Wednesday, 17 June 2015

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்கள்-வேன் பறிமுதல் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை











தகுதி சான்று இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 2 ஆட்டோக் களையும் ஒரு வேனையும் போக்குவரத்து அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.

போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் விபத்து களுக்கு உள்ளாவதை தடுக்க அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதி முறைகள் பள்ளி வாகனங்களை இயக்குபவர்களால் சரிவர கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பது பற்றி சோதனை நடத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் உத்தர விட்டார். அதன்படி திரு வாரூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்கு வரத்து போலீசார் திரு வாரூரில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவாரூர் வடக்கு வீதியில் வட்டார போக்குவரத்து அதி காரி முக்கண்ணன், வாகன ஆய்வாளர் ராஜேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன், ஏட்டுகள் அன்பர சன், விஜயகுமார் ஆகியோர் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் வாடகை வாக னங்களை வழிமறித்து வாக னத்தின் தகுதி சான்று, டிரை வர்களுடைய உரிமம் உள் ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர்.

பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்களை பற்றி நடைபெற்ற சோதனை குறித்து வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் ராஜேந் திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதா வது:-

3 வாகனங்கள் பறிமுதல்

பள்ளி, கல்லூரிக்கு மாண வர்களை ஏற்றி செல்லும் தனியார் வாடகை ஆட்டோ, வேன், கார்கள் அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு இயக் கப்படுகிறதா? என்பது பற்றி சோதனை செய்யப்பட்டது. இதில் வாகனங்களின் தகுதி சான்று, அனுமதி சான்று, இன்சூரன்சு, ஓட்டுனர் உரிமம், வாடகை வாகனங்களை ஓட் டுவதற்கான பேட்ஜ் சான்று போன்ற ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. சோதனை யின்போது தகுதி சான்று இல்லாமல் பள்ளி மாண வர்களை ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள், ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் உட னுக்குடன் பறிமுதல் செய் யப்படும்.

இவ்வாறு அவர்கூறினார். 

No comments:

Post a Comment