திருவாரூர் மாவட்டத்தில்
ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க
தீவிர நடவடிக்கை
கலெக்டர் நடராசன் பேச்சு
திருவாரூர், ஜன.5- திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப் படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் படும் என்று கலெக்டர் நடராசன் கூறினார். குற்ற புலனாய்வு துறை திருவாரூர் அருகே விளம லில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புல னாய்வு துறையின் புதிய அலுவலகம் அமைக்கப்பட் டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச் சியில் கலெக்டர் நடராசன் கலந்து கொண்டு புதிய அலுவ லகத்தை திறந்து வைத்தார். இதில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய் வுத்துறையின் மதுரை மண்டல சூப்பிரண்டு சாமிநாதன் முன் னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராசன் பேசிய போது கூறியதாவது:- தீவிர நடவடிக்கை நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, மானிய விலை மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் வினி யோகம் செய்யப்படுகின்றன. அரசின் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் முழுமையாக பொதுமக் களுக்கே கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி நியாய விலைக்கடை பொருட் கள் கடத்தப்படுகிறதா? என் பது பற்றி கண்காணிப்பு செய்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் தொட ரும். திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அலுவலகம் அமைக்கப் பட்டுள்ளது. அரிசி கடத்தல் வழக்குகள் திருவாரூர் மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் அரிசி கடத் தல் தொடர்பாக 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 700 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 2 மோட்டார்சைக்கிள் கள் பறிமுதல் செய்யப்பட் டன. 20 மண்எண்ணை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 465 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டரை வணிக உபயோகத்திற்கு பயன்படுத் தியது கண்டறியப்பட்டு 30 சிலிண்டர்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் பதிவான 102 வழக்குகளில் இதுவரை 46 வழக்குகளின் விசாரணை முடிவு பெற்றது. அதில் ரூ.28 ஆயிரத்து 70 அபராதம் வசூல் செய்யப்பட் டது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நியாய விலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தால் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கலாம். குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை மதுரை மண்டல சூப்பிரண்டு சாமிநாதனை 9043006363 என்ற செல்போன் எண்ணிலும், திருச்சி உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீனிவாசனை 9245176204 என்ற செல்போன் எண்ணிலும், இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை 9843293324 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு ரேசன் பொருள் கடத்தல் தொடர் பான தகவலை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் திருச்சி உட்கோட்ட துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ் பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். |
Sunday, 5 January 2014
ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment