Saturday, 27 June 2015

தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கிவைத்தார்.
இத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிகளையும் அவர் வெளியிட்டார்.
நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்துள்ள பட்டியலில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட்சிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment