தமிழ் நாடு சட்டமன்ற கூட்டம் நாளை ஜனவரி 30ம் தேதி ஆளுநர் டாக்டர் கே ரோசையா அவர்களின் உரையுடன் துவங்குகிறது .இந்த பிப்ரவரி மாதம் வரை அதாவது தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வரும் என்பதால் அரசின் அறிவிப்புகள் ,நலத்திட்டங்கள் ,அரசு இலவசங்கள் என அனைத்தும் செய்யலாம் .
கடந்த 2011 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வர் ஜெ .ஜெயலலிதா அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் 3.5% உள்ள கல்வி,வேலைவாய்ப்பு களில் இட ஒதுக்கிடு அதிகரிக்கப்படும் என அறிவித்தார் .ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது .இப்போது மத்தியில் ஆதிக்கம் செலுத்த காட்டும் வேகத்தால் வரும் 2014 மக்களவை தேர்தலில் இப்பிரச்சனை எதிரொலிக்கலாம் .எனவே நாளை தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு அறிவிப்பாக 5 முதல் 7 சதவிதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பது போராட்டம் களம் கண்ட சமுதாய அமைப்புகள் முதல் கடைகோடி முஸ்லிம் வரை திருப்தி அடைவோம் என்பது உண்மை .
இன்ஷா அல்லாஹ்
மத்தியில் உண்மையில் அறிவிக்க வேண்டிய காங்கிரஸ் கூட்டணி அரசு இதை செய்யாமல் இந்த தேர்தலை எதிர்கொள்ள போகிறது .பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நமது சமுதாய தலைவர்கள் கொடுத்த மனு எங்கே போனது என தெரியவில்லை .2009 தேர்தலில் இருந்த நிலை இன்று இல்லை என்பதால் மத்திய அரசு உடனே வரும் இடைக்கால வரவு செலவு அறிக்கையில்முஸ்லிம்கள் நம்பிக்கை பெறும் வகையில் அறிவித்தால் இவர்கள் கொடுத்த மனு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்தது என மக்கள் அறிவார்கள் .எனவே இனியும் முஸ்லிம் மக்களை ஏமாற்ற வேண்டாம் ஏமாறவும் மாட்டார்கள் .
உயர் கல்வி கற்கும் நமது சமுதாய குழந்தைகள்
வாழ்வில் வளம்
சேர்க்கும் வகையில் அறிவிப்பு
அரசாணை விரைவில் வரட்டும் .
நாளைய இந்தியாவை நம் பிள்ளைகள் ஆளட்டும் .
வாழ்வில் வளம்
சேர்க்கும் வகையில் அறிவிப்பு
அரசாணை விரைவில் வரட்டும் .
நாளைய இந்தியாவை நம் பிள்ளைகள் ஆளட்டும் .
.
No comments:
Post a Comment