Tuesday 16 June 2015

பெட்ரோல் விலை அதிகரிப்பு; டீசல் விலை குறைப்பு


நாடு முழுவதும் பெட்ரோல் விலை 64 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், டீசல் விலை ரூ.1.35 குறைக்கப்பட்டுள்ளது.
 இந்த விலை மாற்றம், திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
 கடந்த மே மாதத்தில் இருந்து, தற்போது 3ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து இந்திய எண்ணெய்க் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
 கடந்த முறை விலை நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, பெட்ரோலின் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், டீசலின் விலை குறைந்துள்ளது.
 மேலும், இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.
 இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 புதிய விலை நிர்ணயத்தின்படி, தில்லியில் ரூ.66.29ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.66.93ஆகவும், சென்னையில் ரூ.69.45ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.70.12ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தில்லியில் ரூ.52.28ஆக இருந்த டீசல் விலை ரூ.50.93ஆகவும், சென்னையில் ரூ.55.74ஆக இருந்த டீசல் விலை ரூ.54.29ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
 

No comments:

Post a Comment