திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள உலக யோகா தின நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் காலை 7 முதல் 7.30 மணி வரை யோகா செய்முறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், யோகா கல்வி நிறுவனங்கள், காவல்துறையினர், என்சிசி, என்எஸ்எஸ், நேரு யுவகேந்திரா சார்ந்த சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சி நாளன்று காலை 6.30 வரவேண்டும். யோகாசன கையேடு மற்றும் பயிற்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
No comments:
Post a Comment