Tuesday 23 June 2015

திருவாரூர் மாவட்டத்தில் பொது சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்


திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்  செயல்படும் பொது சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர்  அலுவலகங்களிலும் பொது இ சேவை மையங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாள்கள் தவிர பிற நாள்களில் காலை 9.45 முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளை பெறலாம்.
ஆதார் அட்டை பெற ஏற்கெனவே விண்ணப்பம் செய்து கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவாóகள் பொது இ சேவை மையங்களுக்குச் சென்று ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற ரூ. 40 செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஆதார் எண் பெற்றவாóகள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment