Friday 31 March 2023

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் அவர்களின் ஆழித்தேர் திருவிழா தொடர்பான அறிவிப்பு*

 


எதிர் வரும் 01.04.2023 அன்று திருவாரூர் மாவட்டம் அ/மி தியாகராஜர் கோவில் ஆழித்தேர் பாதுகாப்பு பணிக்கு 01 காவல் கண்காணிப்பாளர், 03 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 17 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 54 ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 1535 காவல் ஆளினர்கள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


📌தேரோட்டத்தின் போது  குற்றங்களை தடுக்க 10 குற்ற தடுப்பு அணிகள் (Crime Team) நியமிக்கப்பட்டுள்ளது.


📌போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், போக்குவரத்தை மாற்று பாதையில் செலுத்தவும் 200 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. கங்களாஞ்சேரி,

2. திருகண்ணமங்கை, 

3. E.B ஜங்ஷன், 

4. விளமல் புதுப்பாலம்,

5. ரயில்வே மேம்பாலம், 

6. சோழா தியேட்டர் சந்திப்பு, 

7. நியூ பாரத் பள்ளி, 

8. கொடிக்கால்பாளையம் ரோடு சந்திப்பு,

9. வாளைவாய்க்கால் சந்திப்பு


📌தேரோட்டத்தின் போது குற்ற செயல்களை கண்காணிக்கவும், கூட்டத்தை கண்காணிக்கவும் காவல்துறை சார்பில் CCTV, Drone Camera மற்றும் Mobile Camera-கள் ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.


📌மேலும் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக காவல்துறை சார்பில் கீழ்கண்ட இடங்களில் வாகனம் நிறுத்த போதுமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

2. ஆக்ஸ்போர்ட் பள்ளி,

3. தியாகராஜர் கல்வி நிறுவனம் எதிர்புறம்,

4. குமரன்கோவில் பின்புறம்,

5. நியூ பாரத் பள்ளி,

6. அம்மா உணவகம் எதிர்புறம்,

7. மார்க்கெட்டிங் கமிட்டி,

8. லெட்சுமி மஹால் வாகன நிறுத்தம்


📌 தேரோட்டத்திற்கு வரும் பெண் பக்தர்களிடம் ஏதேனும் திருட்டு செயல்கள் நடைபெறாமலிருக்க அதிகளவில் சாதாரண உடையில் ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


📌 தேரோட்டத்தின் போது கூட்டத்தை கண்காணிக்க கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.


📌 திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10 இருசக்கர வாகன ரோந்து மற்றும் 04 நான்கு சக்கர வாகன ரோந்து பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளது.


📌 தேரோடும் நான்கு வீதிகளிலும் காவல்துறை சார்பாக ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


📌 தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கு நகராட்சி சந்திப்பு, தென்றல் நகர் சந்திப்பு, கொடிக்கால்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

30.03.2023

Wednesday 29 March 2023

நமதூர் மௌத் அறிவிப்பு




29.03.2023


 #கொடிக்கால்பாளையம் காயிதே மில்லத்தெரு முஹம்மது ராஜா மற்றும் சிக்கந்தர் இவர்களின் தகப்பனாரும், அத்திக்கடையை சேர்ந்த அசன் அலி அவர்களின் மாமனாரும் ஆகிய TV காரர் என்று அழைக்கப்படும் சைய்யது ரஹ்மான் பாய்  அவர்கள் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அண்ணாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 3 மணிக்கு மேலத்தெரு அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday 24 March 2023

நமதூர் மௌத் அறிவிப்பு



24.03.2023


#கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு தாடி வீட்டு மர்ஹூம் V.M அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும்  மர்ஹூம் 

V.M.A ஹாஜா மெய்தீன் 

அவர்களின் மனைவியும் 

 H சலாவுதீன் (பாபு)

 H தமீஜூதீன் 

அவர்களின் தாயாருமான

தங்கம்மா என்கிற ரமேஜா  பேகம் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.