மக்கள் கூட்டத்தை சமாளிக்க, தமிழகம் முழுவதும் கூடுதலாக 118 ஆதார் நிரந்தர மையங்கள் ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயித்து கடந்த 2013-ல் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 5 கோடியே 2 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட் டன. 28 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்துவருகிறது.
இந்நிலையில் விடுபட்ட 1 கோடியே 72 லட்சம் பேரின் ஆதார் விவரங்களை பதிவு செய்வதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 521 ஆதார் நிரந்தர மையங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் மட்டுமே 72 மையங்கள் செயல்பட்டு வருகின் றன. இந்த நிரந்தர முகாம்கள் இந்த ஆண்டு அக்டோபர் வரை செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 47 லட்சம் பேரின் (81.20 சதவீதம்) ஆதார் விவரங்கள் பதிவு செய்யப் பட்டு, 5 கோடியே 1 லட்சம் பேருக்கு (74.36 சதவீதம்) ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஆதார் விவரங்களை பதிவதற்காக கூடுவதால் அவர் களை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்த பின்னரே ஆதார் விவரங்களை பதிவு செய்ய முடியும் என்பதால், மக்கள்தொகை பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்யவே மாதக்கணக்கில் ஆவதாக பொது மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அதிக மக்கள் வரும் இடங்களில் கூடுதலாக ஆதார் நிரந்தர மையங் களை திறக்க தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். அதன் படி ஜூலை 1-ம் தேதி முதல் தமிழ கம் முழுவதும் 118 ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட உள்ளன. எந்த இடத்தில் திறப்பது என்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் கள் முடிவெடுப்பார்கள். சென்னை யில் மட்டும் கூடுதலாக 18 மையங் கள் திறக்கப்பட உள்ளன. மேலும் தேசிய மக்கள்தொகை பதிவேட் டில் பதிவு செய்ய காலதாமதம் ஆவதை சரி செய்யவும் நட வடிக்கை எடுத்து வருகிறோம்
No comments:
Post a Comment