Monday 14 October 2013

Kodikkalpalayam - குர்பானி கொடுக்கும் நமதூர் வாசிகளுக்கு ஓர் அறிவிப்பு


ஹஜ் பெருநாள் தொழுகை

ஹஜ் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வரும் புதன் கிழமை 16/10/2013 காலை 8:30 மணிக்கு நமது முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மற்றும் மேலதெரு ஜாமியுள் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெறும் . வழக்கம் போல் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு உள்ளது

 

Sunday 6 October 2013

துல் ஹஜ் பிறை 1

வெளி நாடுகளில் இன்று முதல் துவக்குகிறது .
இன்ஷா அல்லாஹ் நாளை 7/10/2013 திங்கள் நமதூரில் துவக்கலாம்

நமதூர் ரேஷன் கடையில் பொருள்களை கால தாமதம்

ரேஷன் கடையில் மாதம் முதல் 6 தேதி ஆகியும் பொருள்கள் வரவில்லை .மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள் .நகர பகுதியில் இது போல நிலை வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை .இதைபோல நிலைதான் கடந்த மாதமும் நடந்தது

இதை சரிசெய்ய  நமதூர் ரேஷன் கடையில் பொருள்களை கால தாமதம் இல்லாமல் வழங்கவேண்டும் என்பதே எங்கள் மக்களின்   வேண்டுகோள்.

 இதை சரிசெய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?

Kodikkalpalayam - ஜமாஅத் மஹஜன சபை கூட்டம்






நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் மஹஜன சபை கூட்டம் தலைவர் ரபியுதீன் தலைமையில் 06/10/2013 அன்று மஹசூம் மஹாலில் நடைபெற்றது.

இதில் பள்ளிவாசல் பைத்துல் மால் துவக்குவது சம்பந்தமாக ஒப்புதல் அளிப்பது என்றும் அதற்கு தனியாக குழு அமைப்பது என்றும் தீர்மானிக்கபட்டது .

பள்ளிகேணி குளத்தை சுற்றி களைகளை அகற்றி கடைதெரு படித்துறைக்கு கேட் அமைத்து இரவு நேரங்கில் பூட்டுவது எனவும் புதிய ஜமாஅத் உறுப்பினராக 4 விண்ணப்பதை ஏற்று ஒப்புதல் அமைப்பது என்றும் மீன் மறு ஏலம் குத்தகை விடப்பட்டது.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு குர்பானி விளக்க துண்டு பிரசகம் வழங்கப்பட்டது .


வாக்காளர் பட்டியல் முகாம்


வாக்காளர் பட்டியல் முகாம்  6/10/2013 இன்று  நடைபெற்ற போது நகர மன்ற தலைவர் ரவிச்சந்திரன், நகர அ தி மு க செயலாளர் மூர்த்தி  துவக்க ப்பள்ளி  வாக்குசாவடியில் பார்வை இட்டார்.உடன் முஹம்மது கஜ்ஜாலி ex mc இருந்தார் 

Wednesday 2 October 2013

வரும் 2014 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு

 
திருவாரூர்  மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான புதிய வரைவு வாக்காளர் பட்டியல் 1/10/2013 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 8,92,785 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் ஆட்சியர் சி. நடராசன்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன் னிலம் சடட்ப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அவர் மேலும் பேசியது:

2013, ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி மாவட்டத்தில், 4,48 ,920 ஆண் வாக்காளர்கள், 4,42,764 பெண் வாக்காளர்கள், 7 திருநங்கை வாக்காளர்கள் என மொத்தம் 8,91,691 வாக்காளர்கள் இருந்தனர். பின்னர் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் 2,950 ஆண், 2,148 பெண் வாக்காளர்கள் என 5,098 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

1,511 ஆண், 2,493 பெண் என 4,004 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருவாரூர் மாவட்டத்தில் 8,92,785 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் 2,07,299, மன்னார்குடி தொகுதியில் 2,19,679, திருவாரூர் தொகுதியில் 2,29,133, நன்னிலம் 2,36,674 என மொத்தம் 8,92,785 வாக்கா ளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் 18 வயது முதல் 19 வயதுடைய 5,938 பேரும், 20 வயது முதல் 24 வயதுடைய 68,504 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.மாலா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்