பணியாளர்கள் பற்றாக்குறையால் திருச்சி - மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் பகல்நேர மலிண்டோ விமானங்கள் ஜூலை 19-ம் தேதி வரை தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மலிண்டோ நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறியது:
ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் மலேசியாவில் பெரும்பாலானோர் பகல் நேரத்தில் பணிக்குச் செல்வதில்லை. வீட்டிலேயே இருந்து நோன்பு இருப்பது வழக்கமாம். எனவே பெரும்பாலான நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டும் வருகின்றது.
திருச்சி - மலேசியா இடையே மலிண்டோ நிறுவன விமானங்கள் தினசரி பகல் நேரத்திலும், திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இரவு நேரத்திலும் என வாரம் 10 முறைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நோன்பு காரணமாக பகல் நேரத்தில் பெரும்பாலான பணியாளர்கள் பகலில் விடுமுறையில் சென்றுவிட்டனர். இதன் காரணமாக பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே பகல் நேர விமானங்கள் அனைத்தும் ஜூன் 16-ம் தேதியிலிருந்து தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக இரவு நேரத்தில் வாரத்தில் 3 நாட்கள் இருந்த விமானப் போக்குவரத்தை தினசரி இயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை ரமலான் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூலை 19 வரை அமலில் இருக்கும். என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment