வலித்தது. தொலைவில் ‘கஅபா’ இறையில்லம் தெரிந்தது.
மனம் முள்ளில் சிக்கிக்கொண்ட மலராய் வலிக்க.. மனக்குரலோ உதடுகளை அசைத்து, “இறைவா! நேர்வழி காட்டுவாயாக!” என்று தவத்தில் லயித்திருந்தது. அது ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம். இன்னும் சில மணித்துளிகளில் பொழுது புலர்ந்துவிடும்.
இந்நிலையில், சட்டென்று குகை இருட்டின் திரையைக் கிழித்துக் கொண்டு ஒளிக்கற்றைகளின் பிரகாசப் பேரொளி கண்களைக் கூசச் செய்தது. அந்தக் குகையின் ஏகாந்த அமைதியைக் கலைத்தவாறு ஒளிமலர்கள் கோடிகோடியாய்ப் பூத்தன. வானவர் தலைவர், ஜிப்ரீல் அங்கு தோன்றி அவரது திருவாயிலிருந்து “ஓதுவீராக!” என்ற திருக்குர்ஆனின் முதல் வசனம் இறைவனின் அருளாய் இறங்கிய நன்னாள் அது.
இதுவரை ஏற்படாத குகை அனுபவத்தில் பாதிக்கப்பட்ட நபிகள், பதறியவராய் வீட்டுக்குச் சென்றவர் தம் அன்பு மனைவியிடம், “போர்த்துங்கள்..! போர்த்துங்கள்!” என்கிறார்.
அதன்பின் சில நாள் வெறுமையில் கழிய, ஒரு நாள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம். “போர்த்தி மூடி உறங்குபவரே! எழும்! எச்சரிக்கை செய்யும்; உம் இறைவனின் மேன்மையை!” என்று சமூகத்திற்கு அறவழி போதிக்கப் பணித்தது.
இப்படி நபிகளார் மூலமாய் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமே ரமலான்.
அம்மாதத்தைக் குறித்து திருக்குர்ஆன், “ரமலான் மாதம் எத்தகையது என்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே, இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்.”
நோன்பு ஏன் நோற்கப்படுகிறது?
நோன்பின் மூலமாக இறையச்சமுடையோராய் மாறிவிடக் கூடும் என்று இதற்கு திருக்குர்ஆன் விளக்கமளிக்கிறது.
முட்புதர்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் வழிப்போக்கன் தன்னுடலை ஒடுக்கிக்கொண்டு நடப்பதைப் போல, உலகில் ஒழுக்க வரம்புகளைப் பேணி எச்சரிக்கையுடன் வாழ்வதற்கான ஒரு மாதப் பயிற்சிக் காலம் அது.
ஆற்றல் குறைந்துபோன மின்கலத்தை மீண்டும் சக்தி ஏற்றம் செய்வதைப் போல இறையடியானுக்கு இறையச்சம் என்னும் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் பயிற்சிக்கான களமே ரமலான்.
கடைசியில் நோன்பைக் கடைப்பிடித்து இறைக்கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடப்படும் விழாவே ரமலான் எனப்படும் ஈகைத்திருநாள்; ஷவ்வால் மாத முதல் பிறையைக் காணும் நன்னாள்.
அதிகாலையில் விழிப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் உண்டு முடிப்பது, அதிலிருந்து அந்தி சாயும்வரை 12-14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல், இல்லற இன்பங்களில் ஈடுபடாமல், தீமைகளிலிருந்து விலகி இறை நினைவு களிலேயே லயித்திருப்பது, இரவில் விழித்திருந்து ‘தராவீஹ்’ எனப்படும்.
சிறப்புத் தொழுகையில் திருக்குர்ஆனை முழுவதுமாய் அந்த மாதத்தில் ஓதித் தொழுவது, ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஓரிரவாக மறைந்திருக்கும், திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ஆயிரம் மாதங்களைவிடச் சிறப்பான அந்த ஒற்றைப்படை இரவைத் தேடி அதிகமான இறைவணக்கங்களில் ஈடுபடுவது, தனக்கும், தனது குடும்பத்தார்க்கும், தன்னைச் சுற்றி வாழும் சமூக மக்களுக்கும், வசிக்கும் தாய் நாட்டுக்கும் நலன் வேண்டிப் பிரார்த்திப்பது, தவறுகளுக்கு மனம் வருந்து அழுது பாவமன்னிப்பு கேட்பது, தான தர்மங்களில் அதிகம் அதிகமாகச் செலவழிப்பது, நலிந்தவர் துயர் களைவது என்று தொடர்ச்சியான சுழல்வட்டப் பயிற்சிப் பாசறையே ரமலான்.

"கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்


 திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள உலக யோகா தின நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் காலை 7 முதல் 7.30 மணி வரை யோகா செய்முறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், யோகா கல்வி நிறுவனங்கள், காவல்துறையினர், என்சிசி, என்எஸ்எஸ், நேரு யுவகேந்திரா சார்ந்த சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி நாளன்று காலை 6.30 வரவேண்டும். யோகாசன கையேடு மற்றும் பயிற்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.

Thursday 18 June 2015

ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் உரிமம், ஆவணங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவு

சென்னை சாலையில் ஒருநாள். | கோப்புப் படம்: எம்.வேதன்

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
விபத்துகளில் உயிரிழப்பை தடுப்பதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 1985-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-லும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இதை அமல்படுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டவில்லை. அவ்வப்போது நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு, ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவுகளை பிறப் பிக்கும். ஆனாலும், ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் வாகன ஓட்டி களை போலீஸார் எச்சரிப்பதும், அபராதம் வசூலிப்பதும் நடக்கும்.
இந்நிலையில், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் ஹெல்மெட் அணியாததால்தான் தலையில் காயமடைந்து இறந்தார் என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என்று உத்தரவிட்டார். ஹெல்மெட் அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யலாம். இந்தத் தகவலை ஜூன் 18-ம் தேதிக்குள் ஊடகங்கள் வாயிலாக வாகன ஓட்டிகளுக்கு உள்துறை செயலரும், காவல்துறை தலைவரும் தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை நிறை வேற்றியது குறித்த அறிக்கையை ஜூன் 19-ம் தேதி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகை யில் ஹெல்மெட் அணிவதை கட்டா யமாக்கி தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:
ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பயணிப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகனச் சட்டம்- 1988 பிரிவு 206-ல் தெரிவிக்கப் பட்டுள்ள விதிமுறைகள்படி, வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். ஐஎஸ்ஐ சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காட்டினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை
இருசக்கர வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘வாகனத்தின் பின்னால் அமர்பவர் ஆண், பெண் யாராக இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு வேண்டாம் என்றாலும் விபத்து ஏற்படும்போது அவர்களுக்கும் காயம் ஏற்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவிப்பதில் தவறில்லை. சீக்கிய இனத்தவருக்கு ஏற்கெனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவ ரீதியாக பாதிப்புள்ளவர்களுக்கான விலக்கு குறித்த நிலையான உத்தரவுகள், விளக்கங்கள் இல்லை’’ என்றார்.

ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரிசியை உடனே வழங்க வேண்டும்


 ரமலான் விழாவுக்கு தமிழக அரசு வழங்கும் நோன்புக் கஞ்சி அரிசி இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என்றார் மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா.
திருவாரூரில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: ரமலான் நோன்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கவுள்ள நிலையில், இதுவரை தமிழக அரசு நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கவில்லை. நோன்பு கஞ்சிக்கு வழங்கும் அரிசியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.டெல்டா விவசாயிகள் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கக்கூட மத்திய அரசு தயங்குகிறது. ராமநாதபுரம் எஸ்.பி. பட்டினத்தில் சையது முகமது என்பவர் காவல் ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து சிசிஐடி மற்றும் மாஜிஸ்திரேட்டு அறிக்கை தாக்கல் செய்தும் இதுவரை ஆய்வாளர் காளிதாஸ் கைது செய்யப்படவில்லை. விரைவில் அவரைக் கைது செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ஜவாஹிருல்லா.

Wednesday 17 June 2015

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்கள்-வேன் பறிமுதல் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை











தகுதி சான்று இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 2 ஆட்டோக் களையும் ஒரு வேனையும் போக்குவரத்து அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.

போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் விபத்து களுக்கு உள்ளாவதை தடுக்க அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதி முறைகள் பள்ளி வாகனங்களை இயக்குபவர்களால் சரிவர கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது பற்றி சோதனை நடத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் உத்தர விட்டார். அதன்படி திரு வாரூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்கு வரத்து போலீசார் திரு வாரூரில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவாரூர் வடக்கு வீதியில் வட்டார போக்குவரத்து அதி காரி முக்கண்ணன், வாகன ஆய்வாளர் ராஜேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன், ஏட்டுகள் அன்பர சன், விஜயகுமார் ஆகியோர் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் வாடகை வாக னங்களை வழிமறித்து வாக னத்தின் தகுதி சான்று, டிரை வர்களுடைய உரிமம் உள் ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர்.

பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்களை பற்றி நடைபெற்ற சோதனை குறித்து வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் ராஜேந் திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதா வது:-

3 வாகனங்கள் பறிமுதல்

பள்ளி, கல்லூரிக்கு மாண வர்களை ஏற்றி செல்லும் தனியார் வாடகை ஆட்டோ, வேன், கார்கள் அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு இயக் கப்படுகிறதா? என்பது பற்றி சோதனை செய்யப்பட்டது. இதில் வாகனங்களின் தகுதி சான்று, அனுமதி சான்று, இன்சூரன்சு, ஓட்டுனர் உரிமம், வாடகை வாகனங்களை ஓட் டுவதற்கான பேட்ஜ் சான்று போன்ற ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. சோதனை யின்போது தகுதி சான்று இல்லாமல் பள்ளி மாண வர்களை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள், ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் உட னுக்குடன் பறிமுதல் செய் யப்படும்.

இவ்வாறு அவர்கூறினார். 

வீடுகள் ஒப்படைப்பு நிகழ்வு


கொடிக்கால் பாளையம் நகராட்சி துவக்க ப்பள்ளி அருகே 5 குடிசை வீடுகள் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் மதியம் 2 மணிக்கு திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில்  எரிந்து நாசம் ஆகின . இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே பள்ளியில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ,உணவு ,உடை என அனைத்தும் சமுதாய அமைப்புகள்  மற்றும் நல்  உள்ளம் படைத்தவர்கள் முலமாக செய்யப்பட்டன .இருந்தாலும் அவர்களின் வீட்டில்  மீண்டும் குடி அமர்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு தமுமுக களம் இறங்கி பணிகளை 2013 மார்ச் மாதமே துவங்கினாலும் இடையில் ஏற்பட்ட  தடங்கல்கள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்ஷா அல்லாஹ் 2015 ஜூன் 17ம் நாள் புதியதாக கட்டப்பட்ட வீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கபடுகிறது.
இறைவா இந்த பணிகளில் யார்லாம் ஈடுபட்டு நிதி பொருள் உடல் உழைப்பு என செய்தவர்கள் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவாய்யாக !

Tuesday 16 June 2015

கோழிப் பண்ணைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தில் கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015-16 நிதியாண்டில் மாவட்டத்தில் 160 கோழிப்பண்ணைகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 250 கோழிக் குஞ்சுகள் கொண்ட பண்ணை அமைக்க மொத்த திட்ட மதிப்பீடு ரூ.1,29,500 ஆகும். வங்கி மூலம் கடன் பெற்று பண்ணை தொடங்குபவர்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ. 32,375, பண்ணையை தொடாóந்து நடத்துவோருக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000, பண்ணையை பாதியில் விட்டுவிடாமல் நடத்துவோருக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.32,370 என ரூ.69,750 மானியமாக வழங்கப்பட உள்ளது.
வங்கிக் கடன் பெறாமல் சுயநிதியில் கட்டடம் கட்டி பண்ணை நடத்துபவாóகள் இத்திட்டத்தில் தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டால் அவாóகளுக்கு மாநில அரசால் வழங்கப்படும் மானியம் ரூ.37,375 வழங்கப்படும். கோழிப்பண்ணை நடத்த கொட்டகை அமைக்கும்போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அங்கீகரித்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்.
அரசு நியமிக்கும் ஒருங்கிணைப்பாளார் மூலம் நாட்டுக்கோழிப் பண்ணை தொழில் தொடங்குவோருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். ஏற்கெனவே சிறிய அளவில் இத்தொழில் செய்வோருக்கு அபிவிருத்தி செய்யும் நோக்கில் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
திட்டத்தில் பயனடைய விரும்புவோர் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலைய கால்நடை மருத்துவாகளை அணுகவும், வங்கிக்கடன் பெற தங்கள் பகுதி வங்கி மேலாளாóகளை அணுகலாம்.

ரூ.320 கோடி மேகி நூடுல்ஸ்களை அழிக்க ஏற்பாடு: நெஸ்லே நிறுவனம் தகவல்


இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் தடை செய்து, சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்ட மேகி நூடுல்ஸ்களை, நெஸ்லே நிறுவனம் அழிக்க உள்ளது. அதன் சந்தை மதிப்பு ரூ.320 கோடி என்று அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
 காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூடாமேட் ஆகிய வேதிப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மேகி நூடுல்ஸில் அதிகமாக இருந்த காரணத்தால், இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் கடந்த 5ஆம் தேதி மேகி நூடுல்ûஸத் தடை செய்தது. 
 அதனை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
 இதனையடுத்து, மேகி நூடுல்ஸ்களை சந்தையிலிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் திரும்பப் பெறும் நடவடிக்கையில் இருப்பதாகவும், திரும்பப் பெறும் நூடுல்ஸ் பொட்டலங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாவும் நெஸ்லே நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது. 
 சந்தையில் தற்போது இருக்கும் மேகி நூடுல்ஸ்களின் விற்பனை விலை சுமார் ரூ.210 கோடியாகும். மேகி நூடுல்ஸ்களைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு வந்த நேரத்தில் தொழிற்சாலைகளிலும், விநியோகஸ்தர்களிடமும் இருந்த கையிருப்பின் மதிப்பு ரூ.110 கோடியாகும்.
 தற்போது தெரிவித்துள்ள மதிப்பு தோராயமானதுதான் என்றும் திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மொத்த நூடுல்ஸ் பொட்டலங்களின் சரியான மதிப்பைக் கூற இயலாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 மேலும் மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை, சந்தையிலிருந்து திரும்பப் பெற்று, அவற்றை அழிக்க உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவு, அழிக்க ஆகும் செலவு போன்றவை கூடுதலாக ஏற்படும். எனவே அழிக்கப்படும் நூடுல்ஸ்களின் சரியான இறுதி மதிப்பை, அழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மட்டுமே கூற இயலும் என்றும் நெஸ்லே நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை அதிகரிப்பு; டீசல் விலை குறைப்பு


நாடு முழுவதும் பெட்ரோல் விலை 64 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டீசல் விலை ரூ.1.35 குறைக்கப்பட்டுள்ளது.
 இந்த விலை மாற்றம், திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
 கடந்த மே மாதத்தில் இருந்து, தற்போது 3ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து இந்திய எண்ணெய்க் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
 கடந்த முறை விலை நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, பெட்ரோலின் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், டீசலின் விலை குறைந்துள்ளது.
 மேலும், இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.
 இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 புதிய விலை நிர்ணயத்தின்படி, தில்லியில் ரூ.66.29ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.66.93ஆகவும், சென்னையில் ரூ.69.45ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.70.12ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தில்லியில் ரூ.52.28ஆக இருந்த டீசல் விலை ரூ.50.93ஆகவும், சென்னையில் ரூ.55.74ஆக இருந்த டீசல் விலை ரூ.54.29ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
 

Monday 15 June 2015

திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி சேலத்தை சேர்ந்த வாலிபர் கைது; 10 கணினிகள் பறிமுதல்


திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி செய்த சேலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து 10 கணினி கள் பறிமுதல் செய்யப் பட்டன.

போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

திருவாரூர் தெற்கு வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் வையாபுரி என்பவர், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் ஒருவர் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்து வருவதாக கூறி இருந்தார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் போலி ஆயுள்காப்பீட்டு நிறுவனம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் மாவட்டம் தாத்தாக் கண்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் வடிவேல் (வயது30) என்பவர் “அரசு அங்கீகாரம் பெற்றது” என போலியாக விளம்பரம் செய்து திருவாரூர் பள்ளி வாசல் தெரு வில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி வந்ததும், மாவட்டம் முழுவதும் 70 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 100-ஐ வசூலித்து மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்றுமுன்தினம் வடிவேலை கைது செய்தனர். இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து 10 கணினிகளையும், மோசடி செய்ததற்கான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளி மாணவர்கள் மறியல்

இதனிடையே வடிவேலு தனது நிறுவனம் சார்பில் திருவாரூரை அடுத்த புலிவலம் அரசு பள்ளியில் அறிவுதிறன் போட்டி நடத்துவதாக வும், இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக கணினி பயிற்சி அளி¢ப்பதாகவும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து இருந்தார். இந்த போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது.

போலி நிறுவனம் நடத்தி வடிவேலு கைது செய்யப்பட்டதை அறியாத மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அறிவு திறன் போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று புலிவலம் அரசு பள்ளிக்கு வந்து இருந்தனர். ஆனால் போட்டி நடை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் போட்டி நடக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், திருவாரூர்- திருத்துறைப் பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏமாற்றம்

இதுபற்றி அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோசடி நடைபெற்று இருப்பது குறித்து தகவல் தெரிவித்ததால் மாணவ- மாணவிகள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டனர். எனினும் போட்டி நடைபெறாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

மலேசியாவில் ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்படும் ஒடிஸா தொழிலாளர்கள்


ஒடிஸாவின் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள், மலேசியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் ஊதியம் வழங்கப்படாமல் பல மாதங்களாக அல்லல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 கஞ்சாம் மாவட்டத்தின் பத்ராபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி உள்ளுரைச் சேர்ந்த 32 பேரை கடந்த ஆண்டு அழைத்துச் சென்றுள்ளார். 
 அவர்களிடமிருந்து, பயணச் செலவுக்காக தலா ரூ. 70,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில் மலேசியாவுக்குச் சென்ற 3 பேர், தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள், மலேசியாவில் அனுபவித்த துயரங்களை தங்களுடைய குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொண்டனர்.
 அங்கு பல மாதங்களாக ஊதியமில்லாமல் பணிபுரிந்ததாகவும், உரிய மருத்துவ சிகிச்சை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், தங்களுடன் வந்தவர்களில் ஒருவர் மலேசியாவிலேயே இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 
 அதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தார் மாவட்டத் தொழிலாளர் நல அதிகாரியிடம் முறையிட்டனர்.
 இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி கல்பனா மிஸ்ரா கூறியதாவது:
 அந்தத் தொழிலாளர்கள், முறையான வழியில் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. எனினும், இதுகுறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.
 இப்பிரச்னை தொடர்பாக கஞ்சாம் மாவட்ட ஆட்சியர் பி.சி.செüத்ரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றா

Saturday 13 June 2015

ஜூலை 1 முதல் கூடுதலாக தமிழகத்தில் 118 ஆதார் மையங்கள் திறப்பு: மக்கள் கூட்டத்தை சமாளிக்க நடவடிக்கை

மக்கள் கூட்டத்தை சமாளிக்க, தமிழகம் முழுவதும் கூடுதலாக 118 ஆதார் நிரந்தர மையங்கள் ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயித்து கடந்த 2013-ல் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 5 கோடியே 2 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட் டன. 28 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்துவருகிறது.
இந்நிலையில் விடுபட்ட 1 கோடியே 72 லட்சம் பேரின் ஆதார் விவரங்களை பதிவு செய்வதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 521 ஆதார் நிரந்தர மையங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் மட்டுமே 72 மையங்கள் செயல்பட்டு வருகின் றன. இந்த நிரந்தர முகாம்கள் இந்த ஆண்டு அக்டோபர் வரை செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 47 லட்சம் பேரின் (81.20 சதவீதம்) ஆதார் விவரங்கள் பதிவு செய்யப் பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74.36 சதவீதம்) ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் விவரங்களை பதிவதற்காக கூடுவதால் அவர் களை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்த பின்னரே ஆதார் விவரங்களை பதிவு செய்ய முடியும் என்பதால், மக்கள்தொகை பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்யவே மாதக்கணக்கில் ஆவதாக பொது மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அதிக மக்கள் வரும் இடங்களில் கூடுதலாக ஆதார் நிரந்தர மையங் களை திறக்க தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். அதன் படி ஜூலை 1-ம் தேதி முதல் தமிழ கம் முழுவதும் 118 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட உள்ளன. எந்த இடத்தில் திறப்பது என்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் முடிவெடுப்பார்கள். சென்னை யில் மட்டும் கூடுதலாக 18 மையங் கள் திறக்கப்பட உள்ளன. மேலும் தேசிய மக்கள்தொகை பதிவேட் டில் பதிவு செய்ய காலதாமதம் ஆவதை சரி செய்யவும் நட வடிக்கை எடுத்து வருகிறோம்

எம்எல்எம் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
சங்கிலித் தொடர் (எம்எல்எம்) வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.ஆர்.ஒதிசாமி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘கவர்ச்சிகரமான லாபம் பெறலாம் என விளம்பரம் செய்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்எல்எம்) என்ற சங்கிலித் தொடர் வர்த்தகம் செய்யப்படுகிறது. பலர் பணத்துக்கு ஆசைப்பட்டு இதில் சேர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, எம்எல்எம் வர்த்தகத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் தமது உத்தரவில் கூறியதாவது:
பிரமிடு போன்ற இந்த திட்டத்தில் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏராளமான பணம் புரள்கிறது. இத்திட்டத்தை நேரடியாக கண்காணிக்க எந்தவொரு சட்டரீதியான அதிகார அமைப்பும் இல்லை. இந்த வர்த்தகத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் வரைவு மசோதா கொண்டுவந்துள்ளன.
தடுப்பு நடவடிக்கையும் தேவை
மனுதாரர் குறிப்பிட்டுள்ள வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.800 கோடிக்கு மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிறுவன சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுபோன்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தகைய திட்டங்களால் பொதுமக்கள் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்படுவதை தடுக்க உரிய விளம்பரங்களை வெளியிடுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Friday 12 June 2015

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர  நிகழ் கல்வியாண்டுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இந்தாண்டு 2,655 இடங்களாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டை விட 100 இடங்கள் கூடுதலாகும். மருத்துவ கல்வி இயக்குநர் கீதாலட்சுமி ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவினருக்கு  விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ராணு வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு வரும் 19-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினர் உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். வரும் 25-ஆம் தேதியன்று முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடையும்.
மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: 9.36 லட்சம் கணக்குகள் தொடக்கம்


தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், இதுவரை 9.36 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
 பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வமகள் சேமிப்புக் கணக்கு (சுகன்யா சம்ரித்தி) என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
 ஜனவரி 30-ஆம் தேதி நாடு முழுவதும் இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை வாயிலாக "செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்' என்ற பெயரில் இந்தத் திட்டம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
 இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் இயங்கும் என்று அஞ்சல் துறையால் அறிவிக்கும் அளவுக்கு, நாளுக்கு நாள் அஞ்சலகம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
 4 மாதத்தில் 9.36 லட்சம் கணக்குகள்: இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது:
 தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு மாதமாகிறது. நிகழாண்டு மே 31-ஆம் தேதி வரை, 9 லட்சத்து 36 ஆயிரத்து 133 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை நகர மண்டலத்துக்கு உள்பட்ட அஞ்சலகங்களில் மட்டும் 3 லட்சத்து 44,926 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 ரூ. 179.92 கோடி முதலீடு: இந்த சேமிப்புக் கணக்குகள் வாயிலாக, தமிழக அஞ்சல் வட்டத்தில் ஏறத்தாழ ரூ. 179.92 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையால் 1 கோடி அளவுக்கு சேமிப்புக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் அளித்துவரும் அபரிமிதமான ஆதரவால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் கூடுதலான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
 செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்குவது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், அதுகுறித்து முழு விவரங்களுடன் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றார்.

 சேமிப்புக் கணக்குகள் விவரம்
தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் விவரம்:
* சென்னை நகர மண்டலம் - 3,44,926 கணக்குகள்
÷பெறப்பட்ட முதலீட்டுத் தொகை- ரூ. 68.14 கோடி
* தமிழக அஞ்சல் வட்டம் - 9,36,133 கணக்குகள்
÷பெறப்பட்ட முதலீட்டுத் தொகை ரூ. 179.92 கோடி

Thursday 11 June 2015

தத்கல் பயணச்சீட்டுக்கான முன்பதிவு நேரம் மாற்றம்


கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தத்கல் பயணச் சீட்டுகளுக்கான முன்பதிவு நேரத்தை ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது. 
 அதன்படி, ஏசி வகுப்பு ரயில் பெட்டிகளுக்கான தத்கல் பயணச்சீட்டுகள் காலை 10 முதல் 11 மணிவரையும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு பகல் 11 மணியில் இருந்தும் முன்பதிவு செய்யலாம். 
 இதேபோல், ரயில்களுக்கான தத்கல் முறையில் முன்பதிவு செய்யும் பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது 50 சதவீத கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிப்பது குறித்தும் ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 தத்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கான நேர மாற்றத்தை ரயில்வே வாரிய உறுப்பினர் அஜய் சுக்லா, தில்லியில் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 இந்திய ரயில்வே உணவு, சுற்றுலாக் கழகத்தின் இணையதளத்தை பல்வேறு சேவைகளுக்காக அண்மையில் ஒரே நாளில் 3 கோடி பேர் அணுகினர். இதனால் அந்த இணையச் சேவை மிகவும் தாமதமானது.
 எனவே, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும்போது வேகமாக சேவை கிடைப்பதை உறுதிசெய்யவும், கவுன்ட்டர்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்தப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை சில தினங்களில் அமலுக்கு வரும்.
 மேலும், தத்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து விட்டு பின்னர் ரத்து செய்யும் பயணிகளுக்கு பயணக்கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திருப்பித் தருவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.
 பயணச்சீட்டை ரத்து செய்வதற்கு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்படும். அதற்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு குறிப்பிட்ட சதவீதத் தொகை திருப்பித் தரப்படும்.
 பிரீமியம் ரயில்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தில் ஒரு பகுதி திருப்பித் தரப்படும். 
 அந்த வகை ரயில் பயணச்சீட்டுகளில் திருப்பி அளிக்கப்படும் தொகை 50 சதவீதம் வரை இருக்கலாம். பிரீமியம் ரயில்களை சுவிதா ரயில்கள் என்று பெயர் மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 தற்போது, இதுபோன்ற பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது கட்டணம் திருப்பித் தரப்படுவதில்லை. 
 இதனால், பயணிகளில் குறிப்பிட்ட பிரிவினர் சம்பந்தப்பட்ட ரயில்களை விரும்புவதில்லை.

Wednesday 10 June 2015

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகள் சேரலாம்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, எஸ்எஸ்எல்சி வரை மாணவர்களுக்கு 4 செட் பாலியெஸ்டாó, காட்டன் சீருடைகள், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ அதிகமாக இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளாóகளிடம் அல்லது ஆட்சியாó அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினாó நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று, பள்ளி விடுதிக்கு ஜூன் 15, கல்லூரி விடுதிக்கு ஜூலை 15-க்குள் நிறைவு செய்து அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழாóகளின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிறப்பான வசதிகள்: மத்திய அரசு உறுதி


""ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும்; கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது யாத்ரீகர்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது.
 இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஹஜ் மாநாட்டில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் பேசியதாவது:
 ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், யாத்ரீகர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகளை திடீரென நான் ஆய்வு செய்வேன். அப்போது போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது தெரிய வந்தால், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 ஹஜ் யாத்திரைக்கு பயணிகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏர் இந்தியா உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் சிறப்பான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், உணவுகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 ஹஜ் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களின் சுவைக்கேற்ப, சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு 4 வகையான உணவுகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஹஜ்ஜுக்கு நேரடியாக இயக்கப்படும் விமானத்தின் கட்டமானது, 1,890 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது, கடந்த ஆண்டு 2,635 டாலராக இருந்தது.
 ஹஜ் யாத்திரையில், இந்தியாவுக்கான பயணிகள் ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சவூதி அரேபிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இதற்கு சாதகமான பதில் தெரிவிக்கப்படும் என நம்புகிறேன் என்றார் வி.கே. சிங். இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3.83 லட்சம் முஸ்லிம்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.20 லட்சமாக இருந்தது.
 

Tuesday 9 June 2015

தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனை நடக்கிறதா? திருவாரூரில் அதிகாரிகள் ஆய்வு

















தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனை நடக்கிறதா? என்பது பற்றி திருவாரூரில் உணவு பாதுகாப்பு அதி காரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேகி நூடுல்சுக்கு தடை

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் காரியம், சுவையை கூட்டக்கூடிய மோனோ சோடியம், குளுட் டோமேட் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும், இந்த நூடுல்சை சாப்பிட்டால் உடல் நலன் பாதிக்கப்படும் என்றும் அகில இந்திய அள வில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மேகி நூடுல்சை விற்பதற்கு தடை விதித்தன.

தமிழக அரசும் ஆய்வு செய்து மேகி நூடுல்ஸ் விற் பனைக்கு தடை விதித்து உத் தரவிட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட பகுதி களில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனை நடக்கிறதா? என்பது பற்றி ஆய்வு செய்ய கலெக்டர் மதி வாணன் உத்தரவிட்டார். இதன்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதி காரி ரமேஷ்பாபு தலைமை யில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் பாலுசாமி, அன்பழ கன், எழில் ஆகியோர் திரு வாரூர் பகுதியில் உள்ள கடை களில் ஆய்வு செய்தனர்.

கடைகளில் ஆய்வு

ஆய்வின்போது கடைகளில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மொத்த விற்பனையாளருக்கு உடனே திருப்பி அனுப்பிவைக் கும்படி அதிகாரிகள் அறிவுறுத் தினர். இதையடுத்து மொத்த விற்பனை குடோனிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேகி நூடுல்ஸ் அட்டை பெட்டி களில் “விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை அதிகாரி கள் ஒட்டினர்.

ஆய்வு குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.

அப்போது அவர் கூறியதா வது:-

திரும்ப ஒப்படைப்பு

ரசாயன பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருந்ததை அடுத்து நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சை கடைகளில் விற் பனை செய்ய அரசு தடை விதித்தது. அரசின் உத்தர வின் படி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள கடைகளில் மேகி நூடுல்சை விற்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். அப்போது விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டு களை உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மொத்தவிற்பனை ஏஜெண்டுகளிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கடைக்காரர்களிடம் வலியு றுத்தி வருகிறோம்.

ரூ.2 லட்சத்து 87 ஆயிரம்

திருவாரூரில் உள்ள மொத்த விற்பனை குடோனில் ஆய்வு நடத்தியபோது அங்கு ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் மதிப் புடைய மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இவ்வாறு திருப்பி அனுப் பப்படும்போது நூடுல்ஸ் பாக்கெட்டுகள் வைக்கப்பட் டுள்ள அட்டை பெட்டியில் “விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை ஒட்டி அனுப்பி வைத்து வருகிறோம்.

திருவாரூர் பகுதி கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மேகி நூடுல்சின் மதிப்பு ரூ.1 லட் சத்து 50 ஆகும். இவற்றை உடனே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். தடை செய்யப் பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனையை தடுக்க உணவு பாது காப்பு அலுவலர்கள் திரு வாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.