Wednesday, 10 June 2015

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகள் சேரலாம்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, எஸ்எஸ்எல்சி வரை மாணவர்களுக்கு 4 செட் பாலியெஸ்டாó, காட்டன் சீருடைகள், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.
பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ அதிகமாக இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளாóகளிடம் அல்லது ஆட்சியாó அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினாó நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று, பள்ளி விடுதிக்கு ஜூன் 15, கல்லூரி விடுதிக்கு ஜூலை 15-க்குள் நிறைவு செய்து அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழாóகளின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment