Monday 30 April 2018

கொடிக்கால்பாளையம் ஹந்தூரி விழா நேரலையில் காண .....

கொடிக்கால்பாளையம் ஹாஸ்பாவா ஹந்தூரி விழா இன்று இரவு நடைப்பெறுகிறது.இதனை நேரலையாக  நமது youtube லிங்கில் https://www.youtube.com/channel/UClA0Z6HVYdENCAhh7ujVpHg காணலாம்.

Facebook link  http://fb.com/kodinagar.times 

Saturday 28 April 2018

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரிய மனு தள்ளுபடி


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டசபையில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அப்போது அவருக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி சபாநாயகரிடம் புகார் செய்தார். இதேபோல், டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோரும் புகார் செய்தனர்.

இந்த புகார்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் சக்கரபாணி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த மாதம் 7-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், சபாநாயகர் பாரபட்சமாக நடப்பதால், இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது சபாநாயகர் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கும்போது, அவரது அதிகாரத்தில் தலையிட்டு, எந்த ஒரு உத்தரவையும் இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க முடியாது.

மேலும், சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவு செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையில், சபாநாயகரின் அதிகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. புகார் மனுக்களை பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிடவும் முடியாது.

சபாநாயகர் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்புக்கு எதிராகவும், பாரபட்சமாக செயல்படும்போது, அந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிடலாம் என்ற மனுதாரர் தரப்பு வாதத்திற்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர். 

நமதூர் மௌத் அறிவிப்பு 28/04/2018

நமதூர் நடுத்தெரு  மர்ஹூம் அ.மீ.மு.. அஷ்ரப் அலி,அ.மீ.மு.ஜெகபர் சாதிக்,அ.மீ.மு.சுல்தான் அப்துல் காதர் இவர்களின் மூத்த சகோதரரும் , மனப்பறையா வீட்டு இல்யாஸ் அவர்களின் மச்சானுமாகிய அ.மீ.மு. முஹம்மது ஹூசைன் அவர்கள் தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் மாலை 5 P.M

Friday 27 April 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 27/04/2018

நமதூர் தெற்கு தெரு குளத்தான்கரையான் வீட்டு மர்ஹூம் செய்கு என்கிற சேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் ,  ஜபுருதீன் மற்றும்    ஆரிப்    இவர்களின் தாயாருமான சிராஜூநிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் 28/04/2018. சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு

Wednesday 25 April 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 25/04/2018

நமதூர் வெற்றிலைகார வீட்டு மர்ஹூம்  ஹஜ்ஜு மைதீன்
 அவர்களின் சகலப்பாடியும் டீக்கடை மர்ஹூம்  செய்யது பாரக் அவர்களின் சிறிய தகப்பனார் அப்துல் ரெஜாக் அவர்கள் தெற்கு தெரு தாஜ் காலணியில் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday 24 April 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 24/04/2018

நமதூர் வடக்கு தெரு பட்டிகாரவீட்டு மர்ஹூம் முஹம்மது மூசா அவர்களின் மகனார்  டூர்       செல்லப்பா என்கிற PNM. செய்யது ஜெஹபர் (மருத்துவ மனை) எதிரே உள்ளே தனது இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday 16 April 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 16/04/2018

நமதூர் நடுத்தெரு மர்ஹூம் கு.சி.மு.அப்துல் ஹமீது அவர்களின் மகனாரும் ,சேக் அலாவுதீன், நைனா முஹம்மது நத்தர் ,அபுதாகிர் இவர்களின் தகப்பனாரும் A.j.ஜெஹபர் அலி,மர்ஹூம் க.செ.மு செய்யது முஹம்மது,v.m.a அன்வர்தீன் இவர்களின் மாமனருமாகிய கு.சி.மு.அ. பக்கீர் முஹம்மது அவர்கள் மௌத்.



அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Monday 9 April 2018

*காவிரி - வரைவு செயல் திட்டத்தை மே 3-க்குள் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

*

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் நீதிபதிகள் கூறினர்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், காவிரி தொடர்பாக கர்நாடகம் மற்றும் புதுச்சேரியின் மனுவும் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

செயல் திட்டம்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு, எங்களது இறுதி தீர்ப்புடன் இணைந்துவிட்டது என்று கூறிய நீதிமன்றம், மே 3 ஆம் தேதி மத்திய அரசு வரைவு செயல்திட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை மே3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

மாதந்தோறும் காவிரியில் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும் என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அமைதி நிலவுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

மத்திய - மாநில அரசின் வாதம்:

மத்திய அரசின் சார்பாக வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், நாங்கள் மூன்று மாத கால அவகாசம் கேட்டு இருக்கிறோம், சில விளக்கங்களையும் கோரி இருக்கிறோம். அதன் அடிப்படையில் எங்கள் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்" என்ற வாதத்தை முன் வைத்தார்.

தமிழக அரசின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஷேகர் நாப்தே, மத்திய அரசு காலம் தாழ்ந்து விளக்கம் கோருகிறது. கர்நாடக மாநில தேர்தலை முன்வைத்தே மத்திய அரசு கால அவகாசம் கோருகிறது. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

கர்நாடக அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மோகன் காதர்கி, , கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி என அனைத்து தரப்பும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டது. எந்த மாதிரியான ஸ்கீம் என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது என்றார்.

காலம் தாழ்ந்த மனு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "மத்திய அரசு மிகவும் காலம் தாழ்ந்து இந்த மனுவை போட்டு இருக்க வேண்டாம். உங்களுக்கு எங்கள் தீர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் முன்னதாகவே அணுகி இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் கடைசி நேரத்தில் மூன்று மாதகாலம் அவகாசம் கோருவது மிகவும் தவறு" என்று குறிப்பிட்டார்.

மேலும் நீதிபதி, காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு, எங்களது இறுதி தீர்ப்புடன் இணைந்துவிட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரைகளை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனால், நடுவர் மன்றம் கூறியவாறு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

காலதாமதம்

மத்திய அரசு மீண்டும் காலம் தாழ்த்த வாய்ப்பு இருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்தார் தமிழக அரசின் வழக்கறிஞர்.

இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மத்திய அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்கிறது, நாங்கள் அவ்வளவு அவகாசம் தரப்போவதில்லை, மே 3 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை அளிக்க வேண்டும். அதனை நாங்கள் பரிசீலித்து உத்தரவு வழங்குவோம். அதை அனைவரும் அமல்படுத்தியாக வேண்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

தொடரும் குழப்பம்

இன்னுமே `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை உச்சநீதிமன்றம் வழங்கவில்லை என்று உச்சநீதிமன்ற விவகாரங்களை கவனித்து வரும் செய்தியாளர் ஜெ. வெங்கடேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற விசாரணையில் பெரிய தெளிவு இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு மேலும் நீண்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Saturday 7 April 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 08/04/2018

நமதூர் மலாயத்தெரு பஷீர் அகமது அவர்களின் மகளார் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் 8/4/18 ஞாயிறு முற்பகல் 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது.

Wednesday 4 April 2018

வெளியூர் மௌத் அறிவிப்பு 04/04/2018

நமதூர் நடுத்தெரு வெ.ப.மு. அப்துல் வகாப் ,அப்துல் ரெஜாக் இவர்களின் சகோதரியும் ஹாஜா கமாலுதீன்,நூரூல் ஆமீன், முஹம்மது பைசல் முஹம்மது ஆரிப் முஹம்மது யூசுப் இவர்களின் தாயாருமான ஜவஹர் நிஷா அவர்கள் அடியக்கமங்கலம் புது ரோடு தனது இல்லத்தில் மௌத்.

வெளியூர் மௌத் அறிவிப்பு 4/4/18

நமதூர் தாஜ்பிராக்ஷா தெரு ம.மு.அப்துல் சலாம் அவர்களின் சம்பந்தியும்,நடுத்தெரு இ.மு.மு.குத்புதீன் அவர்களின் சிறிய மாமியாரும் ,புதுமனைத்தெரு  ச.மு.ஜமால்    முஹம்மது அவர்களின் சம்பந்தர் காதர் யூனுஸ் மற்றும் காதர் ஆஷிக் இவர்களின் தாயருமான கொலப்பி வீட்டு  ஹாஜியா பொன்னாச்சி என்கிற ஜாரியத்துன் நாச்சியா  அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தனது  இல்லத்தில் மௌத்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7:45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Monday 2 April 2018

திருவாரூர்-சென்னை புறவழிச்சாலையில் கம்பிவேலி அமைத்த விவசாயி


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவாரூர்-சென்னை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் நிலங்களை கையகப்படுத்தினர். அப்போது கருப்பூரை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் 22 ஆயிரம் சதுர அடி கையகப்படுத்தப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட இடத்தை விட 12 ஆயிரம் சதுர அடி இடத்தை கோபாலின் அனுமதியின்றி கூடுதலாக கையகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மீது மதுரை ஐகோர்ட்டில் கோபால் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, நெடுஞ்சாலைத்துறையினர் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கோபால் பயன்படுத்தி கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து கோபால் தனக்கு சொந்தமான இடத்தில் சாலையின் இருபுறமும் வேலி அமைத்தார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்போதைய தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் கோபாலிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்து வேலியை பிரித்தனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் கோபால் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, அனுமதியின்றி நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்திய நிலத்தை கோபால் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. அதனையடுத்து நேற்று காலை கிருஷ்ணாபுரத்தில் திருவாரூர்-சென்னை புறவழிச்சாலையின் இருபுறமும் உள்ள பிரிவு சாலையில் வாகனங்கள் செல்லமுடியாதபடி கம்பிவேலி அமைத்தும், மணல் மூட்டைகளை வரிசையாக வைத்தும் கோபால் அடைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் அதிகாரிகள் திரும்ப சென்றனர்.

எப்போதும் அதிக அளவில் வாகன போக்குவரத்து நடைபெறும் திருவாரூர்-சென்னை புறவழிச்சாலையில் கம்பிவேலி அமைத்து விவசாயி அடைத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sunday 1 April 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 01/04/2018

நமதூர் ஜெஹபர் அலி இறைச்சி கடை முன்னாள் ஊழியரும் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனார் செல்ல மரைக்கான் அவர்கள் திருவாரூர் நாலுகால் மண்டபம் புதுத்தெரு வில் மௌத்.

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

நமதூர் மௌத் அறிவிப்பு 01/04/2018(ஆசியா மரியம்)

நமதூர் ஜெயம் தெரு மேலவீட்டு மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும் முஹம்மது இக்பால்,முஹம்மது இத்ரிஸ், முஹம்மது இப்ராஹிம் ஆகியோர்களின் பாட்டியாருமான முத்துகனி என்கிற ஆசியா மரியம் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

நமதூர் மௌத் அறிவிப்பு 01/04/2018

நமதூர் வடக்குத்தெரு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் முஹம்மது அலி அவர்களின் தாயாருமான அஜீதா பீவி அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாசா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.