திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் டி.என்.பி.எஸ்சி. குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சியளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஆர்பி, ஆர்ஆர்பி மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த விரிவான ஆலோசனை மற்றும் பயிற்சி தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தற்போது அறிவித்துள்ள 1,241 பணியிடங்களுக்கான தொகுதி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களின் துணையோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 8-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அலுவலக வேலை நாட்களில் மாலை 4 முதல் 6 மணி வரை, சனிக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment