Friday 31 January 2014

Kodikkalpalayam - திருமணம் தகவல்கள் (02/02/2014)




கொடிநகர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் நிருவாகத்தால் வரும்  ஹிஜ்ரி 1435 ரபியுல் ஆகிர் பிறை  1 (02/02/2014)  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கும் நிக்காஹ்  விபரம்  :

1.                நமதூர் புதுமனைத்தெரு ஜெ பி முஹம்மது ஜெகபர் அவர்களின்  வளர்ப்பு மகளார் ஜபுருன்னிசா அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் முற்பகல் 11:30  மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது  . 

     
2.            நமதூர் புதுமனைத்தெரு ஒ முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனார் மு சபீர் அஹமது அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் முற்பகல் 11:45 மணிக்கு நாகூர்  தெருப்பள்ளிவாசலில் நடைபெற உள்ளது .


3 .          நமதூர் தெற்குத்தெரு மர்ஹும் மு  ஷேக் அலாவுதீன் அவர்களின் மகனார்   எஸ் முஹம்மது தாஜுதீன் அசன் அவர்கள் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் மாலை 3.30 மணிக்கு நாகை மாவட்டம் சிக்கல்  ஜாமியா பள்ளிவாசலில்
நடைபெற உள்ளது .

 
 
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
 
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

 பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக

kodikkalpalayam -Haj 2014

 
கடைசி தேதி 15 மார்ச் 2014
இணையதளம் www.hajcommittee.com

Thursday 30 January 2014

மானிய சிலிண்டர்கள் 12 ஆக உயர்வு; பயனாளிகளுக்கு 'ஆதார்' தற்போதைக்கு கட்டாயம் இல்லை

வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மேலும், மானிய விலை சிலிண்டர்கள் பெறுவதற்கு ஆதார் அட்டையையோ அல்லது ஆதார் அட்டை எண்களையோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
 
ஆதார் அட்டை தொடர்பாக குழு ஆய்வு நடத்தி, இது தொடர்பான முடிவு இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 
இப்போது ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பரில் மானிய விலை கேஸ் சிலிண்டர்கள் ஓராண்டுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர் 2013 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கப்பட்டது.
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்த போதிலும், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை எதுவும் இல்லை என்று வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார். பின்னர், கட்சி அளித்த நெருக்குதலை அடுத்து, சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "நான் பிரதமரிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 9 சிலிண்டர்கள் போதாது. இந்தியப் பெண்களுக்கு 12 சிலிண்டர்கள் வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
 
இதன் தொடர்ச்சியாக, மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது என்றும், மத்திய அமைச்சரவையில் முறைப்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday 29 January 2014

தேவை மாற்று அல்ல; மாற்றம்!


    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் முடிந்த அளவு அதிக இடங்களில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் } தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே - ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிபெற முடிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அரவிந்த் கேஜரிவால் என்கிற தலைவர் ஏற்படுத்திய நம்பகத்தன்மை, அந்த கட்சி முன்வைத்த அரசியல் கலாசாரம், அக் கட்சி ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிராக எடுத்த நிலைப்பாடு, தங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் முடிவிலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தியது, நன்கொடை பெறுவதில்கூட அவர்கள் காட்டிய வெளிப்படைத்தன்மை போன்ற பல்வேறு அம்சங்கள் ஆம் ஆத்மி கட்சியை வித்தியாசப்படுத்திக் காட்டின.

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி, அகில இந்திய அளவில் ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. புதியதொரு மாற்று அரசியல் கலாசாரத்திற்கான மக்களின் ஏக்கத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒரு அருமருந்தாகத் தெரிகிறது. பணத்தை வாரி இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறும் தேர்தல் கலாசாரத்திற்கு, ஆம் ஆத்மி போன்ற இயக்கங்களின் வளர்ச்சிதான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதிலும் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியே தேசிய அளவிலான ஒரு அரசியல் கட்சியாக, காங்கிரûஸப் போல, பாஜகவைப் போல உருவாவது சாத்தியமாகக்கூடும் என்றாலும்கூட வரவேற்கப்படக்கூடிய ஒன்று அல்ல.

இப்போதே, காங்கிரஸிலிருந்தும் ஏனைய கட்சிகளிலிருந்தும் தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாகிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பலர். மேல்மட்டத்தில் இல்லாவிட்டாலும், தன்னால் தலைவனாக முடியாமல் இருக்கும் அடிமட்ட அரசியல்வாதிகள் பலர் தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் தங்கள் கட்சியில் இணைபவர்கள் லட்சிய உணர்வுடன் கூடிய நாணயஸ்தர்களாக இருப்பதை அரவிந்த் கேஜரிவாலால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியாது. யாரோ செய்யும் தவறு அவரது கட்சிக்கு மட்டுமல்ல, அவரது பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்தக்கூடும். பரவலாக படித்த இளைஞர்கள் மத்தியிலும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களிலும் தகவல் தொலைத் தொடர்புத் துறையிலும் பணியாற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஆம் ஆத்மி கட்சியில் சேரவும், அரசியலில் ஈடுபடவும் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. அரசியலில் தூய்மையும், ஊழலற்ற நிர்வாகமும் வேண்டும் என்கிற இவர்களது ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால், அவர்களில் எத்தனை பேர் தங்களது வசதியான நகர வாழ்க்கையிலிருந்து விலகி கிராமப்புற மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பார்கள் என்பது கேள்விக் குறியே.
 

பெரு நகரங்களில் மட்டும் செயல்படும் தேசிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்தால், கிராமப்புறங்களில் வளர்ச்சி தடைபடும், மறந்துவிடக் கூடாது. அந்தக் கட்சியின் பார்வை நகர்ப்புறம் சார்ந்ததாகவும், நடுத்தர, மேல்மட்ட மக்கள் சார்ந்ததாகவும் மாறிவிடக்கூடும்.÷ஆம் ஆத்மி கட்சி தில்லியில் செயல்படுத்த விழையும் திட்டங்கள், எல்லா ஊருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறுபட்டவை. மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் வேறானவை. ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்த விரும்பும் அரசியல் கலாசார மாற்றம் தேசிய அளவில் ஏற்புடையதாக இருந்தாலும், செயல் திட்டங்கள் நகரத்துக்கு நகரம், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதனால் கேஜரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சியாக உருவெடுக்க நினைத்தால் தோற்றுவிடும். இந்தியாவின் தேவை, ஊருக்கு ஒரு கேஜரிவால், மாநிலத்துக்கு மாநிலம் ஒரு சாமானியர்களின் (ஆம் ஆத்மி) கட்சி. அதுதான் காந்தியடிகள் முன்வைத்த கிராம சுயராஜ்யம்.
அரவிந்த் கேஜரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி, அரசியல் கலாசார மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய அளவில் போட்டியிட்டு, பெருவாரியான இடங்களில் டெபாசிட்டைக் கூடப் பெற முடியாமல் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவினால், மாற்றத்திற்கான முயற்சியின் தோல்வியாக அது கருதப்படும்.

மாற்றத்திற்கான முயற்சியை எதிர்மறைப் பிரசாரத்தால் முனை மழுங்கச் செய்து விடுவார்கள் நமது அரசியல் மலை விழுங்கி மகாதேவர்கள்! ÷
இன்றைய தேவை, காங்கிரஸýக்கும், பாஜகவுக்கும், ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் மாற்று அல்ல. அடிப்படை அரசியல் கலாசார மாற்றம். தில்லியில் கிடைத்திருக்கும் வெற்றியை முறையாக பயன்படுத்தி, கட்சியையும் ஆட்சியையும் நிலைநிறுத்திக் கொள்ள முயலாமல் அவசரப்பட்டு அகலக்கால் வைக்க முயல்கிறது ஆம் ஆத்மி கட்சி. உட்கார்ந்த பிறகுதான் காலை நீட்ட வேண்டும். நின்று கொண்டு காலை நீட்ட ஆசைப்படுகிறார் அரவிந்த் கேஜரிவால்!

Tuesday 28 January 2014

இறுதி வாய்ப்பு உடனே அறிவிக்குமா அரசுகள் ?

 
 
தமிழ் நாடு சட்டமன்ற கூட்டம் நாளை ஜனவரி 30ம் தேதி ஆளுநர் டாக்டர் கே ரோசையா அவர்களின் உரையுடன் துவங்குகிறது .இந்த பிப்ரவரி மாதம் வரை அதாவது தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வரும் என்பதால் அரசின் அறிவிப்புகள் ,நலத்திட்டங்கள் ,அரசு இலவசங்கள் என அனைத்தும் செய்யலாம் .
 
 
கடந்த 2011 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வர் ஜெ .ஜெயலலிதா அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் 3.5% உள்ள கல்வி,வேலைவாய்ப்பு களில் இட ஒதுக்கிடு அதிகரிக்கப்படும் என அறிவித்தார் .ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது .இப்போது மத்தியில் ஆதிக்கம் செலுத்த காட்டும் வேகத்தால் வரும் 2014 மக்களவை  தேர்தலில் இப்பிரச்சனை எதிரொலிக்கலாம் .எனவே நாளை தொடங்கும்  சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு அறிவிப்பாக 5 முதல் 7 சதவிதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பது போராட்டம் களம் கண்ட சமுதாய அமைப்புகள் முதல் கடைகோடி முஸ்லிம் வரை திருப்தி அடைவோம் என்பது உண்மை .
இன்ஷா அல்லாஹ் 
 
 
 
 
மத்தியில் உண்மையில் அறிவிக்க வேண்டிய காங்கிரஸ் கூட்டணி அரசு இதை செய்யாமல் இந்த தேர்தலை எதிர்கொள்ள போகிறது .பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நமது சமுதாய தலைவர்கள் கொடுத்த மனு எங்கே போனது என  தெரியவில்லை .2009 தேர்தலில் இருந்த நிலை இன்று இல்லை என்பதால் மத்திய  அரசு உடனே வரும் இடைக்கால வரவு செலவு அறிக்கையில்முஸ்லிம்கள் நம்பிக்கை பெறும் வகையில்  அறிவித்தால் இவர்கள் கொடுத்த மனு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்தது என மக்கள் அறிவார்கள் .எனவே இனியும் முஸ்லிம் மக்களை ஏமாற்ற வேண்டாம் ஏமாறவும் மாட்டார்கள் .
 
 
உயர் கல்வி கற்கும் நமது சமுதாய குழந்தைகள்
வாழ்வில் வளம்
சேர்க்கும் வகையில் அறிவிப்பு
அரசாணை  விரைவில் வரட்டும் .
நாளைய இந்தியாவை  நம் பிள்ளைகள் ஆளட்டும்  .
 

 
 
 
 
 
 
 
 
 
 

.

Monday 27 January 2014

பான் கார்டு வேண்டுமா? ஓரிஜினல் ஆவனங்கள் கொடுத்தாதான் கிடைக்கும்

நம்மில் நிறைய பேர் பான் கார்டு விண்ணப்பிக்க எண்ணிக்கொண்டிருப்போம். ஆனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் முகவரி, அடையாளம் மற்றும் பிறப்புச் சான்று தொடர்பான ஒரிஜனல் ஆவனங்களை இதற்காக கொடுக்க வேண்டியிருக்கும். முன்பு நகலை மட்டும் அளித்தால் போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியின்படி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பான் கார்டு ஒதுக்கீடு செயல்முறை மாறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 
நகலும் தேவை, அசலும் தேவை.. பிறப்புச் சான்று, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகிய ஆவன நகல்களை விண்ணப்பத்துடனும், ஆவன சரிபார்ப்பின்போது அசல் ஆவனங்களையும் காண்பிக்க வேண்டும் என அந்த அறிவிப்பு தெரிவித்தது

  
 பான் கார்ட் பெற வெறும் 96 ரூபாய் போதும்!!!

Kodikkalpalayam - நாகப்பட்டினம் (தனி ) தொகுதி - முன்னோட்டம்.

வரும் 2014 நாடாளு மன்ற தேர்தல் முன்னோட்டம் -- நாகப்பட்டினம் (தனி )தொகுதி



அன்று முதல் இன்று வரை ..



நமது இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண் நமது ஓட்டு உரிமை .1952 முதல் பொதுத்தேர்தல் தொடங்கி வரும் 16ம் மக்களவை தேர்தல் வரை பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் வகையில் நாகை ( தனி ) தொகுதி இருக்கிறது .

இருபொதுத் தேர்தல்கள் முறையே 1952 மற்றும் 1957 ஆகியவைகள் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கபட்டார்கள் .பின் தனி தொகுதியாக ஆன பின் ஒருவர் மட்டும் மக்கள் வாக்களிக்கலாம் .



இதில் கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த முஹம்மது காசிம் என்பவர் 1952 யில்  நாகை தொகுதியில் போட்டிட்டு உள்ளார்கள் . பார்க்க பெட்டி செய்தி .....

 
 
 
 
 
 
 


இப்ப 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது .

இதில் இருக்கும் சட்டமன்ற தொகுதியும் உறுப்பினர்கள் விபரம் :

நாகை மாவட்டம் 
1. நாகப்பட்டினம் - திரு .கே.ஏ .ஜெயபால் (அ இ அ தி மு க )
மீன்வளத்துறை அமைச்சர் & மாவட்டச்செயலாளர்

வாக்காளர்கள் விபரம்
நாகப்பட்டினம் : ஆண்கள்- 83,954, பெண்கள்- 85,805, மொத்தம்- 1,69,759. .


2.வேதாரண்யம் - திரு .என் வி காமராஜ் (அ இ அ தி மு க )
வாக்காளர்கள் விபரம்
வேதாரண்யம் : ஆண்கள்- 85,767, பெண்கள்- 87,139, மொத்தம்- 1,72,906


3.கீழ் வேளூர் (தனி) -திரு .நாகை மாலி (எ) மகாலிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட்)
வாக்காளர்கள் விபரம்
கீழ்வேளூர் (தனி) : ஆண்கள்- 77,519, பெண்கள்- 77,137, மொத்தம்- 1,54,656.

திருவாரூர் மாவட்டம் :


4.திருத்துறைப்பூண்டி (தனி)  --திரு .கே .உலகநாதன் .(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
வாக்காளர்கள் விபரம்
திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,06,186 ஆண், 1,05,557 பெண் வாக்காளர்கள்,




5. திருவாரூர்  - திரு .மு.கருணாநிதி .(தி.மு.க)
 முன்னாள்  தமிழ் நாடு முதல்வர்  & கட்சியின் தலைவர்

வாக்காளர்கள் விபரம்
திருவாரூர் தொகுதியில் 1,18,377 ஆண், 1,18,216 பெண், 7 திருநங்கைகள், 





6.  நன்னிலம்   - திரு .ஆர் .காமராஜ்   (அ இ அ தி மு க )
  உணவுத்துறை அமைச்சர் & மாவட்ட ச்செயலாளர்

 வாக்காளர்கள் விபரம்

நன்னிலம் தொகுதியில் 1,24,216 ஆண், 1,18,858 பெண்


மொத்த வாக்காளர்கள் -

                                                 11,88,738    -  2014 ஜனவரி 10ம்நாள்  வெளிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில்   இருக்கிறார்கள் .


பெரிய தொகுதியாக நன்னிலமும் சிறியதாக கீழ் வேளுரும் இருக்கும் .இது  நாகூர்  தொடங்கி  கோடியக்கரை வரையும் வலங்கைமான் முதல் முத்துபேட்டை என
பரந்து காணபடுகிறது



கொடிக்கால்பாளையம் வாக்காளர்கள் நமதூரில் இருக்கும்
 நகராட்சி துவக்கப்பள்ளியில்  வாக்காளர் பட்டியல் பாகம் எண் 108
 வருமாறு  :
தாஜ் பிரக்ஸா தெரு  -  வார்டு எண் 10,
நடுத்தெரு                       - வார்டு எண் 8,
மலாயா தெரு              - வார்டு எண் 8 ,
பள்ளிவாசல் தெரு    - வார்டு எண்  7,
ஹாஸ் நகர் வடக்குத்தெரு - வார்டு எண் 9,
வடக்குத்தெரு        -வார்டு எண் 8
ஆகியோர்கள் வாக்களிக்கலாம்
மொத்தம் வாக்காளர்கள்    1091 பேர்கள்

அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாகம் எண் 105
மேலத்தெரு                       வார்டு எண் 7
சமந்தான்  பாளையம்
 மொத்தம் வாக்காளர்கள்   759  பேர்கள்

பாகம் எண் 106
புதுமனை த்தெரு     வார்டு எண்  8
தெற்குத்தெரு
 தினா இப்ரம்ஷா தெரு        வார்டு எண் 7
மொத்தம்  வாக்காளர்கள் 785 பேர்கள்

பாகம் எண் 107
சூபி நகர் வடக்குத்தெரு ,நடுத்தெரு ,தெற்குத்தெரு  வார்டு எண் 9
ஜெயம் தெரு ,
பர்மா தெரு
52பணப்பகுதி நகர்  வார்டு எண் 7
மொத்தம் வாக்காளர்கள்    605  பேர்கள்

 பாகம் எண் 104
ஆசாத் நகர்  வார்டு 5
EVS நகர்    வார்டு 6
கீழத் கொத்ததெரு
 ஆகிய வாக்காளர்கள் நியூ பாரத் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்

பாகம் எண்  109,110
ராமகை ரோடு வாக்காளர்கள் நகராட்சி துவக்கப்பள்ளி ராமகை யில் வாக்களிக்கலாம் .

வாக்காளர் அட்டை இருந்தால்  மட்டும் போதாது  பட்டியலில் பெயர் இருந்தால்தான் ஓட்டு போடமுடியும் .உடனே போய் பள்ளிகூடங்களில் இருக்கும் சத்துணவு ஆசிரியர்கள் அல்லது நகரமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு உறுதி செய்யவும்
நமது வாக்கை விற்காமல் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஒட்டு போடாமல் நோட்டா வும் வாக்கை பதிவு செய்து ஜனநாயகம் காப்போம்
அடுத்து நமது எம் பி விஜயன் .....தொடர்கிறது  தேர்தல் 2014 பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்







 

Sunday 26 January 2014

விளையாட்டு ஆர்வலர்களே

விளையாட்டு ஆர்வலர்களே


http://www.maalaimalar.com/2014/01/22153357/Runner-living-poverty-in-Valan.html

உதவி செய்யுக்கள் 

மனிதப்போரளி பழனிபாபா அவர்களின் 17வது நினைவு தினம்


 

65வது குடியரசு தின விழா



65வது குடியரசின் தின விழா  நமதூரில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது .இதில்  நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ரபியுதீன் அவர்களும் ,மேலத்தெரு
ஜாமியுல் மஸ்ஜித் நாட்டாண்மை அன்வருதீன் அவர்களும் , அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா அலாவுதீன் அவர்களும் ,நகராச்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா அவர்களும்  மத்லபுல் கைராத் நடுநிலைப்பள்ளி தாளாளர் அப்துல் ஹமீது மற்றும் ஜமாத்தார்கள் ,பொதுமக்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது .

த .மு மு க நகர கிளை சார்பாகவும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது .

http://www.kodinagarnews.tk/2014/01/blog-post.html
 

Friday 24 January 2014

கொடிநகர் புதிய வாக்காளர்கள் கவனத்திற்கு .....



  2014 ம் ஆண்டு 18 வயது பூர்த்தி ஆனவர்கள் கடந்த  அக்டோபரில்  நடைபெற்ற முகாம்களில் தங்கள் பெயர்களை சேர்த்தவர்கள் ஜனவரி 25 நாளை சனிக்கிழமை அன்று  நமது நகராச்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நேரில் வந்து அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம் .

 
 
வரும் 2014 மக்களவை தேர்தலில் வாக்களிப்பீர் 
 

முசபர் நகர் மக்களை காக்க

 
 
உத்திர பிரதேச மாநிலம் முசபர் நகர் வகுப்பு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் முகாம் உள்ள சம்லி மாவட்டம் மலக்புர் கிராமத்தில் 5 மாத பச்சிளம் குழந்தை கடும் குளிரால் இறந்து உள்ள செய்தி இப்பொழுது CNN-IBN டிவி சேனலில் வெளியாகி உள்ளது . ...இதுவரை 34 குழந்தைகள் நிவாரண முகாமில் இறந்து இருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை அளித்துள்ளது .

http://ibnlive.in.com/news/5monthold-baby-girl-dies-in-muzaffarnagar-relief-camp/447523-3-242.html

இறைவா இவர்கள் வாழ்வில் சீக்கிரம் ஒளி ஏற்றுவாய்க !அரசுகளே ,கட்சிகளே ,கழககளே ,சமுதாய அமைப்புகளே இந்த மக்களை கொஞ்சம் பாருங்களே அவர்களும் நம் நாட்டு மக்கள் தானே குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் !


உடனே காப்பற்றுங்கள் ....

Thursday 23 January 2014

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும்வரை வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம்: தேர்தல் அதிகாரி

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம், முகவரி மாற்றம், பிழைகள் இருப்பின் அதனை திருத்தி கொள்ளலாம்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1913 எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். .

இந்த அறிவிப்பு சென்னைக்கு இருந்தாலும் நாம் பதிவுசெய்யப்பட்ட இன்டர்நெட் ப்ரௌசிங் சென்டர்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதுமாக 8 உள்ளன .அதில் சென்று பெயர் பதிவு ,திருத்தம், நீக்கம் செய்து கொள்ளலாம் .
இதில்  திருவாரூர் நகரில் தெற்கு வீதி நெட் கார்நார் (NETS CORNER ) சென்டர்  மற்றும் அண்ணா சாலையில் உள்ள கிருஷ்ணா ப்ரௌசிங் சென்டரிலும் பதிவு செய்து கொண்டு ஒப்புகை சீட்டு பெற்று கொள்ளலாம் .

வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இளைய சமுதாயம் தயார் படுத்த வேண்டும் .போங்க பதிவு செய்யுங்க ....
.

வெளியூர் மௌத் அறிவிப்பு -23/1/2014

நமதூர் நடுத்தெரு அ மு மு ஹமீது சுல்தான் ,மலாயா தெரு R S சம்சுதீன் இவர்களின் சம்பந்தி  ரஹீமா பீவி  அவர்கள்  திருவிடசேரி  பள்ளிவாசல்  தெருவில் மௌத்  .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று 23/1/2014 மாலை 5 மணிக்கு திருவிடச்சேரி  பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.




 
 

 

Kodikkalpalayam - மௌத் அறிவிப்பு 23/1/2014

நமதூர் குட்டா வீட்டு மர்ஹும் மெ இ முஹம்மது பாரக் அவர்களின் மருமகனும், KEIA வின் மூத்த தலைவர் மு. ஜெகபர் ஷேக்  அலாவுதீன்,முஹம்மது சலாவுதீன்,முஹம்மது சுல்தான் (அமீன் ) இவர்களின் மச்சானும் ,அசாருதீன் அவர்களின் தகப்பனருமாகிய கொல்லாபுரம்
 நஜுபு தீன்  என்கிற அப்துல் ஜலீல் அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத் .











 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



அன்னாரின் ஜனாசா இன்று 23/1/2014 மாலை 4:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது.

Wednesday 22 January 2014

கொடிக்கால் பாளையம் மௌத் அறிவிப்பு 22-1-2014

 நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் பேஷ் இமாம் நாசர் அவர்களின் தகப்பனார் திருவாரூர் விஜயபுரம் பள்ளிவாசல் முன்னாள் இமாம் ஆலிம் ஹஜ்ரத்  அப்துல் ரஹ்மான் அவர்கள் புதுமனைதெருவில் மௌத்

. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாசா இன்று 22/1/2014 முற்பகல் 11 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது

Tuesday 21 January 2014

The History of Kodikkalpalayam......

நமதுரின் வரலாறு  நமது இளைய சமுதாயம்  அறிந்து கொள்ளும் வகையில் மர்ஹும் இ  இலியாஸ் அவர்கள் கொடிக்கால் பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோசியோசன் 10ம் ஆண்டு  சிறப்பு மலரில் இடம்  பெற்ற கட்டுரை இப்பொழுது நம் இணைய உலகுக்கு  வருகிறது . இன்ஷா அல்லாஹ் அடுத்து சிரார் கொடிநகர் நூல்  விரைவில் ..........
 




 

Kodikkalpalayam Jamath Award News

திருச்சியில் 28/12/2013 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்ற மாநாட்டில் நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாத்துக்கு முன்மாதிரி முஹல்லா ஜமாஅத் விருது  வழங்கபட்டது  நாம் அறிந்ததே . விருது பெற்ற விபரங்கள் பிறைமேடை இதழில் இடம்பெறுள்ளது .
இதில் நமது ஜமாஅத் தலைவர் ரபியுதீன் ,செயலாளர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் மத்திய இணை அமைச்சர் இ . அஹமது  அவர்களிடம்

பெற்று கொண்டார்கள் .உடன் பேரா .காதர் மொகிதீன்  உள்ளார்கள் .
மாஷா அல்லாஹ் ...............

Tuesday 14 January 2014

Kodikkalpalayam - கொடிக்கால் பாளையத்தில் மீலாது பெரு விழா

நமதூரில் இன்று 14/1/2014 மீலாது பெருவிழா ஊர்வலம் காலை 8.30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் இருந்து கிளம்பியது .


Monday 13 January 2014

Kodikkalpalayam - KEIA 20ம் ஆண்டு நிறைவு சிறப்பு வருடாந்திர பொதுக்கூட்டம்

பேரன்புடையீர்!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...)

இன் ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளி மதியம் (17-01-2014) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் துபாய் ஹோர் அல் அன்ஸில் அமைந்திருக்கும் கராச்சி தர்பார் உணவகத்தில் நமது அசோஸியேஷனின் 20ம் ஆண்டு நிறைவு சிறப்பு வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால், அமீரக வாழ் கொடிக்கால்பாளையம் மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து இக்கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

-அழைப்பது

KEIA பொறுப்பாளர்கள் 

இ.சி.ஆர். நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இன்சூரன்ஸ், பென்ஷன்



குடியேற்றத்துறை சோதனை தேவைப்படும் நாடுகளில் (இ.சி.ஆர்.) வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் விரைவில் ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் வழங்கப்பட உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இ.சி.ஆர். நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகளின் 8-வது வருடாந்திர மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி பேசியதாவது:

மகாத்மா காந்தி ப்ரவசி சுரக்ஷா யோஜனா (எம்.ஜி.பி.எஸ்.ஒய்) திட்டம் ஐக்கிய அரபு நாட்டில் (யு.ஏ.இ.) நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் பிற இ.சி.ஆர். நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இ.சி.ஆர். நாடுகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பெரும்பாலும், கட்டுமானம், சுகாதாரம் மற்றும் வீட்டுக்குரிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Saturday 11 January 2014

   கொடிக்கால் பாளையம் மௌத் அறிவிப்பு 11-1-2014.                    நமதூர் தீனா இப்ரம்சா தெரு (தெற்கு தெரு ) அன்பு என்கிற நாகூர் மீரான் அவர்களின் தகப்பனார் மைதீன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத் .  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  அன்னாரின் ஜனாசா இன்று 11/1/2014 மாலை 3:30மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது 
நமதூர் மேலத்தெரு பூங்காவில் நகரமன்ற உறுப்பினர்களின் தொடர் முயற்சியால் அமைக்க திட்டமிடப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிக்க தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகிறது . நகராட்சி நிர்வாகம் முன்முயற்சி எடுத்து பணியை உடனே துவக்க வேண்டும் என்பது பொது மக்களின் விருப்பம் .மக்கள் நலனை மட்டுமாவது கருதி செய்ய வேண்டும் செய்வார்களா ?
   கொடிக்கால் பாளையம் மௌத் அறிவிப்பு 11-1-2014.                    நமதூர் தெற்கு தெரு M M முஹம்மது பாக்கர் அவர்கள் தனது இல்லத்தில்  மௌத் .   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  அன்னாரின் ஜனாசா இன்று 11/1/2014 முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது 

Friday 10 January 2014

Kodikkalpalayam - அறிவிப்பு .


தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு நமதூர் TCCWS நியாய விலை கடையில் இன்று முதல் வார்டு வரிய வழங்கபடுகிறது .
10/1/2014      7வது வார்டு
11/1/2014      8வது  வார்டு
12/1/2014      9வது  வார்டு


தகுதி பெற்ற குடும்ப அட்டைகள்  - 1045


பொதுமக்கள் அமைதியாக வந்து பெற்று செல்லலாம்

Thursday 9 January 2014

கொடிக்கால் பாளையம் ஜனாசா அறிவிப்பு 9/1/2014

கொடிக்கால் பாளையம் ஜனாசா அறிவிப்பு



நமதூர் பொறையார் தார் வீட்டு அப்துல் வாஹப் அவர்களின் மனைவியும் யூசுப் தீன் அவர்களின் தாயாரும் கமாலுதீன் ஹாஜா கமால் இவர்களின் மாமியருமாகிய கோசா வீட்டு உம்மா பசிலா அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னாரின் ஜனாசா இன்று 9/12014 மாலை 3 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யபடுகிறது 

Monday 6 January 2014

kodikkalpalayam - திருவாரூர் நகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் : 19 கவுன்சிலர்கள் பங்கேற்ப்பு



நமதூரில் அமைக்க திட்டமிடப்பட்ட  மேல்நிலை குடிநீர்தொட்டிக்கு  அடிக்கல் நாட்டி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும் ஆணையர் நியமிக்க கோரியும் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய வேண்டி திருவாரூர் நகரமன்ற உறுப்பினர்கள் தி மு க , காங்கிரஸ் , ம ம க , சுயே உள்பட 19 பேர்கள் இன்று 6/1/2014 திங்கள் காலை முதல் மாலை வரை திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது .


 இதில் முக்கிய கோரிக்கையாக 15 இடம் பெற்று உள்ளன .கடந்த 2 ஆண்டுகளை தாண்டி நகராச்சி நிருவாகம் பொறுப்புக்கு வந்து இன்னும் பாதாள சாக்கடை திட்டம் அமுலுக்கு வரவில்லை .நாய் கள் தொல்லை அதிகமா க  உள்ளது. புதிய பஸ் ஸ்டான்ட் குறைந்து 35 பஸ்கள் தான் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது .கமிஷன் இல்லாமல் பணிகள் இல்லை என்பது எழுதபடாத சட்டமாக உள்ளது

மக்களுக்காக நகராச்சி செயல்பட வேண்டும் என்பது நம் எண்ணம் செய்வார்களா ?