Tuesday 30 June 2015

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 1 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு

கோப்புப் படம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்) மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதில் சேர இந்த ஆண்டு 3500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ஆன்லைனில் மாவட்ட அளவில் நடத்தப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மாவட்ட அளவிலான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 அன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியைத் தேர்வுசெய்யும் மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment